1.1. 2026 | வியாழக்கிழமை
🌟 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌟
சாய் பாபாவின் ஆசிர்வாதம்
புதிய விடியல் மலர்ந்தது,
புது ஆண்டு கதவுதிறந்தது…
நேற்றைய சுமைகளை விட்டு,
நாளைய நம்பிக்கையை அணைத்துக் கொண்டு 2026-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்கும்
இந்த இனிய தருணத்தில் அனைவருக்கும் என் மனமார்ந்த
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!
சாய்பாபா சரணம்…
“ஸ்ரத்தா – சபூரி” எனும்
நம்பிக்கையும் பொறுமையும்
உயிராய் கற்றுத்தந்த
கருணையின் அவதாரம் சாய்பாபா…
மதம், ஜாதி, வேற்றுமை கடந்து
மனிதத்தை மட்டும் நேசிக்கச் சொன்ன
மகா ஞானி அவர்…
துன்பத்தில் தாயாய் தாங்கி,
தளர்ச்சியில் தந்தையாய் தேற்றி,
வலியில் நண்பனாய் உடனிருந்து,
வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும்
“நான் இருக்கிறேன்” என்று
அமைதியாக ஆறுதல் சொல்வவர்
எங்கள் சாய்பாபா…
புது ஆண்டின் முதல் நாளிலேயே
அவரது திருப்பாதங்களை நினைத்து,
அவரது நாமத்தை உச்சரித்து,
அவரது அருளை வேண்டி நிற்போம்…
அருள் இருந்தால்
இருள் விலகும்…
அன்பு இருந்தால்
அகந்தை கரையும்…
நம்பிக்கை இருந்தால்
நாளை நிச்சயம் மலரும்…
🌼 2026 நமக்கு தரட்டும் 🌼
ஆரோக்கியமான உடல்,
அமைதியான மனம்,
நேர்மையான சிந்தனை,
நிறைந்த அன்பு,
நல்ல உறவுகள்,
நியாயமான வாழ்வு…
சாய்பாபாவின் அருளால்
கவலைகள் கரைந்து போக,
கண்ணீருக்கு விடை கொடுத்து,
சிரிப்பை வரவேற்க,
தோல்விகள் பாடமாகி,
வெற்றிகள் சாதனையாகி,
ஒவ்வொரு நாளும்
ஒரு திருநாளாக மாறட்டும்…
🤍 “என்னை நம்பி சரணடைந்தவர்களை
நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்”
என்ற சாய்பாபாவின் வாக்கின்படி,
இந்த புத்தாண்டு முழுவதும்
அவரது பாதுகாப்பும்
அருளும் நம் அனைவரையும்
சூழ்ந்திருக்கட்டும்…
🌸 வாட்ஸ் அப் குழுவில் பயணிக்கும்
அனைத்து அன்பு உறவுகளுக்கும் 🌸
இந்த 2026
அமைதி, அன்பு, ஆனந்தம்
நிறைந்த பொன் ஆண்டாக
மலரட்டும்…
மீண்டும் ஒருமுறை
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌟
—
""வாழ்வோம் வளமுடன்""
போன வருடத்தில் நீங்கள் எனக்கு செய்த நன்மைகளை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சாயி...
நான் உங்களிடம் நிறைய கோரிக்கைகளை வைத்தேன். சில விஷயங்கள் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடத்தி கொடுத்தீர்கள் ....
நிறைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன...எல்லாம் சாய்யின் சித்தம் என்று எண்ணினேன் ...இனி வரும் வருடம் உங்களின் ஆசிர்வாத்தால் என் வாழ்வையும்,எம்மை சுற்றியுள்ளோரின் வாழ்வையும் வளம் பெற செய்யுங்கள் எம் தந்தையையே..
நீயே எம் துணை இவ்வுலகில்...
ஓம் ஜெய் ஸ்ரீ சாய்ராம்..
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்