ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது .....
புஷ்பக விமானம்
ராமாயணத்தில் புஷ்பக
விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து
வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது .....
ஹம்பி ( கர்நாடகா ), லெப்பாக்ஷி ( ஆந்திரா )
வழியாக தன் தலைநகரை அடைந்தான் ....
இதில் பெரிய வேடிக்கை
என்னவென்றால் Nasik,
Hampi, Lepaxi and SriLanka இன்றய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில்
இருக்கிறது.
தங்கள் வனவாச காலத்தில்
நாசிக் அருகில் இருந்த பஞ்சவடி என்ற இடத்தில் ராமர், லெட்சுமணன், சீதை இருந்தனர்.
அங்கு அவர்கள் இருந்த
காலத்தில் தன்னை மணக்கச்சொன்ன சூர்ப்பனகை மூக்கை வெட்டிவிடுகிறான் லெட்சுமணன்.
அதன் காரணமாக நாசிக் (
ஹிந்தியில் நாஸி என்றால் மூக்கு ) என்று அந்த ஊர் பெயர் வர காரணமானது .
ரிஷ்யாமுக் பர்வதம் ( Hampi அருகில் ) ஹனுமன்
மற்றும் அவரது வானர கூட்டாளிகள் கூட்டமாக இருந்ததை பார்த்த சீதை தனது நகைகளை
கழற்றி துணியில் சுற்றி எரிகிறாள்.
இதைத்தான் கம்பர்
கம்பராமாயணத்தில் அழகாக வர்ணித்திருப்பார் ....
"அணியும் வகை
தெரியாமல் வானரங்கள் இடுப்பிற்கு உள்ளதை ( ஒட்டியாணம் ) கழுத்துக்கும் ....
எழில் கழுத்துக்கு
உரியதை இடுப்புக்கும் ...
காதுக்கு அணியவேண்டியதை
மூக்கிற்கும் ...
மூக்கில் அணியும்
மூக்குத்தியை காதுக்கும் மாட்டிக்கொண்டு அலைந்தன என்று .....
அடுத்ததாக பறவை அரசன்
ஜடாயு ராவணனுடன் நடுவானில் போரிட்டு ராவணனின் வாளுக்கு இரையாகி கீழே விழுகிறார்.
சீதாதேவி , " ஹை பக்ஷி " என்று
வருந்தி அழைத்த இடமே இன்றய ஆந்திராவின் லெப்பக்ஷி என்ற இடம்.
சீதாப்பிராட்டியைக்
காப்பாற்ற இராவணனுடன் போராடிய ஜடாயுவை இராவணன் தனது வாளால் தாக்கி இறக்கைகளை
வெட்டி வீழ்த்தினான்.உயிருக்குப் போராடிய ஜடாயுவை, தம்பியுடன் சீதையைத் தேடிவந்த இராமபிரான் பார்த்து, ஜடாயுவின் தலையை மடியில்
வைத்து "லே பக்ஷ்சி (பறவையே எழுந்திரு!) என்று மயக்கம் தெளிவித்து , தான் யார் என்று கூறி
ஜடாவின் நிலைக்குக் காரணம் கேட்டார். ஜடாயு இராவணன் சீதையை புஷ்பக விமானத்தில்
கடத்திச் செல்வதைக் கூறியபின் உயிர் துறக்க, ஜடாயு வுக்கு இறுதிக் காரியங்களை முடித்து, பின் இராமர் தேடலைத்
தொடர்ந்ததாக இதிகாசம் கூறுகிறது!
ராமாயண கதையை இன்று
மேடையில் கலாட்சேபம் செய்யும் பெரியவர்கள் கதையை எழுதிய வால்மிகி இலங்கையில்
இருந்து நாசிக்கிற்கு அல்லது நாசிக்கில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் பறந்ததாக சொல்லவில்லை.
வால்மீகியால் சொல்லப்பட்ட அத்தனை ஊர்களும் ஒரே
நேர்கோட்டில் இருக்கிறது ....
ராமாயணத்தில்
சொல்லப்பட்ட அத்தனையும் உண்மை!✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
இராமாயணம்: குறிப்புகள் : புஷ்பக விமானம் - குறிப்புகள் [ ] | Ramayana: Notes : Pushpaka flight - Tips in Tamil [ ]