கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Recite this kamakshi mantra to get rid of debt - Notes in Tamil

கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள் | Recite this kamakshi mantra to get rid of debt

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும். விரைவில், சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் வாழ்வார்கள் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள். மூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது. ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம் ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்! பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.

🌹 கடன் தொல்லை தீர வேண்டுமா? இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள்🌹

 

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும்.

 

விரைவில், சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் வாழ்வார்கள் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

 

மூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது.

 

ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்

 

ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா

 

த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி

 

ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

 

அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது.

 

திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்!

 

பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.

 

செல்வம், கல்வி கேள்வி என வித்தை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவை கிடைக்கவில்லையே என வருந்தும் பக்தர்கள், இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது உறுதி!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Recite this kamakshi mantra to get rid of debt - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்