முன்னோர் சாபம் நீக்க பரிகாரம்

குறிப்புகள்

[ ஜோதிடம் ]

Remedy to remove ancestral curse - Notes in Tamil

முன்னோர் சாபம் நீக்க பரிகாரம் | Remedy to remove ancestral curse

பாவங்கள் செய்யாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூட சில நல்ல மனிதர்களை கூட பாவங்கள் செய்ய வைத்துவிடுகிறது. சற்று வசதிகள் வந்தவுடன் செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய உள்மனது துடிக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கும் மனவளம் குன்றியவர்களையும் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும் என சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது. பாவங்கள் செய்யாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூட சில நல்ல மனிதர்களை கூட பாவங்கள் செய்ய வைத்துவிடுகிறது. சற்று வசதிகள் வந்தவுடன் செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய உள்மனது துடிக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கும் மனவளம் குன்றியவர்களையும் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும் என சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது. இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.

முன்னோர் சாபம் நீக்க பரிகாரம்!

 

பாவங்கள் செய்யாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூட சில நல்ல மனிதர்களை கூட பாவங்கள் செய்ய வைத்துவிடுகிறது.

 

சற்று வசதிகள் வந்தவுடன் செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய உள்மனது துடிக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது.

 

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கும் மனவளம் குன்றியவர்களையும் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும் என சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.

 

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.

 

இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.

 

முன்னோர்கள் சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாவங்களின் தீய விளைவுகள் தீர மந்திரம்

 

காலைக்கடன்களை முடித்துக் குளித்தபின் ஈர வஸ்திரத்துடன் சூரியனை நோக்கி கைகூப்பி நின்று கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

 

மந்திரம்:

 

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்

சஹசிவ சூரியாய

வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

 

இதை ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று செய்ய ஆரம்பிப்பது சிறப்பு.

 

முடியவில்லையெனில் ஏதேனும் ஒரு அமாவாசை அன்று ஆரம்பம் செய்யவும்.பின் இயன்ற வரை ஞாயிறு தோறும் செய்துவர பூர்வ ஜன்ம பாவங்கள் தீரும்,

 

சுப காரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடி வரும். இதை தொடர்ந்து செய்து வர முன்னோர் சாபம் நீங்கி வாழ்வில் மங்களமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கும்.

 மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

முற்பிறவி கர்மம்,நம் முன்னோர்கள் செய்த கர்மம்(பாவம்) தீர

 

ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் குரு ஓரையில் சித்தர்கள், மகான்கள், துறவிகளின் ஜீவ சமாதிகள், சதுரகிரி மலைப்பகுதி,சதுரகிரியின் கோவில் சன்னதி, திரு அண்ணாமலையின் கோவில்பகுதி, திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்களின் சன்னதிகளில் அமர்ந்து கீழ்கண்ட மந்திரத்தை 90 நிமிடங்கள் ஜபித்துவரவேண்டும். (உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான ஒவ்வொரு ஆலயமும், அற்புத சக்தி நிரம்பிய ஆலயங்களே. )

 

இந்த மந்திரத்தை ஒரு சிவ பக்தர் / சிவாச்சாரியார் / சைவச்சித்தாந்த மாணவர் / உங்கள் ஆஸ்தான ஜோதிடர் / உங்களது ஆஸ்தான துறவி / உங்களது ஆசிரியர் என யாரையாவது இதை ஒருமுறை வாசிக்கச் சொல்லி அதை நீங்கள் கேட்டு, குருஉபதேசம் பெற்றிருத்தல் அவசியம்.

 

சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும்

விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.

 

"ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ

வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய

ஹ்ரீம் சிவானய நமஹ"

 

முன்னோர் செய்த பாவம் பாதிக்காமல் இருக்க

 

நமது முன்னோர் செய்த பாவம் நீங்க, தீர்த்த விசேஷம் நிறைந்த காசி, ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களுக்கு சென்று வர பாவம் நீங்கும்.

 

பசுவை பக்தியுடன் வணங்கி, பசும்புல், பழம் போன்றவற்றை உண்ணக் கொடுத்தாலும் புண்ணிய பலன் உண்டாகும்.

 

எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகிட அகத்திய மாமுனிவர் கூறிய சூட்சம வழிபாட்டு மந்திரம்

 

ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும் அதை தடுக்காமல் போவதும் (கண்ணாரக் கண்டபாவம்),

தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை கேட்பது (காதாரக் கேட்டபாவம்),

உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை துன்புறுத்துவது (மனதாரச் செய்தபாவம்), பெண்களை கொடுமைப்படுத்துவது, பசுக்களை துன்புறுத்துவது, ஓரறிவு முதல் ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள், உங்களின் முன்னோர்கள் செய்த  பாவங்களால் பிள்ளை இல்லாமல் போவது, குடும்பம் வறுமையிலே இருப்பது, அனைத்திலும் தோல்வி உண்டாதல், தீராத நோய்க்கு ஆட்படுதல், கை,கால் ஊனமாதல், மூளை வளர்ச்சி இன்மை, அற்ப ஆயுளில் மரணம் ஏற்படுதல்" போன்ற பாவவினைகளை அனுபவிப்பவர்களுக்கும் , எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும், அவைகள் நீங்கவும் இனியாவது மனசுத்தியோடு நீண்டகாலம் நிம்மதியாக வாழ்ந்து மோட்ச நிலையை அடையவும் ஒரு சூட்சம வழிபாட்டு மந்திரம் உள்ளது .

 

' உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு, மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு, மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக் கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி விடும்' என்கிறார் அகத்திய மாமுனிவர்.

