பூரி ஜெகநாதர் கோவில் அபூர்வ அதிசயங்கள்:

* பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஏன் பறவைகள் பறப்பதில்லை
என்பது இதுவரை எவருக்கும் புலப்படா, அறியப்படாத அமானுஷ்யமாகும்....!! என்பதை -
விளக்கும் எளிய கதை *
” பூரி ஒரு கடற்கரை நகரம். இது ஒரிசா மாநிலத்தில் 12ம் நூற்றாண்டு
காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்தக் கோவிலில் மூலவர் பாலபத்ரா, அவரின்
தமையர் ஜெகந்த்நாதர். தமக்கை தேவி சுபத்ரா யுடன் காட்சி அளிக்கிறார்கள்.
ஆண்டுதோறும் 1௦ நாட்கள் தேர் திருவிழா நடைபெறும் போது மக்கள் லட்சக் கணக்கில் குவிகிறார்கள்.
இது கோனார்க் சூரிய கோவிலில் இருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் தான் இருக்கிறது.
”பூரி ஜெகநாதர் கோவிலில்
இருக்கின்ற மடப்பள்ளி தான் உலகத்திலேயே மிகப்
பெரிய பெரிய மடப்பள்ளியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த கோவிலில் சமைக்கின்ற பிரசாதங்கள் எப்போதும் ஒரே மாதிரியான
அளவில் தான் இருக்கும்
என்பதே ஒரு அதிசயம் ஆகும். ஆனால், பக்தர்களின் வருகை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும்
பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை; அது போல மீதமும் ஆவதில்லை. *இந்த அதிசயம் யாருக்கும்
விளங்கவில்லை*.
இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி
பார்ப்பது போலவே காட்சி அளிக்கும். எப்படி எந்த கோணத்தில் பார்த்தாலும்
ஒரே மாதிரியான தோற்றம் போலக் காட்சி அளிக்கும். *அப்படி ஏன் தெரிகிறது
என்பதே யாருக்கும் இப்போது வரை புரியா விசயமாகவே தென்படுகிறது. அதுவும் ஏன் என்று
தெரியவில்லை.
அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு
இருக்கும். *உயரம் 214 அடி*. எந்தவித மழை அடித்தாலும், குளிர் ஆட்டினாலும், வெயில் எப்படி அடித்தாலும், அப்படி எது நடந்தாலும் மூன்று பேர் கொண்ட ஒரு
குழு எந்தவித கஷ்டமும் இல்லமால் உச்சிக்குச் சென்று தினமும் கொடி ஏற்றி
வருவர்.
இது சாதரணக்கொடி அல்ல, ஏன்
என்றால் இந்த கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ, அதற்கு எதிர் திசையில் பறக்கும். *அது ஏன் என்று இன்று
வரை மிகப்பெரிய விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை*.
இந்த ஜகன்நாதர் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும்
தரையில் படுவதில்லை.
இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ பறப்பதில்லை.
சாதாரணமாக பறவைகள் கோவில் கோபுரங்களில் கூடு கட்டி வாழும், பல பறவைகள் கோவில் கோபுரத்தில் அமரும், ஆனால் இந்த கோவிலில் எதிர்மறையாக ஒரு பறவையை கூட பார்க்க
முடியாது. இன்னும் ஏன் எந்தப் பறவைகளும் கோபுரத்தில்
அமரக் கூட செய்யாது என்பது ஒரு விந்தையிலும் விந்தை தான். *அப்படி
ஏன் பூரி ஜெகநாதர் கோவிலில் பறவைகள் பறப்பதில்லை
என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்*.
அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கே சவாலாக அமைகிறது.
கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும், கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின்
சத்தம் கேட்பதில்லை.
மடப்பள்ளியில் இன்று வரை விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளை கொண்டு தான் சமைக்கிறார்கள். இந்த மண்
பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி
கடைசியாகவும் மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும் வேகும். இது எப்படி
சாத்தியம் என்றால் பதில் அந்த ஜகன்னதருக்கு தான் தெரியும்*.
இங்கே தேர் திருவிழா நடக்கும்.
அப்போது பூரி மன்னர் வகையினர் தங்கத் துடைப்பம் உதவியுடன் தெருவை சுத்தம்
செய்கிறார்கள் என்பதும் ஒரு வித ஆச்சிர்யத்தை கொடுக்கத் தான் செய்கிறது. புதியதாகவே
அடிக்கடி தேர் செய்கிறார்கள் என்பதும் ஒரு வித வியப்பூட்டும் செயல் தான்.
இறைவனின் ஆற்றல் என்பது எந்த விதத்தில் எப்படி இருக்கும்
என்று யாருக்கும் தெரியாது என்பதே இந்தக் கதையின் ஆழ்ந்த அர்த்தம் ஆகும்.
*ஜெய் ஜகன்னதா ஜெய்..
ஜெய் ஜகன்னதா*
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம்.
- தமிழர் நலம்