சிவபெருமானுக்குரிய வைகாசி மாத ரிஷப விரதம் பற்றிய பதிவுகள்

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Records of Rishabha Vrat of Vaikasi month dedicated to Lord Shiva - Spiritual Notes in Tamil

சிவபெருமானுக்குரிய வைகாசி மாத ரிஷப விரதம் பற்றிய பதிவுகள் | Records of Rishabha Vrat of Vaikasi month dedicated to Lord Shiva

சிவபெருமானுக்குரிய வைகாசி மாத ரிஷப விரதம் பற்றிய பதிவுகள் சிவபெருமானை வணங்கும் "ரிஷப விரதம்" குறித்தும், அவ்விரதத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம் ரிஷப விரதம் என்பது சிவபெருமானின் வாகனமாக இருப்பவரும், அவரின் முக்கிய தொண்டராக இருக்கும் ரிஷபமாகிய நந்திதேவர் மற்றும் சிவபெருமான் ரிஷபம் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான காலகட்டம் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதமாகும் வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது ரிஷப விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் எழுந்ததும் மனதிற்குள் நந்தி மீது வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும் பின்பு குளித்து முடித்ததும், உணவு ஏதும் உண்ணாமல் உங்களிடம் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய அளவு ரிஷப விக்ரகம் அல்லது ஸ்படிக லிங்கம் இருந்தால், உங்கள் பூஜையறையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, சிவனுக்கு பிடித்த அரிசி கொண்டு செய்யபட்ட அன்னங்கள் மற்றும் பாயசத்தை நைவேத்தியமாக வைத்து சிவமந்திரங்களை துதித்து வழிபட வேண்டும் உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்*

சிவபெருமானுக்குரிய வைகாசி மாத ரிஷப விரதம் பற்றிய பதிவுகள்

 

சிவபெருமானை வணங்கும் "ரிஷப விரதம்" குறித்தும், அவ்விரதத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்

 

ரிஷப விரதம் என்பது சிவபெருமானின் வாகனமாக இருப்பவரும், அவரின் முக்கிய தொண்டராக இருக்கும் ரிஷபமாகிய நந்திதேவர் மற்றும் சிவபெருமான் ரிஷபம் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது

 

இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான காலகட்டம் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதமாகும்

 

வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது

 

ரிஷப விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் எழுந்ததும் மனதிற்குள் நந்தி மீது வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும்

 

பின்பு குளித்து முடித்ததும், உணவு ஏதும் உண்ணாமல் உங்களிடம் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய அளவு ரிஷப விக்ரகம் அல்லது ஸ்படிக லிங்கம் இருந்தால், உங்கள் பூஜையறையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, சிவனுக்கு பிடித்த அரிசி கொண்டு செய்யபட்ட அன்னங்கள் மற்றும் பாயசத்தை நைவேத்தியமாக வைத்து சிவமந்திரங்களை துதித்து வழிபட வேண்டும் உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்*

 

வைகாசி வளர்பிறை அஷ்டமியில் ரிஷபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்

 

இந்த விரதம்  கடைபிடித்தால் வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது*

 

இந்த விரதத்தினால் வாகனயோகம் அடையலாம் புதிய வாகனம் வாங்குவோர் அல்லது பதிவு செய்வோர்க்கு நற்பலன் உண்டு.ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து இந்திரன் ஐராவத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணம் கூறுகின்றது

 

இத்தினத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்குப் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டாகும்‌

 

பின்பு உங்களால் முடிந்த அளவிற்கு அக்கோயில்களில் சிவனடியார்களுக்கும் இன்ன பிற பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து அந்த பக்தர்களுடன் சேர்ந்து நீங்களும் பிரசாதங்களை சாப்பிட வேண்டும் பிறகு சிவ சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்பி, சிவனை வழிபட்டு இரவு உணவாக பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு ரிஷப விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

 

 ரிஷப விரதம் பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன

 

ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும் அனைத்து நியாயமான ஆசைகளும் பூர்த்தியாகும், அஷ்ட யோகம் ஏற்படும் சிவயோகி ஆகவும் கூடும் அஷ்டதிக் பாலகர்கள், கருட பகவான் போன்றோர்கள் இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டித்து சிவனிடம் பல வரங்களை பெற்றனர்

 

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்

 

ஓம் நமசிவாய

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : சிவபெருமானுக்குரிய வைகாசி மாத ரிஷப விரதம் பற்றிய பதிவுகள் - ஆன்மீக குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : Records of Rishabha Vrat of Vaikasi month dedicated to Lord Shiva - Spiritual Notes in Tamil [ ]