சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம்.
ருத்ர முத்திரை சிவபெருமானுக்கு உகந்ததா?
சிவபெருமானுக்கு ருத்ரன்
என்ற பெயருண்டு. சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம். அக்ஷம்
என்றால் கண். நல்ல ருத்திராக்ஷத்தை உரைத்துப் பார்த்தால் பசும்பொன்னின் மாற்று
இருக்குமென்று கூறுவார்கள். ருத்ராக்ஷம் அணிபவரை தீயவை மற்றும் நோய் நொடிகள்
அணுகா.
சிவபெருமானைப் பற்றிய
மந்திரம் 'ருத்ரம்' எனப்படும். உடல் ஒரு
போக்கிலும் மனம் ஒரு போக்கிலும் செல்ல முடியாது. இரண்டு குவிந்த நிலையில் இருக்க
வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், மன இறுக்கம், மனக் குழப்பம், மன அழுத்தம், தெளிவற்ற சிந்தனை, முரண்பாடான செயல்பாடுகள் ஆகியவை ஏற்படும்.
நம் உடலில் சக்தி, வாயுக்கள், சக்கரங்கள் உள்ளன.
பஞ்சபூதங்களும் குவிந்திருந்தால் சமநிலையில் இருக்கும். இதனால், உடலும் மனமும்
சமநிலையில் இருக்கும்.
பூமி என்பது தாயாக
உள்ளது. அதனால் அன்னை பூமி, தாய் நாடு என்றெல்லாம் கூறுகிறோம். இந்தப் பூமி என்ற பஞ்சபூதம்
தூண்டப்பட்டால்,
உடல் சமநிலைப்படும்.
சுவாதிஸ்டானம், மணிபூரகம் ஆகிய ஆதாரச்
சக்கரங்களுடன் இந்த நரம்புக் குவியல்கள் இணைந்துள்ளன. நமது வயிற்றுப் பகுதியில்
உள்ளே இருக்கும் இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள் ஆகிய முக்கிய உறுப்புகள் இந்த நரம்புக் குவியலின்
கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்த சுவாதிஸ்டானம், மணிபூரகச் சக்கரம்
இரண்டும் சரிவரச் செயல்படா விட்டால், நரம்பு கள் பாதிக்கப்பட்டு உள் உறுப்புகள்
செயலிழந்துபோகும் வாய்ப்பு உள்ளது.
இந்த ருத்ர முத்திரையைச்
செய்யும்போது சோலார் நரம்புக் குவியல்கள் மற்றும் அதை இயக்கும் மணிபூரகச் சக்கரம்
இரண்டும் தூண்டிவிடப் படுகின்றன.
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று
விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். நடு விரலும் சுண்டு
விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்யலாம்.
இந்த முத்திரையை
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம். இரண்டு கைகளிலும் ஒரே நேரம்
ஐந்து முதல் பத்து நிமிடங்கள் செய்யலாம்.
1. ரத்த ஓட்டம்
சீராகும்.
2. தூய சிந்தனைகள்
ஏற்படும்.
3. கண் பார்வைக்
குறைபாடு குணமாகும்.
4. சுவாசம் சீர்படும்.
5. இதய வால்வில் உள்ள
அடைப்புகள் நீங்கும்.
6. கவனச் சிதறல்
ஏற்படாது.
7. பஞ்சபூதங்கள்
அனைத்தும் உறுதியாகி சமப்படும்.
8. மண்ணீரல், கல்லீரல் ஆகிய
உறுப்புகள் நன்கு செயல்படும்.
9. உயிர் சக்தி
அதிகரிக்கும்.
10. தலைவலி, தலைச் சுற்றல் நீங்கும்.
11. ஜீரண சக்தி
ஏற்படும்.
12. குடல் இறக்கம், மூலம், கர்ப்பப்பை கோளாறுகள்
அகலும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : ருத்ர முத்திரை சிவபெருமானுக்கு உகந்ததா? - சோலார் நரம்புக் குவியல்கள், செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Rudra Mudra is suitable for Lord Shiva? - Solar Nerve Piles, Recipe, Benefits in Tamil [ ]