141. பிறன்பொருளான் பெட்டுஒமுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
பிறன்இல் விழையாமை 141. பிறன்பொருளான் பெட்டுஒமுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். உலக நெறிகளின் அறம். பொருளாகிய உண்மையை அறிந்தவனிடம் மாற்றான் மனைவியை விரும்பும் அறியாமை இல்லை. 142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். அறநெறியைக் கைவிட்டுத் தீய நெறியில் நின்றவர்கள். எல்லாருள்ளும் பிறன் மனைவியை விரும்பினவர் போன்ற அறிவற்றவன் இல்லை. 143. விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழகு வார். நம்பித் தெளிந்தவருடைய மனைவியிடம் பாவம் புரிந்து நடப்பவர் பிணத்தை ஒத்தவரேயாவார். 144. எனைத்துணையர் ஆயினும்என்ஆம்? தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். காம மயக்கத்தால் தினையளவும் ஆராயாமல் பிறன் மனைவியை நயத்தல், பெருமையுடையவருக்கும், சிறுமையை உண்டாக்கும். 145. எளிதுஎன இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. எளிதென்று கருதி பிறன் மனைவியிடம் சேர்பவன் எந்நாளும் அழியாத பழியை அடைவான். 146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண். பிறர் மனைவியைக் கூடுபவனுக்கு, பகை, பாவம், அச்சம். பழி ஆகிய நான்கு பாவங்களும் நிலைத்திருக்கும். 147. அறனியலான் இல்வாழ்பவன் என்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன். அறநெறியில் இல்வாழ்க்கை நடத்துபவன் பிறன் மனைவியின் பெண்மையை ஒருநாளும் நாடமாட்டான். 148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. பிறன் மனைவியை நினைக்காத போரண்மையே சான்றோருக்கு அறமும், ஒழுக்கமும் ஆகும். 149. நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குஉரியாள் தோள்தோயா தார். பிறன் மனைவியின் பெண்மையை நாடாதவனே கடல் சூழ்ந்த உலகில் எல்லா நன்மைகளையும் அடைவான். 150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. அறத்தின் எல்லையை அறியாமல், பல தீமைகளைச் செய்தாலும். பிறன் எல்லையில் உள்ள பிறன் மனைவியை விரும்பாமல் இருப்பதே நல்லதாகும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். அதிகாரம்: 15
திருக்குறள்: பொருளடக்கம் : பிறன்இல் விழையாமை - அதிகாரம்: 15 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Restlessness in later life - Authority: 15 in Tamil [ Tirukkural ]