வலது கால் பிரம்மா. இடது கால் விஷ்ணுவாகும் . ஆலயம். கல்வி கூடம். சுபநிகழ்ச்சி போன்ற விசேஷங்களுக்கு புறப்படும்போது வலது காலை எடுத்து வைத்து புறப்பட்டால் சிறப்பாகும், போர்க்களம். ஆயுத பிரயோகம். வழக்காடு மன்றம். காவல் நிலையம். அசுபம் தரும் இடம்.
வலது கால், இடது கால் பயன்பாடுகள்!
வலது கால் பிரம்மா. இடது கால் விஷ்ணுவாகும் .
ஆலயம். கல்வி கூடம். சுபநிகழ்ச்சி போன்ற விசேஷங்களுக்கு
புறப்படும்போது வலது காலை எடுத்து வைத்து புறப்பட்டால் சிறப்பாகும்,
போர்க்களம். ஆயுத பிரயோகம். வழக்காடு மன்றம்.
காவல் நிலையம். அசுபம் தரும் இடம்.
அசுப நிகழ்வு போன்ற காரியங்களுக்கு புறப்படும்
போது இடது காலை முதலில் வைத்து புறப்பட்டால் ஜெயம் உண்டாகும்,
அக்காலத்தில் தெய்வத்திடமோ. குருவிடமோ சக்தி படைத்த
ஆயுதம் வாங்கும்போது முட்டி போட்டு இடது காலை முன் வைத்து வாங்குவார்கள், வித்யாரம்பம் தீட்சை.
புத்தக ஏடு போன்றவைகளை குரு மூலம் பெறும் போது
முட்டி போட்டு வலது காலை முன் வைத்து வாங்குவார்கள், காரணம் பிரம்ம பாதமான வலது பாதம் முன் நின்றால் சுபநிகழ்வு பெருகும், விஷ்ணு பாதமான இடது பாதம் முன் வைத்தால் வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், மீண்டும் தொடராமல் காக்கப்படும் என்பதற்கே அவ்வாறு செய்தார்கள் .
சுபகாரியங்கள் தொடர வேண்டும் என்பதற்காகத்தான்
பிரம்ம பாதத்தை முன் வைத்து புகுந்த வீட்டில் பெண்ணை போகச் சொல்வார்கள், ஆலயம் நுழையும் போதும். கல்வி கூடம் நுழையும் போதும் வலது காலை முன் வைத்து போகச்சொன்னார்கள்
என்பதை அறிவீராக, சுருங்கச் சொன்னால் வலது பாதம் சுபம் வளரும், இடது பாதம் அசுபம் தடைபடும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : வலது கால், இடது கால் பயன்பாடுகள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Right foot, left foot applications - Notes in Tamil [ ]