தன்னம்பிக்கை வரிகள்

குறிப்புகள்

[ தன்னம்பிக்கை ]

Self reliance lines - Tips in Tamil

தன்னம்பிக்கை வரிகள் | Self reliance lines

☘ கடந்த காலம் கனவோடு போய்விட்டது..! ☘ நிகழ் காலம் நிழல் போல தொடர்கின்றது..! ☘ எதிர் காலமோ கற்பனையில் மிதக்கின்றது..!

தன்னம்பிக்கை வரிகள்

கடந்த காலம் கனவோடு போய்விட்டது..!

 

நிகழ் காலம் நிழல் போல தொடர்கின்றது..!

 

எதிர் காலமோ கற்பனையில் மிதக்கின்றது..!

 

காலங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருந்தாலும் வாழ்க்கை பயணம் என்னவோ ஒரே பாதையில் தான் செல்கின்றது..!

 

பாதையை நற்திசை நோக்கி செலுத்த நம்மால் மட்டுமே முடியும்..!

 

துளி துளியாய் கண்களின் வழியே இறக்குவதை தவிர தொண்டைக்குள் இருக்கும் துக்கத்தை வேறு என்ன செய்வதுவிடமுடியும்........!

 

நாம் சொல்வதில் அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள் உண்மைகளாகவும்,

ஏற்க முடியாதவைகள் பொய்களாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது...

எல்லாரும் அப்படிதான்.....!!


ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அச்சம்தான் அரசாண்டு கொண்டிருக்கின்றன. அது ஒரு நோயின் அறிகுறிதான். உங்கள் பயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் பின் அதுவே சுய வசியமாகி உங்களை ஆக்கிரமித்து கொள்ளும்...

 

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் வாழும் விதம்தான் வேறுவேறு!!

அனைவருக்குமே வாழ்க்கை ஒரே மாதிரி அமைந்திடாது!!

 

உன்னுடைய தகுதி என்ன என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதான்....

எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.. எந்த மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நன்றாகவே இருப்பான்.. இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்..!!

இதிலெல்லாம்

எனக்கு

நம்பிக்கையில்லைதான்

நம்பிக்கை கொண்டவர்களின்

மகிழ்ச்சியை கலைத்துவிடக்கூடாது

என்பதிலே

கவனமாக இருக்கிறேன்

வாழ்கையில் கவனமும் ஒரு பங்கு வகிக்கிறது ஏன் என்றால் எந்த செயலாக இருந்தாலும் அதில் கவனம் இல்லை என்றால் அங்கே பிழைகள் ஏற்றப்பட்டு விடும் அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி இல்ல தொழிலாக இருந்தாலும் சரி கவனத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்


கிடைத்தது வெற்றி எனில்

தோற்றவருக்கு ஆறுதல் கூறு

கிடைத்தது தோல்வி எனில்

வென்றவனிடம் அறிவுரை கேளு

தவறில்லை 👍

எதுவும் ஒருமுறை தான்

நீயென்றால் என்னில் அது

பலமுறை தான்

முடிந்த வரை இந்த வாழ்க்கையை

உங்கள் பார்வை வழியாகவே

ரசித்து விடுங்கள்..! 👍

 

பிறருக்கு ஒரு பொருட்டாக

இல்லாத ஒன்று உங்களுக்கு

பூவாக தெரியலாம்..!

 

தினமும் பல மலர்களை பெற்றெடுக்கிறேன்

மொத்தமாக பறித்து என்னை மலடியாக்கிறாய்

 

என் பிள்ளைகளை காவுகொடுத்து

உன் தெய்வத்திடம்   வேண்டுதல் வைய்கிறாய்

 

பிள்ளைகளை  பெற்றெடுத்து

தனிமையில் வாடும்

உனக்கே என் உணர்வுகள் புரியவில்லை.

 

கற்சிலைக்கும் புகைப்படத்துக்குமா

உன் வேண்டுதல் புரிய போகிறது


புறக்கணிப்பவர்களின் முன்பு புன்னகையோடு கடப்பது தான் நம்மை புறக்கணிப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய  தண்டனை.!

 

எதிர்கால பேராசைகளை எட்டிபறித்திடவே

நிகழ்கால சின்னசின்ன ஆசைகளை

கட்டுப்படுத்தி கொள்கிறது மனது

மன உறுத்தல்கள் என்றுமே ஒரு கொடிய விஷம்.

உன் தன்னம்பிக்கையை கெடுக்கும் கூர்மையான ஆயுதம்.

நம்மை விட்டு தொலைந்து போக

நினைக்கும் உறவுகளுக்கு

நாம் தேவை இல்லை என்பதைவிட

அவர்களுக்கு தேவையான ஏதோ நம்மிடம் இல்லை என்பதே உண்மை

 

சிறப்பானதை மட்டுமே Expect பண்றதை விட.........

கிடைத்ததை சிறப்பானதாக

 Accept பண்ணினால்......

வாழ்க்கை Perfect  ஆக இருக்கும்......!!☝🎥

 

அதிகம் பேசுவதை விட

அமைதியாய் இருப்பதே

அதிக மதிப்பை தரும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை வரிகள் - குறிப்புகள் [ ] | self confidence : Self reliance lines - Tips in Tamil [ ]