231. ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
புகழ்
231. ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
வறியவர்க்கு வேண்டியதைக் கொடுத்தலும், அதனால் வரும் புகழைப் பெற்று வாழ்வதே வாழ்க்கையின் பயனாகும்.
232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல்
நிற்கும் புகழ்.
பலர் பலவாறாகப்
பேசினாலும்,
யாசிப்பவர்களுக்குக் கொடுத்து உபசரிப்பவரிடமே புகழ் தங்கும் என்பதாகும்.
233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்.
உயர்ந்த புகழை விட
அழியாது நிலைத்து நிற்கும் செல்வம் வேறு ஒன்றும் இல்லை.
234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேன் உலகு.
விண்ணுலகம் ஞானியரைப்
போற்றாது. நில உலகில் புகழுடன் வாழ்பவரையே போற்றும்.
233. நத்தம்போல் கேடும் உளதுஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
நத்தை அழிந்தானும்
சிறக்கும் முத்தையளிக்கின்றது. அதுபோல, பூத உடல் அழிந்தாலும், புகழ் உடலை அடைவது சான்றோருக்கே
முடியும்.
236. தோன்றின் புகழொடு தோன்றுக: அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
பிறந்தவர்கள் எல்லாம்
புகழுடன் வாழ வேண்டும். அஃதிலார் பிறந்ததை விடப் பிறவாதிருப்பதே நல்லது
237. புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
பிறர் புகழும்படி
வாழாதவர் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிர, தம்மை இகழ்பவரை நோவது கூடாது.
238. வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.
மக்களாகப் பிறந்தவர்கள்
எல்லாம் புகழ் மிக்க நச்ததியைப் பெறாவிட்டால், பிறந்தவர்களுக்கே அது குற்றமாகும்.
239. வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்.
புகழப்படாத மனித உடலைச்
சுமந்த நிலம் பழியற்ற வளத்தைக் கொடுக்காமல் வளத்தில் குறையும்.
240. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.
பழியின்றி வாழ்பவரே இவ்வுலகில் உயிர் வாழ்பவர்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் இறந்தவர்களே யாவார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : புகழ் - அதிகாரம் : 24 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : reputation - Authority : 24 in Tamil [ Tirukkural ]