நெல்லையப்பர் கோவில் அம்பாள் தேரை மீண்டும் புதுபபித்து இருக்கிறார்கள்.
புதுப்பிக்கப்பட்ட அம்பாள் தேர்
நெல்லையப்பர் கோவில் அம்பாள் தேரை மீண்டும் புதுபபித்து
இருக்கிறார்கள்.
"அம்பாள்
தேர் சுமார் 650 ஆண்டுகள்
பழமையானது. கறுப்பு நிறத்தில் காட்சிதரும் இந்தத் தேரைச் செய்யும்போதே 50 லிட்டர் தயிர், மற்றும் 50 லிட்டர் விளக்கெண்ணை கலந்து, வாழை மட்டை கொண்டு தேர் முழுவதும் வர்ணம் பூசுவதுபோல,
அடித்துத் தெளித்திருக்கிறார்கள்.
ஒன்றரை அங்குல உயரத்துக்கு அதன் சாறு படிந்து இருக்கிறது.
இதுதான் தேரைப் பூச்சி அரிப்பில் இருந்து இன்றுவரை காத்து வருகிறது. காலப்போக்கில்
தேர் செய்யப்பட்ட மரத்தில் நார்ச்சத்துக்கள் குறைய, தேரின் வலிமையும் குறைந்துவிட்டது. இதனால் அந்தத் தேரைப்
புதுப்பித்துள்ளனர்.
தேரின் மேல் படிந்து இருக்கும் கறுப்புக் கலவையை ரசாயன
தெளிப்பான் மூலம் நீக்கினால், அந்த அடுக்கின் கீழ் இருக்கும் மரம் பளபளக்கும். இதனால்
தேரில் உள்ள சிற்பங்கள் துளியும் பாதிப்பு அடையாது. அடுத்ததாக உட்டெர்மினேஷன் என்ற
கலவையைத் தேர் முழுக்க ஸ்ப்ரே செய்தனர். இது மரத்தின் வலிமையைக் கூட்டி
மரத்துக்குத் தைல சத்து எனப்படும் ஈரச்சத்தையும் அதிகமாகத் தரும். இந்தக் கலவையின்
வாடைக்கே கறையான், புழு
போன்றவை நெருங்காது. இதனால் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தேர் உறுதியாக இருக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : புதுப்பிக்கப்பட்ட அம்பாள் தேர் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Revamped Ambal Chariot - Notes in Tamil [ spirituality ]