சாய் பாபாவின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா ]

Sai Baba's Words of Confidence - Notes in Tamil

சாய் பாபாவின் தன்னம்பிக்கை வார்த்தைகள் | Sai Baba's Words of Confidence

வாழும் நாட்கள் எப்படி இருக்க வேண்டும் என்று என்றைகாவது நீ யோசித்து இருக்கிறா யா. அப்படி நீ யோசிக்க ஆரம்பித்தால் உன் வாழ்க்கையில் வெறுப்பையும் வெறுமையும் உணர்ந்து இருக்க மாட்டாயே.

சாய் பாபாவின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

அன்பு குழந்தையே...


 

வாழும் நாட்கள் எப்படி இருக்க வேண்டும் என்று என்றைகாவது நீ யோசித்து இருக்கிறாயா.  அப்படி நீ யோசிக்க ஆரம்பித்தால் உன் வாழ்க்கையில் வெறுப்பையும் வெறுமையும் உணர்ந்து இருக்க மாட்டாயே.

 

வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைத்து விட்டால் உன் வாழ்க்கையின் சுவை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்.

 

நீ நினைப்பவை எல்லாம் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.அவைகள் எல்லாம் உன் வசம் கிடைத்தால் நீ திருப்தி அடைவாய்,. ஆனால் உன்னை சுற்றி உள்ளவர்களுக்கு அது பாதகமாக இருக்கும் என்ற யோசனையே உனக்கு வராது.

 

நீ உன் விருப்பங்கள்உன் கனவு,உன்ஆசைஉன் லட்சியம் என்று வாழ்ந்தால்சுயநலமாய் நீ மட்டும் தான் உன் வாழ்வில் தனியாக இருப் பாய் ஓசையில்லா இசைக் கருவி போல...

 

முதலில் ஏன் இப்படி என்னை படைத்து உள்ளீ ர்கள் என்று என்னிடம் முறையிடுவதை நிறுத்து. உன்னிடம் நிறைய திறமைகள் உள்ளது ஆனால் அதை செயல்படுத்த தெரியவில்லை.

 

வாழ்க்கையில் கஷ்டம் என்ற ஓன்றையே நினைத்து அதில் தேங்கி நின்று இருந்தால்வாழ்க்கையில் நீ நின்று கொண்டே தான் இருப்பாய். நேரங்கள் நிமிடங்களாய் போய்க் கொண்டே தான் இருக்கும்.

 

வாழ்க்கையில் முதலில் உனக்கு எது தேவை எது தேவையில்லாதது என்று பட்டியில் இடு. தேவை உள்ளவற்றை முன்னே நிறுத்து அதற் கான முக்கியத்துவத்தை கொடு. அதற்காக உழைத்து போராடு. நிச்சயம் எல்லா விஷயத்திலும் நீ முக்கியமாக திகழ்வாய்.

 

உன்னோடு தான் நான் இருக்கிறேன். என் பரிபூரண அருளும் ஆசியும் எப்போதும் உனக்கு உண்டு.  நீ ஜெயமாக நன்றாக எல்லா செல்வ வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாய் சந்தோஷமாக வாழ்வாய.

 

இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல. கஷ்டங்களோ சந்தோஷங்களோ எல்லாம் ஒரு நாள் வந்த வழி எதுவோ அதே வழியில் திரும்ப தான் செய்யும்.உன்னை எதிர்மறையாக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் நேர்மறையாய் மட்டுமே உன்னை வெளிப்படுத்து.

 

நான் உனக்கு துணையாக உன்னுள்ளேயே இருக்கிறேன். அப்படி இருக்கையில் நீ படும் துயரங்களை அறியமாட்டேனா?  உன்னை சூழ்ந்துள்ள  ஏமாற்றம்துரோகம்வஞ்சகம்ஏழ்மைஇன்னும் பல  துயரங்களும் நீங்க வேண்டி,  உன் சாய்அப்பாவை எண்ணி வேண்டிக் கொள்கிறாய். சரியா?

 

உன் மனதில் இருப்பதை அறிவேன்.  உன்னை சூழ்ந்துள்ள துயரங்களிருந்து  தப்பிப்பது எப்படி  என்று யோசித்து யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறாய்.

 

உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும்கைவிட்டது போலவும்எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும்,  எல்லோரும்  இருந்தும் அனாதையை போல இப்போது நீ உணருகிறாய். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன்,

 

உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தி ல் தான் இருக்கிறாய். உன் கர்மவினைகளின் படி இது உனக்கு உண்மையான சோதனைக் காலம் தான்இல்லை என்று கூறவில்லைஆனால் உன் கர்மவினைகளை அழித்து அதை உனக்கு சாதனைக்காலமாக மாற்ற தான் நான் இங்கு போராடிக் கொண்டுருக்கிறேன்.

 

இன்னும் சிறிது காலத்திற்கு சகித்துக்கொள் உன் நம்பிக்கை என்னும் சக்தியை ஒன்று திரட்டி உன் துயரங்களை கண்டு அஞ்சாமல் போராடு. இது திடமான சிந்தையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம். இறை நாமத்தை நீ உச்சரித்து கொண்டே இருஅது உன்னுடைய கர்மவினைகளின் பிடியை தளர்த்தும்.

 

எந்த நேரத்திலும்கஷ்டத்திலும் நீ நம்பிக்கை யை இழக்காமல் இருப்பாயானால்உனது கர்மவினைகளின் உள்ள தீய பலன்கள் பனி போல் உருகி கரையவைத்துக் கொண்டு இருக்கும் என் லீலைகளை உணர்வாய்.