 

குடும்ப சாபம் நீங்கிட விநாயகர் வழிபாடு பரிகாரம்:

 

உங்கள் வீட்டு முன்பு, சிறிய அளவிலான விநாயகர் கற்சிலை ஒன்றை வைத்து தினமும் அருகம்புல் மாலை அணிவித்து,

 

விநாயகனே

வெவ்வினையை வேரறுக்க

வல்லான் விநாயகனே

வேட்கை தணிவிப்பான் விநாயகனே

விண்ணுக்கும்  மண்ணுக்கும் நாதனுமாம் தண்மையினாற் கண்ணிற்பணிமின் கனிந்து

 

என்று மூன்றுமுறை உருக்கமாகப் பாடுங்கள். விநாயகப்பெருமானே! என் முன்னோர் செய்த பாவங்களுக்காக என் குடும்பத்தை தண்டிக்காதே. எங்களை உன் பிள்ளைகளாகக் கருதி ஏற்றுக்கொள், என உருக்கமாக வேண்டுங்கள்.

 

சிலை வைத்து வழிபட இடவசதி இல்லாத பட்சத்தில், தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது பழம் வாங்கிக் கொடுங்கள். விநாயகர் கோயிலுக்குச் சென்று மேற்கண்ட பாடலை மூன்று முறை படியுங்கள்.

 

திருச்சி மலைக் கோட்டை உச்சிபிள்ளையாரை ஒருமுறை தரிசித்து வாருங்கள். தாயுமான சுவாமி சன்னதியில், நெய் விளக்கேற்றுங்கள். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வணங்கி வாருங்கள். எந்த மலைக்கோயிலுக்கு போய் வந்தாலும் சிரமம் நிச்சயம் குறையும்.

 

நாம் செய்யும் பரிகாரபூஜைகளைப் பற்றியும், செய்ய இருக்கும் தானங்களைப்பற்றியும் எவரிடமும், எப்போதும் தம்பட்டம் அடிக்கக்கூடாது; இவைகளைச் செய்தப்பின்னரும்,வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தால் தான் முழுப்பலன்களும் நம்மை வந்து சேரும்.

 

தலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம் தலைத்தோங்க பரிகாரம்:

 

தலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம் தழைத்தோங்க வில்வ விதைகளை நல்ல சுப நாளில் வாங்கி மண்தொட்டியில் போட்டு தண்ணீர் பசுஞ்சாணம் சிறிது கலந்து தெளிக்க வில்வ கன்று விதையிலிருந்து துளிர்க்கும்.

 

தினசரி பஞ்சாட்சரம் செபித்து வர வேண்டும் . ஒரு அடி வளர்ந்தவுடன் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் எதாவது ஒரு சிவன் கோவிலில் நட்டு வைத்து அதை நன்கு பராமரிக்க ஆட்களை நியமிக்கவும். அருகில் இருந்தால் தினசரி தண்ணீர் விட்டு , வேலி அமைத்து கவனிக்கவும் 6 அடிக்கு மேல் வளர்ந்தவுடன் அது தானாகவே தழைக்கும்.

 

அந்த வில்வ இலைகள் சிவபெருமானின் பூஜைக்கு பயன்படும் பொழுது அனைத்து தீய கர்மாக்களும் விலகும். பெரும் புகழ் பாக்கியம் உண்டாகும்.ஈசன் அருளால் நன்மைகள் பல உண்டாகும்.பரம்பரை தரித்திரம், அடிமை வாழ்வு நீங்கும்.

 

சிவன் கோவிலில் வைக்க முடியாவிட்டால் கோவில் அருகில் வளர்க்கலாம். அதே பயன் கிடைக்கும். வில்வ மரத்தை வலம் வருவது மகாலெட்சுமியை வலம் வருவதற்கு சமம்.

 

ஏழு ஜென்ம பாவம் விலக ரதசப்தமி வழிபாடு பரிகாரம்;

 

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. அவரது பிறந்த தினத்தையே ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை கழிந்து, பவுர்ணமி கழிந்த 7–ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.

 

உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில், 7–வது நாள் வரும் சப்தமி திதியே ரத சப்தமி ஆகும். இந்த ரதசப்தமி நாள் புண்ணிய தினமாக கருதப்படுகிறது.

 

தை மாதம் வளர்பிறையில், 7–வது நாள் வரும் சப்தமிதிதியன்று காலையில் குளிக்கும்போது தலையின் மீது 3 எருக்கு இலை,சிறிது மஞ்சள் அரிசி,3 அருகம்புல்,பசுஞ்சாணம் இவைகலை வைத்து கிழக்கு முகமாக நின்று தண்ணீர் ஊற்ரி குளிக்கவும்.ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம்..நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும்..

 

இதன் பயனாக நாம் தெரிந்தும் தெரியாமலும் 7 ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகும்...மாலையில் வீட்டு வாசலில் ரதம் கோலமிட்டு இரண்டு தீபம் ஏற்றி வழிபடவேண்டும்தீபம் கிழக்கு முகமே இருக்க வேண்டும்.....

 

சாபங்கள் நீங்க பரிகாரங்கள்

 

சாபங்கள் விலக இறை வழிபாடு தான் சரியான தீர்வு.

 

தந்தையின் சாபம் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும்.

 

தாயின் சாபம் விலக, ஏகாதசி திதியில் ஏகாம்பரேஸ்வரரை முறையாக வழிபாடு செய்ய வேண்டும்.

 

சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

 

சுமங்கலி பெண்களின் சாபம் விலக, அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும்.

 

ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஜோதிடம் : முன்னோர் சாபம் நீக்க பரிகாரம் - குறிப்புகள் [ ] | Astrology : Remedy to remove ancestral curse - Notes in Tamil [ ]