அஞ்சலி முத்திரை என்பது இரு கரம் கூப்பி வணக்கம் கூறும் முறையில் அமைந்தது. அதற்கு நேர் எதிராக, புறங்கைகளை இணைத் துச் செய்வதுதான் சுமண முத்திரை. சுமணன் என்பது ஒரு முனிவரின் பெயர்.
சுமண முத்திரை
அஞ்சலி முத்திரை என்பது
இரு கரம் கூப்பி வணக்கம் கூறும் முறையில் அமைந்தது. அதற்கு நேர் எதிராக, புறங்கைகளை இணைத் துச்
செய்வதுதான் சுமண முத்திரை. சுமணன் என்பது ஒரு முனிவரின் பெயர்.
உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான
முறையில் வைத்திருக்க இந்த முத்திரை உதவும். மனம் அமைதியில்லாமல் இருக்கும்போது
மனச் சோர்வு ஏற்படும். இதனால், செயல்களில்
ஈடுபாடு இல்லாமல் இருத்தல்,
அசதி, ஆர்வமின்மை ஆகிய குறைபாடு கள் உண்டாகும்.
நமது வலது கை, நேர் சக்தி; இடது கை, எதிர் சக்தி. இரண்டும் இணையும் போது சக்தி ஓட்டம் ஏற்படுகிறது.
உடலின் பிராண சக்தி சமநிலைப்படும்போது, புத்துணர்ச்சி
ஏற்படும். மனம் அமைதி அடையும். சோர்வுகள் நீங்கும்.
வணக்கம் செய்வதுபோல் மார்புக்கு
முன்பாக கைகளை வைக்க வேண்டும். இரண்டு கைகளின் புறப் பகுதிகளை (புறங்கைகளை)
ஒன்றையொன்று தொடுமாறு வைக்க வேண்டும். கட்டை விரல், ஆள்காட்டி விரலுடன் சேர்ந்திருக்க வேண்டும். மற்ற நான்கு விரல்களும்
ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். குறிப்பாக, விரல் நகங்கள் தொட்டுக்கொண்டு இருக்க
வேண்டும்.
இந்த முத்திரையை, பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் இருந்தபடி
செய்யலாம். நின்ற நிலையிலும் செய்ய வேண்டும்.
தினமும் மூன்று வேளைகளிலும் ஐந்து
நிமிடங்கள் செய்யலாம். முடிந்தவர்கள், கூடுதல்
நேரம் செய்யலாம். தொடர்ந்து 45 நாள்கள் செய்து வர வேண்டும்.
நமது புறங்கைகள் வழியாக பல நரம்புகள்
செல்கின்றன. இரண்டு புறங்கைகளும் சேரும்போது நரம்புகள் தூண்டப்படுகின்றன.
1. சர்க்கரை நோய் உள்ளவர்கள், நரம்புகளின் பாதிப்புக்கு
ஆளாகிறார்கள். மேலும் கல்லீரல், கணையம், இதயம், நுரையிரல் ஆகிய உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. சுமண முத்திரை, உடலில் சர்க்கரையின் அளவைச் சரியான
அளவில் வைக்கிறது. இதனால்,
மேற்கண்ட உறுப்புகள் நன்கு செயல்படும்.
2. மன அமைதி ஏற்படும். எல்லா
செயல்களுக்கும் மனம்தான் காரணமாக உள்ளது. எனவே, மனம்
சோர்வடையும்போது அதற்கு புத்துணர்ச்சி தேவை. அதை சுமண முத்திரை அளிக்கிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சுமண முத்திரை - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Seal - Recipe, time scale, benefits in Tamil [ ]