ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகிறது. அப்போதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னதிக்குச் சென்று வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்கிறோம்.
வளம் தரும் புரட்டாசி சனிக்கிழமை: ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகிறது. அப்போதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னதிக்குச் சென்று வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்கிறோம். சனி பிடிக்காத தெய்வம் என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமானையும் விடாது வழிபட்டு வருவோம். மற்ற சனிக்கிழமைகளை காட்டிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை புனிதமான சனிக்கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய தினம் விரதமிருந்து விஷ்ணுவை நாம் வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்று சாஸ்திரம் சொல்கிறது. செட்டிநாட்டு பகுதிகளில் ராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து, வீடுகளில் ராமாயணம் படிப்பது வழக்கம். கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கிறார்கள். படித்ததை கேட்டவர்களுக்கெல்லாம். ராமபிரானின் அருளும் கிடைக்கும். வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கும். எனவே புரட்டாசி சனிக்கிழமை விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்வது உத்தமம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி வன்புகழ் நாராயண சுவாமி, புதுக்கோட்டை மாவட்டம் செவ்வூரில் உள்ள ரோட்டுப் பெருமாள் கோவில், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் உள்ள கூடல் அழகிய பெருமாள் கோவில், மிதவைப்பட்டி விஷ்ணு ஆலயத்திற்கும் சென்று வழிபட்டால் பொன்னான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : வளம் தரும் புரட்டாசி சனிக்கிழமை - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Prosperous Puratasi Saturday. - Spiritual Notes in Tamil [ spirituality ]