தேனிமாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியில் புகழ்மிக்க மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
கருவறை திறக்காத கோயில்!
தேனிமாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியில்
புகழ்மிக்க மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த அம்மனின் கருவறை எப்போதும்
மூடப்பட்டு இருக்கிறது. இந்த கருவறை திறக்கப்பட்டதைப் பார்த்தவர் எவரும் இல்லை என்கிறார்கள்.
திறக்கப்படாத இந்தக் கோயில் கருவறையின்
முன்புறம் பதினாறு கால் மண்டபம் இருக்கிறது. பதினாறு கால் மண்டபத்திற்கு முன்புறம்
உள்ள பூஜை மண்டபம் கதவு அடைபட்ட நிலையிலேயே என்றும் உள்ளது. இந்தக் கதவுக்கே பூஜை நடைபெற்று
வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை கூரை வேய்வதற்காகவும், கோயிலைச் சுத்தம் செய்வதற்காகவும் மட்டுமே
இக்கோயில் கருவறை கதவைத்திறக் கிறார்கள். இதர நாட்களில் கதவு திறப்பது இல்லை. இந்தப்
பராமரிப்பு பணியின்போது கூரைமேயும் பக்தர்கள் கூட கண்களை மறைத்துத் துணி கட்டிக் கொண்டு
வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் பணியில் ஈடுபடும் பக்தர்கள் அனைவரும்
முறைப்படி விரதம் மேற்கொண்டு, பிறகே
பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இக்கோயிலில் அடைக்கப்பட்டுள்ள அர்த்த
மண்டபக் கதவின் முன்பாக, நடுவில்
பித்தளையால் ஆன சூலாயுதமும், சூலாயுதத்தின்
இரண்டு பக்கமும் பித்தளையால் ஆன வேல்களும் இருக்கின்றன. இவற்றிற்கு புடவை சாற்றி அலங்காரம்
செய்து, இதனை மூங்கிலணைக் காமாட்சியம்மனாகப்
பாவித்து ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இந்த அம்மனுக்கு அன்னதானம் நிவேதனமாகப்
படைக்கப் படுவதில்லை. தேங்காய்களை உடைக்காமலும், வாழைப்பழங்களை உரிக்காமலும் படைப்பதே வழக்கமாக இருந்து வருகிறது.
எதிரிகளை வேரறுக்கும் சக்தி படைத்தவள் இந்த அன்னை. மனமுறிவு ஏற்பட்டுத் தனித்தனியே வாழ்ந்து வரும் தம்பதிகள், இங்கே வந்து பிரார்த்தனை செய்து, இல்லற வாழ்வில் சுபிட்சம் அடைந்து சேர்ந்து வாழ்வதாகக் கூறுகிறார்கள்.
தேனியிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : கருவறை திறக்காத கோயில்! - மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் [ அம்மன் ] | Amman: History : Sanctum sanctorum open temple! - Moongilanai Kamachi Amman Temple in Tamil [ Amman ]