சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்! வாழ்ந்து கொண்டும் இருங்கள் இப்போதைய காலங்களில் கொஞ்சம்.... சொல்வது மட்டும் உங்கள் வேலையானால் செல்லா காசாகிவிடுவீர்கள்!
பொது நலத்தில் சுய நலமா?
சுயநலத்தில் பொதுநலமா?
சொல்லிக்கொண்டே
இருக்காதீர்கள்!
வாழ்ந்து கொண்டும்
இருங்கள் இப்போதைய காலங்களில் கொஞ்சம்....
சொல்வது மட்டும்
உங்கள் வேலையானால்
செல்லா காசாகிவிடுவீர்கள்!
எல்லோருக்கும்
சொல்லத் தெரியும் ஆனா
வாழத்தான் தெரியாது.
தெரியாதவர்களுக்குச்
சொல்கிறேன் என்றால்
தெரிந்தா சொல்கீர்கள்
?
இல்லை
வாழ்ந்தா சொல்கீர்கள்?
படித்ததும் கேட்டதும்
இங்கே
பகர்வதில் பலனில்லை...
உணர்ந்ததில்
வாழ்ந்து தெளிந்ததில்
சொல்லுங்கள்..
நீங்கள் சொல்லும்
உணர்வின் ஆழமே ஆயிரம் ஆர்த்தங்கள் சொல்லும்.
உங்கள் சொல்லின்
ஆழத்தை உணர்ந்திருக்க
வேண்டும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும்...
இயற்கை
சொல்லி கொண்டே
இருக்கிறது
உற்றுப் பார்ப்பவனும்
கற்றுக் கொள்பவனும்
இல்லை.
அடுத்தவனுக்குப்
பாடம் நடத்த இறங்காதீர்கள்.
நீங்கள்
படித்திருந்தால்
உங்கள் வாழ்வே
பாடமாக மாறும்
கவனியுங்கள் நன்றாக...
எந்த காலத்திலுமே
வழி காட்ட நீங்கள்
பிறக்கவில்லை
வாழமட்டுமே பிறந்து
இருக்கீர்கள்!
வாழுங்கள்!
உங்கள் வாழ்வை
மட்டுமே
முறையாகவும் இன்னும்
கூடுதல் மெருகேற்ற வேண்டுமென்றால்
நிறைவாகவும்
நீங்கள் வாழ்ந்தால்
மறையாக மாறுவது
கண்டிப்பாய்
திண்ணம்.
வாளி
நீரை நிரைத்துக்
கொண்டே
இருக்க வேண்டும்
நிறுத்தக் கூடாது
நிரம்பியது
வழியும்
அது
பிறருக்கு உதவும்.
தன்னை நிரப்புவதே
வாளியின் கடன்.
நிறைந்து வழிவது
வாளியின் அடுத்த
கடன்.
நிரம்பும் முன்
வழங்க ஆரம்பித்தால்
குறையைத்தான்
வாளி
எட்டிப்பிடிக்கும்.
தொண்டு
என்பதே
நீங்கள்
வாழ்ந்து உணர்ந்த
பின்
உதவுவதே
கேட்கும் ஐயங்களுக்கு
தீர்வளிக்கத்
தெரிந்தவனே
சொல்லத் துவங்க
வேண்டும்.
நல்லதைத் தானே
நான்
சொல்கிறேன் என்று
கூறாதீர்கள்.
அது நல்லதா கெட்டதா
என்று
அனுமானிக்கும்
அனுபவம் இருக்கிறதா?
நன்றாற்றலுள்ளும்
தவறுண்டு
வாழுங்கள் முதலில்
நல்லவைகளைத் தேர்ந்து
நல்ல வாழ்க்கை
வாழ்ந்தவர்கள்
நாலு பேருக்கு
சொல்ல விரும்ப
மாட்டார்கள்
தேடி வரட்டும் என்று
அடங்கி கிடப்பார்கள்.
சொல்லிக்கொண்டே
இருந்தால்
காலம் ஓடிவிடும்
நீங்கள்
வாழ்வது எப்போது?
வாழ்வோம் என்பதே
முதலில் உள்ளது.
வாழ வேண்டும்.
வாழ்ந்தே ஆக
வேண்டும்.
அதுவும்
அற வாழ்வாய்
இறை நினைவாய்.
வாழும் பொழுது
வாழ்விக்க வேண்டும்.
வாழ்ந்து முடிந்த
பிறகு
பார்க்கலாம் என்றால்
காலமும் இடம் தராது
வாழ்வும் முழுமைப்
பெறாது.
வாழ்வின்
முற்றுப்புள்ளியே
தொண்டில் தான் இருக்கிறது.
சொல்வதைத்
தெரிந்து சொல்லுங்கள்
தேவைப்
படுபவர்களுக்கு
மட்டுமே
சொல்லுங்கள்
சொல்லி ஆக வேண்டிய
கட்டாயம் இல்லை.