 

உன்னை அரவணைக்க யாருமில்லை என்று வருந்தாதே உயிருக்கு உயிராய் உன்னை நான் பாதுக்காக்கிறேன். அதனால் நீ எதற்கும் பயப்படாதே... வாழ்க்கையில்நீ பயணிக்கும் வழியில் என் துணை நிச்சயம் இருக்கும். உன் வேண்டுதல் கள் எல்லாம் பலிக்கும். உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.

 

வாழ்க்கை எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று வைத்துள்ளது. அது நமக்கு பிடித்திருக்கி றதா இல்லையா என்பதை பற்றி எல்லாம் அதற்கு கவலை இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப நீ உன் மனதை திடப்படுத் வேண்டும்.

 

இரண்டு வார்த்தை பேச வேண்டிய இடத்தில் அதிகம் பேசுவது தவறு. ஆலோசனை கூறும் போது உன் கருத்தை பிறரிடம் கூறி சொல்ல சொல்வது தவறு. அதேபோல்நேர்மையாக பயணித்து தோற்ப தும்முடிந்த வரை போரா டிய பின் தோற்பதும்வெற்றி பெற்றதற்கு சமம் என்று அர்த்தம் கொண்டுமீண்டும் மீண்டும் முயற்சி செய்.

 

உனக்கு வேண்டியதை பிறரிடம் இருந்து எதிர் பார்த்தால் அது எப்போதும் கிடைக்காது. உனக்கு வேண்டியதை நீ தான் முயற்சி செய்து அடைய வேண்டும். வெற்றியாதோல்வியாஎன்பதல்ல வாதம்..ஆடுகளத்தில் இருக்கிறாயா என்பதை மட்டும் நீ அடிக்கடி உறுதிபடுத்திக்கொள்.

 

உயரே தொங்கும் மாங்காய்க்காக கல்லுயர்த் தும் சிறுவனை கவனித்துப்பார். எறியும் கற்கள் தோல்வியைத் தழுவுகின்றன என்று கைவிட்டுப் போவதில்லை. கடைசியில் ஒரு காயாவது அவன் கைகளி ல் வீழும் அதுவரை களைப்படைவதில்லை அவன் கரமும் மனமும்.

 

அதுபோல உன் தோல்விகளையே கற்களாக்கி கவனம் சிதறாமல் வெற்றிக் கனியைக் குறி பார்த்து எறிய கற்றுக் கொள்.  எத்தனை முறை கல்லெறியப்படு கிறது என்பதல்ல கணக்கு. கனி கைவச ப்படுகிறதா என்பதில் இருக்க வேண்டும் உன் கவனம்.

 

வெற்றியைக் கொண்டாட எவராலும் இயலும். தோல்வியை ஏற்றுத் துவளாதிருக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும். அந்தச் சிலரில் ஒருவனாக நீ இருப்பின் வெற்றிக்கோப்பை விரைவிலேயே உன் கையில் கிட்டும். வெற்றி முழக்கம் உன் வீட்டுக்கதவைத் தட்டும். நான் இருக்கிறேன் நிழலாக என்றும்  என்றென்றும்.

 

வாழ்க்கையில் நீ கடக்கும் தூரம்  சந்திக்கும் சூழ்நிலைகள் எல்லாம் இன்னும் நிறைய இருக்கும் போது ஏன் நீ இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இருந்து வெளியே வர மறுக்கிறாய். உன் வாழ்வில் இன்னும் வியப்பூட்டும் அனுபவ ங்களும்ஆர்ப்பரிக்கும் சந்தோஷ உணர்வுகளும் நிறைய இருக்கிறது அதையெல்லாம் நீ அனுபவிக்க வேண்டாமாஉலகில் தினமும் ஏதோ ஒரு வகையில் ஒவ் வொருவரும் அவமானம்ஏமாற்றம்தோல்வி யுற்றதால் ஏற்படும் வேதனை வலிகளை அனுபவித்து வருகின்றனர்.

 

வாழ்க்கையில் வெற்றிப் பெற நம்பிக்கை யோடு இவற்றை எல்லாம் நீ எதிர்த்து போராடத் தான் வேண்டும். உன் வாழ்க்கை சோதணைகள் நிறைந்து மட்டுமே இருக்கும் என்று நீயே முடிவு செய்யாதே. ஒரு செடியின் அடிதளம் திடமாக இருந்தால் தான் ஆரோக்கி யமான மரமாய் உயர்ந்து நிற்கும்அது போல் தான் உன் வாழ்க்கையிலும். இதை மனதில் கொண்டு செயல்படு.

 

பிறர் உன்னை உதாசீனப்படுத்திய நிமிடங்கள் துரோகம்மற்றும் வஞ்சகத்தால் நீ சிந்திய கண்ணீர் அனைத்தும் வண்ணமயமா ன வெகுமதிகளாக உன்னை வந்து சேரப் போகிறது. இனிமேல் எல்லாம் ஏற்றம் தான். இது உன் சாய் அப்பாவின் சத்திய04வாக்கு. உன் வாழ்விலும் வெற்றிகள் குவிய போகிறது கலங்காதே. நான் இருக்கிறேன். நல்லதே நடக்கும். இனி உன் வாழ்வில் என்றும் எல்லாம் ஏற்றமே.

 

ஓம் ஶ்ரீ சாய் ராம்....


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா : சாய் பாபாவின் தன்னம்பிக்கை வார்த்தைகள் - குறிப்புகள் [ ] | Spiritual References: Sai Baba : Sai Baba's Words of Confidence - Notes in Tamil [ ]