பூசணி தீபம்

பைரவர் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Pumpkin lamp - Bhairava - Spiritual notes in Tamil

பூசணி தீபம் | Pumpkin lamp

எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடுவதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

பூசணி தீபம்


எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடுவதைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், சாம்பல் பூசணியில் விளக்கு ஏற்றி வழிபடுவது குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 


தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள ஸ்ரீதட்சிண காசி காலபைரவர் கோயிலில் வழிபாடு இப்படித்தான் நடக்கிறது.


சரித்திரத்தில் சாகா வரம் பெற்ற மன்னன் அதியமான் கட்டிய இந்தக் கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக இங்கு இருக்கும் கால பைரவர் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருக்கு தனி சந்நிதி உள்ளது.


இக்கோயிலில் சிவனின் திருவுருவில் பன்னிரண்டு ராசிகளும் இருபத்தேழு நட்சத்திரங்களும் நவக்கிரகங்களும் உள்ளன.


இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் சாம்பல் பூசணியில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு வேப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்புத்திரி போட்டு விளக்கேற்றி செய்கின்றனர்.


வழக்கில் வெற்றி, எதிரிகள் விலகல், இழந்த சொத்து மீட்பது. வேலை கிடைத்தல், தீராத நோய் தீரல், பயம் விலகல் மற்றும் அனைத்துக் காரிய வெற்றி பெற இந்த சாம்பல் பூசணி பூஜை செய்யப்படுவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பூசணி தீபம் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Pumpkin lamp - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]