புதுச்சேரி மாநிலம், முத்துப்பிள்ளைப் பாளையம் ராதா நகரில் அருள்புரியும் நாகமுத்து மாரியம்மன், பூசணிக்கொடி மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் மாரியம்மன் கோயில்கள் இருக்கின்றன.
பூசணிக்கொடி மாரியம்மன்!
புதுச்சேரி மாநிலம், முத்துப்பிள்ளைப் பாளையம் ராதா நகரில்
அருள்புரியும் நாகமுத்து மாரியம்மன், பூசணிக்கொடி மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும்
மாரியம்மன் கோயில்கள் இருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியைச்
சேர்ந்த ஒருவர் தன் நிலத்தில் பூசணிக்காய் பயிர் செய்தார். ஒருநாள் பூசணிக்கொடி, எந்தப் பற்றுதலும் இன்றி மேல்நோக்கி
உயரமாக எழுந்து நின்றது. அந்த அதிசயத்தைப் பக்தர்கள் பரவசத்தோடு பார்த்து அதிசயித்தனர்.
அப்போது ஒரு சிறுமி மூலம், மாரியம்மனுக்கு
ஒரு ஆலயம் அமைத்து வழிபட அருள்வாக்கு உண்டாயிற்று! அதன்படியே கருவறை கருங்கல்லிலேயே
அமைக்கப்பட்டு ஆலயமும் உருவாக்கப்பட்டது. கருவறையில் நாகம் குடைபிடிக்க, பின்புறம் அக்னி ஜுவாலை ஒளிர, புன்முறுவல் பூத்த அன்னையின் சுதை உருவமும்
அமைக்கப்பட்டு வண்ணமயமாகக் கோவில் எழுந்தது.
ஆடிமாத செடல் விழா, ஆடிப்பூரத் திருவிழா போன்றவை இங்கே
வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. வித்தியாசமான பெயர் அமைந்த இந்த மாரியைத் தரிசிப்பவர்களுக்கு, வேண்டுவனவற்றை வேண்டியவாறே இவள் அருள்வதாகச்
சொல்கிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : பூசணிக்கொடி மாரியம்மன்! - நாகமுத்து மாரியம்மன் [ அம்மன் ] | Amman: History : Pusanikodi Mariamman! - Nagamuthu Mariamman in Tamil [ Amman ]