ராமேஸ்வரம் ராமநாதர் திருத்தலத்தில் மாசி மாதம் பெரிய திருவிழா நடைபெறும்.
ராமேஸ்வரத் திருவிழா!
ராமேஸ்வரம் ராமநாதர் திருத்தலத்தில்
மாசி மாதம் பெரிய திருவிழா நடைபெறும். அப்போது புராண சம்பவங்களைக் காட்சியாக்கி இறை
உணர்வை ஊட்டுகிறார்கள்.
ஓர் உதாரணம்: ஏழாம்நாள் திருவிழாவில் நடராஜர் திருநடனக்
காட்சி இடம் பெறும். அச்சமயம் நடராஜரின் கணையாழி காணாமல் போவதாகப் பாவனை செய்யப்படும்.
அதனால் சிவகாமியன்னை ஊடல் கொள்ளுவார். இருவருக்கும் இடையில் சுந்தரமூர்த்தி நாயனார் தூது
செல்லும் படலம் நடைபெறும். பின் ஊடல் தீர்ந்து அம்மையப்பர் திருநடனம் நடக்கும். இக்காட்சியைக்
கண்டு ஆனந்திக்க ஆயிரக்கணக்கானோர் குழுமியிருப்பர்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ராமேஸ்வரத் திருவிழா! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Rameswaram Festival! - Tips in Tamil [ spirituality ]