சொல்வதற்கு
தகுதியானால்
சொல்
அடங்குவதில்லை.
மரம் பழுத்தால்
வௌவாலை
கூவி அழைப்பார் இல்லை
1.
இந்த உலகில் பிரச்சனைகள் எதுவாயினும் நிரந்தரம் என்பது இங்கே கிடையாது. நாம் இறந்த பிறகு கிடைக்கும் கடைசி
வருமானம் 1 ரூபாய் கூட இன்னொருவருக்கு செல்லும்.
2.
நாம் சிாிக்க மறந்த, சிரிக்க விரும்பாத, சிரிக்க தவறிய ஒவ்வொரு
நாளுமே பயனற்ற வீணான நாள்களே ஆகும்..
3.
சிரிப்புதான் வலிக்கு மருந்து! மனிதனின் மனதின் ஆரோக்கியம்! சிரிப்புதான் அனைவரின்
வலிகளுக்கும் வலி நிவாரணி!
4.
கண்டிப்பாக அனைவரின் கனவுகள் எல்லாமே
நனவாகும் ஒரு காலம். அது தாமதம் வேணா ஆகலாம். ஆனா நடக்காமல் போகாது. நிறைய
காயங்களுக்குப் பிறகு அது நடப்பதே நமக்கு இங்கு வேதனை. அது நமக்கு பக்குவத்தை கொடுப்பதற்க்கு
வந்த சோதனை. அவ்வளவே தான்.
5.
எப்போதுமே உங்கள் மனம் வலிக்கும் போது சிரியுங்கள். அதுவே பிறர் மனம் வலிக்கும்
போது சிரிக்க வையுங்கள் …! நீங்கள் பேரின்பத்தை அடைந்து விட்டீர்கள் என்று
அர்த்தம்.
6.
அதே நேரத்தில் இதயம் வலித்தாலும் சிரியுங்கள்!. அதுவே அந்த இதயம் உடைந்தாலும்
சின்னா பின்னமாக சிதைத்தாலும் சிரியுங்கள்.
7.
உங்கள் வலி சிலருக்கு ஏன் பலருக்கு கூட சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் உங்கள் சிரிப்பு மட்டும்
மற்றவருக்கு வலியை கொடுக்காமல் கவனம் பார்த்து வாழுங்கள்!
8.
உங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால் உங்க உதட்டுக்கு அதெல்லாம் தெரியாமல்
பார்த்து கொள்ளுங்கள். அது எப்போதும் சிரித்துக்கொண்டு இருக்கும் படி பார்த்து
கொள்ளுங்கள்.
9.
பணம் நாம் வசதியாய் இருக்கும்போது நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் அந்த
பணமே இல்லாத நேரத்தில் வறுமையில் நாம் தவித்த தருணங்கள், அப்போது இழந்த
வாய்ப்புகள், வளங்கள், வசதிகள், ஏன் வயது கூட திரும்ப வராது. பறித்த சிலவற்றை எப்போதும்
பணத்தால் திருப்பி தர முடியாது தானே!
10.
நாம் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் கண்ணாடி நண்பன் முன்னால் நின்று சொல்லியும் செய்தும்
ஒத்திகை பார்த்து விடுங்கள். ஏனென்றால், நீங்கள் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.
11.
ஆசைப்படுவதை மறந்து விடுங்கள். ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதீர்கள். அதை
அடைவதற்கு போராட்டம் செய்யுங்கள். இங்கே களத்தில் இறங்கவே யோசனை செய்யும் பொழுது
நீங்கள் களத்தில் இறங்கி சண்டை செய்து வெற்றியை கொண்டு வாருங்கள். வெற்றியை பற்றி
எல்லாம் கவலை படாமல் காரியத்தில் இறங்கி இலக்கை மட்டுமே கவனம் வைத்து போராடுங்கள்.
வெற்றி கிட்டாமலா போய்டும்!
12.
போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே கிடைக்கும்.
13.
நீங்கள் எப்போதும் வானவில்லைக் காணவே முடியாது… எப்போது என்றால் உங்கள் பார்வை
கீழ் நோக்கியே இருந்தால் பார்க்க முடியாது.
14. புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை
அர்த்தமுள்ளதாகும்!
15. விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு
அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும்.
வாழ்க்கை இப்படித்தான்.
ஒரு
முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின்
மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.
நண்பனுக்கு
உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள்
நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது. அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே
உணர்கிறோம். கெடுதல்
செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
Encouragement : பொது நலத்தில் சுய நலமா? சுயநலத்தில் பொதுநலமா? - குறிப்புகள் [ Encouragement ] | ஊக்கம் : Self-interest in public interest? Public interest in selfishness? - Tips in Tamil [ ஊக்கம் ]