ரிலாக்ஸ் ப்ளீஸ்..!! சிரிக்கலாம் வாங்க..!!

துணுக்குகள்

[ நகைச்சுவை ]

relax please..!! Let's laugh..!! - Fragments in Tamil

ரிலாக்ஸ் ப்ளீஸ்..!! சிரிக்கலாம் வாங்க..!! | relax please..!! Let's laugh..!!

மனைவி : நான் ரெண்டு மணி நேரம் வெளில போறேன்.. உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா? கணவன் : இல்ல... இதுவே போதும்..

ரிலாக்ஸ் ப்ளீஸ்..!! சிரிக்கலாம் வாங்க..!!

மனைவி : நான் ரெண்டு மணி நேரம் வெளில போறேன்.. உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா?

கணவன் : இல்ல... இதுவே போதும்..

மனைவி : 😡😡

 

கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட மட்டும் நீ காரணமேயில்லாம எப்பப் பாத்தாலும் சண்டை போடுறியாமே. ஏன்?

மனைவி : நான் என்ன செய்யுறது? அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

கணவன் : 😠😠

 

அன்பு..!!

 

💖 துறவி ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களைத் தூக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறி கொண்டிருந்தார்.

 

💖 அந்த மலையோ மிகவும் செங்குத்தான மலை. எனவே, மேலே ஏற ஏற சுமை அதிகமாகி அவருக்கு மூச்சு வாங்கத் துவங்கியது.

 

💖 சற்று தூரம் சென்றதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயதுத் தம்பியைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாக பாடல் பாடிக் கொண்டு மிகச் சாதாரணமாய் மலை உச்சியை நோக்கிப் போவதைப் பார்த்தார்.

 

💖 அதை பார்த்ததும் துறவிக்கோ மிக ஆச்சரியமாக இருந்தது. உடனே, அவர் அந்த சிறுமியைப் பார்த்து என்னம்மா... இவ்வளவு சிறிய பையைத் தூக்கிக் கொண்டே என்னால் மலை ஏற முடியவில்லை... உன்னால் எப்படி இவ்வளவு பெரியவனைத் தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது? என்று கேட்டார்.

 

💖 அதற்கு அந்தச் சிறுமி ஐயா.. நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை... ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை.. என்று கூறிவிட்டு சாதாரணமாக சென்றுவிட்டாள். அப்பொழுது அந்த துறவிக்குப் புரிந்தது.. அன்பு எதையும் சுமக்கும் என்று.

 

கருத்து : உண்மையான அன்பு இருந்தால் எந்த தடைகளையும் சாதாரணமாக கடந்துவிட முடியும்...!!

 

வாழ்க்கை..!!

 

🌟 வாழ்க்கை ஒரு சவால் - அதனை சந்தியுங்கள்.

 

🌟 வாழ்க்கை ஒரு பரிசு - அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

 

🌟 வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் - அதனை மேற்கொள்ளுங்கள்.

 

🌟 வாழ்க்கை ஒரு சோகம் - அதனை கடந்து வாருங்கள்.

 

🌟 வாழ்க்கை ஒரு பாடல் - அதனை பாடுங்கள்.

 

தத்துவ காமெடி..!!

 

💥 லஞ்ச் bag-ல லஞ்ச் எடுத்துட்டு போலாம்..

 

ஆனா school bag-school-அ எடுத்துட்டு போக முடியுமா?

 

💥 Chairman chair மேல உட்காரலாம்..

 

ஆனா watchman watch மேல உட்கார முடியுமா?

 

💥 Key board-key இருக்கும்..

 

ஆனா motherboard-mother இருக்க முடியாது.

 

💥 என்னதான் நாகப்பாம்பு அட்டகாசமா படம் எடுத்தாலும்..

 

அத தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?

 

💥 என்னதான் நெருப்பு கோழியா இருந்தாலும்..

 

அதால அவிச்ச முட்ட போட முடியுமா?

நீங்கள் எவ்வளவு தான்

நல்லவனாக வாழ்ந்தாலும்.....

 

பத்துப் பேரில் இருவருக்கு

உங்களைப் பற்றி

தவறான அபிப்ராயங்கள்

தான் இருக்கும்.....!!!!

 

அவர்களுக்காக உங்களுடைய தனிமையிலிருந்து

என்றுமே மாறி விடாதீர்கள்....!!!!!

 

தினமும் காலை புதிதாய்

பிறக்கிறோம்.....

சிறிது நேரத்தில்

நான் இப்படித்தான் என்று.....

 

அவரவர் ஆடைகளை

(கோபம், பொறாமை, ஆணவம் )

அணிந்து கொள்கிறோம்.....!!!!

 

துன்ப காலங்களில்

அழுதல் மட்டுமே வழியா.?..

 

சிரித்துக் கொண்டே

நகர்வதும் வழி தான்....!!!

.

சாவின் விளிம்பு வரை

சென்றவர்கள்.....

வேண்டாத தெய்வங்களே

இல்லை......

 

துன்பத்தின் விளிம்பு வரை

சென்றவர்கள்......

திட்டாத தெய்வங்களே

இல்லை....!!!!!

 

வெற்றி பெற்றுள்ள

சாதனையாளர்களின்

வெற்றிக்குக் காரணங்கள்....

 

தன்னம்பிக்கையும்,

நேர்மையான வழியும் தான்....!!!!!

 

வெற்றிக்கு குறுக்கு வழி

கிடையாது......!!!!?

 

உங்கள் சாப்பாட்டைக்

குறை கூறும்முன்....

 

சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள்......!!!!

 

புதிய முயற்சியில் ஈடுபடும்போது அதிகக்கவனம் செலுத்த

வேண்டும்......

 

தற்போதைய சூழல்

முற்றிலும் வித்தியாசமானது.......!!!!!

 

எதற்கும் அஞ்சாதே.....

எதையும் வெறுக்காதே.....

யாரையும் ஒதுக்காதே....

 

உன் பணியை ஊக்கத்துடன்

செய்.....

நல்லது நடக்கும்.....!!!!!

 

ரகசியங்கள்

புனிதமானவை....

 

காரணம்....

 

உண்மைகள் மட்டுமே

ரகசியம் ஆகின்றன....!!!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

நகைச்சுவை : ரிலாக்ஸ் ப்ளீஸ்..!! சிரிக்கலாம் வாங்க..!! - துணுக்குகள் [ ] | Comedy : relax please..!! Let's laugh..!! - Fragments in Tamil [ ]