இனியவை கூறல்

அதிகாரம்: 10

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Saying goodbye - Authority: 10 in Tamil



எழுது: சாமி | தேதி : 15-07-2023 09:42 pm
இனியவை கூறல் | Saying goodbye

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இனியவை கூறல்

அதிகாரம்: 10 

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அறத்தினை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் அருளுடனும் அன்புடனும், வஞ்சனையற்றதாகவும் இருக்கும். 


92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

மனமகிழ்ந்து மற்றவர்க்குப் பொருளைக் கொடுப்பதை விட முகமலர்ச்சியோடு இனிமையாகப் பேசுவது நல்லது.


93. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் 

இன்சொ லினதே அறம். 

கண்டவுடன் முகமலர்ச்சியுடன் பார்த்து பேசி. பழகுவதே நல்லறமாகும். 


94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூாம் இன்சொ லவர்க்கு. 

எல்லோரிடத்திலும் இன்பத்தை மிதமிக்கும் இனியச் சொற்களைப் பேசுபவரிடம் துன்பத்தையளிக்கும் வறுமை நெருங்காது. 


95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணி;அல்ல மற்றுப் பிற.

எல்லோரிடத்தும் பணிவும் இனியவார்த்தைப் பேசுவதும் சிறந்த அணிகலனாகும், பிற அணிகள் அழகு தருவன அல்ல.


96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

மக்களுக்கு நன்மை தரும் இனிசொற்களை ஆராய்ந்து பேசினால் தீமைகள் மறைத்து அறம் வளரும். 


97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல். 

நற்செயலிலிருந்து நீங்காத இனிய சொல்லை ஒருவன் சொல்வானானால் அச்சொல்லால், நன்மை விளைந்து நற்செயல் நடக்கும்.


98. சிறுமையுள் நீங்கிய கன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.

பிறர் மணம் புண்படாத இனிய சொல்லைச் சொல்பவன் இப்பிறவியிலும் மறுப்பிறவியிலும் இன்பத்தை அடைவான்.


99. இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது?

இனிய சொல் இன்பம் தருவதை யறிந்தவன், பிறரிடம் கடுஞ்சொற்களைப் பேசுவது எதற்கு?


100. இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இன்பந்தரும் இனிய சொற்கள் இருக்கும் போது தீயச் சொற்களைப் பேசுவது கனியை விடுத்து காயையுண்பதனை யொக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : இனியவை கூறல் - அதிகாரம்: 10 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Saying goodbye - Authority: 10 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-15-2023 09:42 pm