ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ இவ்வளவு வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே? கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது .
தன்னம்பிக்கை கதை படிங்க ... நம்பிக்கை அதிகரிக்கும்...
ஒரு ஊரில் ஒரு காக்கா
இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை..
அது கொக்கை பார்த்து
சொல்லிச்சாம். நீ இவ்வளவு வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே? கருப்பா இருக்கும் என்னை
எனக்கு பிடிக்கலை என்றது .
கொக்கு சொன்னது, நானும் அப்படித்தான்
நினைத்தேன்,
கிளியை பார்க்கும் வரை.
அது இரண்டு நிறங்களில்
எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது .
காகமும் கிளியிடம்
சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாகத்தான்
இருந்தேன். ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது.
உடனே காகமும் மயில்
இருக்கும் ஒரு மிருக காட்சி சாலைக்கு சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான
ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று .
அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர்
.. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் .
என்னை பொறுத்தவரை
உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது .
மயில் சொன்னது. அன்பு
காகமே , நான் எப்பவும் நினைத்து
கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று .
ஆனால் எனது இந்த அழகு
தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது .
இந்த மிருக காட்சி சாலை
முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை ..
எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக
சுற்றி வரலாமே ,
என்றது .
இதுதான் நமது
பிரச்சினையும் ...
நாம் தேவை இல்லாமல்
நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம். இயற்கையில் மாற்ற
இயலாதவற்றை எண்ணி
துயரடைகிறோம்.
நாம் எப்பவும் இறைவன்
கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை. அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை. இது
நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது
மாற்றம் என்பது இல்லாமல்
வாழ்வில் முன்னேற்றம் பெற முடியாது
உன்னுடைய எண்ணங்கள்
மாற்றம் பெற வேண்டும்!
உன்னுடைய சிந்தனைகள்
மாற்றம் பெற வேண்டும்!
உன்னுடைய அணுகுமுறை
மாற்றம் பெற வேண்டும்!
உன்னுடைய பார்வையில்
மாற்றம் பெற வேண்டும்!
உன்னுடைய முயற்சிகளில்
மாற்றம் பெற வேண்டும்!
உன்னுடைய வார்த்தைகள்
மாற்றம் பெற வேண்டும்!
உன்னுடைய தேடல்களில்
மாற்றம் பெற வேண்டும்!
இன்னும் நம்மில்
இத்யாதி.. இத்யாதி.. மாற்றம் தேவை கண்டு தெளியுங்கள்!
🍂 தீப்பெட்டியில் தீக்குச்சிகள் நிறைய இருக்கும் போது
பற்ற வைக்கும் முறையில்
பக்குவம் இருக்காது🍂
🍂 ஒற்றை தீக்குச்சி
மட்டும் இருந்தால்
காற்றைக் கூட அடக்கி
பற்ற வைக்கும் நிதானம்
இருக்கும்🍂
🍂 இது போல் வாழ்வில் சிலவற்றை விரைவில் அடைந்து விடுவோம்🍂
🍂 சிலவற்றை அடைய கால தாமதம் ஆகலாம்
சிலவற்றை அடைய
முடியாமலேயே
கூட ஆகலாம்🍂
🍂 ஆகவே தோற்ற அனுபவங்களை எல்லாம்
நிதானத்தோடு நினைத்துப்
பார்🍂
🍂இது அனைவருக்கும் பொருந்தும்
அனைத்தும் நிறைந்தது
தான் வாழ்க்கை🍂
🍂 திறமை இருந்தால்
ஒருமுறை வெல்லலாம்🍂
🍂 பொறுமை இருந்தால்
ஒவ்வொரு முறையும்
வெல்லலாம்🍂
🍂 திறமையோடு கூடிய
பொறுமையைக்
கற்றுக் கொள்🍂
🍂உன்னை வீழ்த்த ஒருவரும்
இல்லை இவ்வுலகில்🍂
🍂 முயன்று பாருங்கள் முடியாது என்று எதுவும் இல்லை👍
💢 தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
💢 ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~~~~~~~~~~~~~
💢 ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு
💢 100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
~~~~~~~~~~~~~~~~~~
💢 1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு
💢 3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~~~~~~~~~~~~~
💢 பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை
💢 வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~
💢 மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்
💢 புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~
💢 பொழுது போக்க முதல் வரிசை
💢 கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
~~~~~~~~~~~~~~~~~~~
💢 அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை
💢 இருபது நிமிட தியானம் கசக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
💢 மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு
💢 செல் போணை தோய்வில்லாமல் தேய்ப்பு!
❗❗❗❗
🌿 நம் வாழ்வில் முதல் அடிஎடுத்து
வைக்கும்போது
எதிர்ப்பு வரும்🌿
🌿 அடுத்த அடிவைக்கும்போது
துணிச்சல் வரும் 🌿
🌿 தொடர்ந்து அடிவைக்கும்போது
தூரம் குறையும் 🌿
🌿 நடந்ததூரம் நிறையும்போது
நம்பிக்கை பிறக்கும் 🌿
🌿 இதுதான்யா வாழ்க்கை
எனக்குத் தெரிந்தது🌿
🌿 இறங்கிப்பார் வாழ்க்கை
சவால் நிறைந்தது🌿
🌿 நீங்கள் முன்னால் எடுத்து வைக்கும்🌿
🌿 ஒவ்வொரு அடியையும் நீங்களே பாராட்டிக்
கொளுங்கள்🌿
🌿 இன்றைய சிறு முயற்சிகள் தான்🌿
🌿 நாளைய பெரு வெற்றியைக் கொண்டு வந்து தரும்🌿
🌿 உங்களின்மீதுள்ள நம்பிக்கை வீண்போகாதவரை🌿
🌿 எத்துனை கைகள் உங்களை தள்ளிவிட்டாலும்
உங்களால்
தானாக எழுந்து நடக்க
முடியும்🌿
🌿 நம்பிக்கையோடு முன்னோக்கிச் செல்லுங்கள்🌿
🌿 உங்கள் கனவுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன👍
💥 வலிமை உள்ளபோதே சேமிக்கப் பழகுங்கள் கடைசியில் உங்களுக்கு கொடுத்து உதவ யாரும் வரமாட்டார்கள்🌺
💥 யாரும் உங்கள் கண்ணீரைப் பார்ப்பதில்லை🌺
💥 யாரும் உங்கள் கவலைகளைப் பார்ப்பதில்லை🌺
💥 யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை🌺
💥 ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்🌺
💥 அது மனிதனின் இயல்பு🌺
💥 மற்றவர்களை போல் நாமும் வாழ வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை🌺
💥 ஆனால் ஒரு ஒருவரின் குணாதிசயங்கள் இங்கு வெவ்வேறு🌺
💥 மற்றவர்களிடம் இருந்து நீங்கள் கற்ற
நல்ல பாடங்களை🌺
💥 நீங்களும் பின்பற்றி நற் செயல்கள் செய்ய தொடங்கினால் வெற்றி உங்கள் அருகில்🌺
💥 சுமைகளைக் கண்டு பயந்து விடாதே🌺
💥 முயற்சியோடு முன்னேறிச் செல்லுங்கள்🌺
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை கதை படிங்க ... நம்பிக்கை அதிகரிக்கும்... - முரண்பாடுகள் [ ] | self confidence : Read the self-confidence story ... confidence will increase ... - Contradictions in Tamil [ ]