தாடியில் இருந்து தங்கம் எடுத்த ரோமரிஷி சித்தர்

சென்னையில் உருவ ரூபமாக காட்சியளிக்கும் ரோமரிஷி, தெளிவு, தைரியத்திற்கு ரோமரிஷியை வழிபடுங்கள்

[ சித்தர்கள் ]

Romerishi Siddhar took gold from his beard - Worship Romerishi for clarity and courage as personified in Chennai in Tamil

தாடியில் இருந்து தங்கம் எடுத்த ரோமரிஷி சித்தர் | Romerishi Siddhar took gold from his beard

ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

தாடியில் இருந்து தங்கம் எடுத்த ரோமரிஷி சித்தர்

 

அவர் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் என்பது உறுதியாகி உள்ளது. அவர் ஜீவ சமாதி அடைந்ததற்கான உறுதியான தகவல்களும் இல்லை. அதற்கு காரணம் அவர் உடல் அழியவில்லை. அவர் கைலாய மலைக்கு சென்று ஜீவ சமாதி அடைந்ததாக பெரும்பாலான ஆய்வு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவர் வாழ்ந்துள்ளார். பல சிவாலயங்களுக்கு சென்று தியானம் இருந்து திருப்பணிகள் செய்துள்ளார். ரோமரிஷி வைத்தியம் ஆயிரம், ரோமரிஷி சூத்திரம் ஆயிரம், ரோமரிஷி ஞானம் 50, ரோமரிஷி பெருநூல் 500, ரோமரிஷி காவியம் 500, ரோமரிஷி மூப்பு சூத்திரம் 30, ரோமரிஷி ஜோதிட விளக்கம் போன்று ஏராளமான நூல்களை எழுதி உள்ளார். அதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்து உள்ளன.அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்து அவர் செய்த அற்புதங்கள் இப்போதும் பேசப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த ஆலயத்தில் அவர் தவம் செய்யும்போது தனது தாடியை தடவி தங்கத்தை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுப்பாராம்.ஒரு தடவை அவர் தாடி வழியே தங்கம் வருவது நின்று போனது. உடனே தாடியை மழித்து அகற்றி விட்டார். என்றாலும் ஈசனிடம் சரண் அடைய அவர் மனம் விரும்பியது.

 

சென்னையில் உருவ ரூபமாக காட்சியளிக்கும் ரோமரிஷி

 

சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்வதன் மூலம் ரோமரிஷியின் அருளை பெற முடியும். குறிப்பாக அந்த ஆலயத்தில் உள்ள வட்டபாறையில் ரோமரிஷியின் மந்திரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அந்த பகுதியில் தியானித்தால் சிவபெருமான் அருளுடன் ரோமரிஷி தரும் பலன்களையும் பெறலாம்.அதே திருவொற்றியூரில் தேரடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் பகுதியில் இருக்கும் மயிலாண்டவர் ஆலயத்தில் ரோமரிஷி உருவ ரூபமாக இருக்கிறார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தை கட்டிய காஞ்சி மன்னன் தொண்டைமானுக்கு ரோமரிஷி முனிவர் காட்சி கொடுத்து அருள் பாலித்ததாக குறிப்புகள் உள்ளன. அந்த மன்னன்தான், இந்த ரோமரிஷி ஆலயத்தையும் கட்டியதாகக் கருதப்படுகிறது.

 

தஞ்சை கோவிலிலும் ரோமரிஷி தவம் இருந்ததற்கான ஆதராரங்கள்

 

இதே போன்று ரோமரிஷி தமிழகத்தின் வேறு சில பகுதியிலும் தன்னை பற்றிய பதிவை உருவாக்கி இருக்கிறார். தஞ்சை, கரந்தையில் உள்ள சிதாநாதீஸ்வரர் கோவிலும் ரோமரிஷி சித்தர் தவம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர் தவம் இருந்த இடத்தில் சிறிய துளசி மாடம் அமைக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தை ரோமரிஷியின் ஜீவ சமாதி என்றும் சொல்கிறார்கள். சமீப காலமாக இந்த துளசி மாடத்தில் ரோமரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்றும் வழிபடலாம்.தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை அருகில் வடவாற்றங்கரை பூக்குளம் சிதாநந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. நீண்ட நாள் நோயால் தவிப்பவர்களுக்கு இந்த ஆலயம் பரிகார தலமாக இருப்பதால், ரோமரிஷியின் அருளையும் பெற முடியும்.

 

சிவபெருமானை நேரில் காண அகத்தியரிடம் உதவி நாடிய ரோமரிஷி

 

இதே போன்று தமிழகத்தின் சில சிவாலயங்களில் ரோமரிஷி சித்தரின் தியான பீடங்கள் இருக்கின்றன. அந்த சிவாலயங்களில் தியானம் செய்த காலங்களில் அவரது உடலில் இருந்து விழும் ரோமங்கள் பிரம்மனின் மரணத்தை குறிப்பதாக கருதப்பட்டது. ஒரு தடவை பிரம்மன் மறையும் போது மட்டுமே அவரது உடலில் இருந்து ஒரு ரோமம் விழுந்து லிங்கமாக மாறியதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் ரோமரிஷி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பது உறுதியாகிறது.சிவாலயங்களில் தியானம் செய்து திருப்பணிகள் செய்த ரோமரிஷி இறுதியில் சிவனை நேரில் பார்த்து தரிசனம் செய்து சிவமுக்திபேறு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக அவர் அகத்தியரின் உதவியை நாடினார். அவருக்கு உதவ முன் வந்த அகத்தியர்,

 

3 கோடி பிரம்மாவின் வாழ்விற்கு பிறகே இவரது வாழ்வு முடிவுக்கு வரும்!

 

ரோமரிஷி எங்கு ஜீவசமாதி ஆனார் என்பதில் தெளிவான விளக்கங்கள் இல்லை. 3 கோடி பிரம்மாவின் வாழ்வுக்குப் பிறகே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும் என்று சில நூல்களில் குறிப்பு உள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாராலும் உறுதிபடுத்த முடியவில்லை. இதனால் அவர் தியானம் செய்த இடங்கள் அருள் அலையை தரும் இடங்களாக இருக்கின்றன. கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் ரோமரிஷியை மனதில் நினைத்து வீட்டிலேயே வழிபடலாம். அவருக்குரிய போற்றிகள், மந்திரங்களை சொல்லி வந்தால் ரோமரிஷி பலன் தருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.ரோமரிஷியை வழிபடும்போது வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.

 

தெளிவு, தைரியத்திற்கு ரோமரிஷியை வழிபடுங்கள்

 

ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள். ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார். எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும். மனதில் தைரியத்தை ஏற்படுத்துவது சந்திரகிரகம்தான். ரோமரிஷியை கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறார்களே.... அந்த அளவுக்கு மனதில் தெளிவும், தைரியமும் உண்டாகும்.முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ரோமரிஷியை மனமுருக வேண்டினால் தெளிவான முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ரோமரிஷியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

சித்தர்கள் : தாடியில் இருந்து தங்கம் எடுத்த ரோமரிஷி சித்தர் - சென்னையில் உருவ ரூபமாக காட்சியளிக்கும் ரோமரிஷி, தெளிவு, தைரியத்திற்கு ரோமரிஷியை வழிபடுங்கள் [ ] | Siddhas : Romerishi Siddhar took gold from his beard - Worship Romerishi for clarity and courage as personified in Chennai in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்