சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப் பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தொழுவூரில் அருளாட்சி புரிந்து வருகிறாள் ஸ்ரீ மாரியம்மன்
பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர...
சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப்
பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தொழுவூரில் அருளாட்சி புரிந்து வருகிறாள்
ஸ்ரீ மாரியம்மன்
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில்
பயிர் செய்ய ஏரினால் உழுதபோது பூமிக்கடியில் கிடைத்தவள் இந்த ஸ்ரீமாரியம்மன் இத்தலத்தில் ஆடிமாதம் தீமிதி விழா சிறப்பாக
நடைபெற்று வருகிறது. 1800ஆம்
வருடம் முதல் இத்திருவிழா வருஷாவருஷம் நடைபெற்று வருகிறது.
மனவேற்றுமையில் பிரிந்த தம்பதியினர்
இந்த மாரியம்மனிடம் வந்து மனமுருகி வேண்டினால், அவர்கள் மண வாழ்வில் மணம் வீசச் செய்பவள் இவள். நீதிமன்றத்தில்
விவாகரத்து வழக்குத் தொடுக்கும் எல்லைக்கும் போன தம்பதியினர் கூட மனந்திருந்தி இந்த
மாரியின் திருவருளால் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்!
இந்த மகா மாரியை இங்கு வந்து தரிசிக்க
முடியாதவர்கள், அவர்கள் இருக்குமிடத்திலிருந்தே கூட
மனதால் நினைந்துருகி வேண்டிப் பலன் பெறலாம் என்கிறார்கள் கோவில் பூசாரிகள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர - தொழுவூர் ஸ்ரீ மாரியம்மன் [ அம்மன் ] | Amman: History : Separated couples get together - Toshuvur Sri Mariamman in Tamil [ Amman ]