திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன. இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது. சக்தி பீடங்களுள் இத்தலம் காந்தி பீடமாகத் திகழ்கிறது. நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இக்கோயிலில் காந்திமதி அம்பாள், தன் கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சந்நதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் வகைவகையான நைவேத்யங்களை சிவன் சந்நதிக்குக் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம். இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.
கவலைகள் போக்கும் காந்திமதி அம்பாள் – திருநெல்வேலி
பற்றி தெரிந்து கொள்வோமா?
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற
தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.
தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி
ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும்
உள்ளன.
இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும்
அழைக்கப்படுகிறார்.
காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப்
பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது. சக்தி பீடங்களுள் இத்தலம் காந்தி பீடமாகத் திகழ்கிறது.
நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின்
உருவம் தெரிகிறது.
அம்மனின் 51 சக்தி பீடங்களில்
இது காந்தி சக்தி பீடம் ஆகும். காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற
ஆடை அணிவிக்கப்படுகிறது.
மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும்
வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள்.
இக்கோயிலில் காந்திமதி அம்பாள், தன் கணவர் நெல்லையப்பருக்கு
உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சந்நதி
அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் வகைவகையான நைவேத்யங்களை சிவன் சந்நதிக்குக் கொண்டு செல்கின்றனர்.
அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர்.
இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.
கணவனும், மனைவியும் அன்யோன்யமாக
இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில்
எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம்.
இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நதி மிகவும் சிறப்புடையது.
மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார்.
எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும்
என்பது மக்களின் நம்பிக்கை.
நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும்.
இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராஜர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார்.
சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின்
உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன.
கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு
ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது.
பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி
என்றழைக்கப்படுகிறார்.
மற்ற கோவில்களைப் போல மார்கழி மாதம் விடியற்காலையில்
இவ்வாலயம் திறப்பதில்லை.
மாற்றாக கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம்
கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்படும்.
கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்களில் இறைவனுக்கு
சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
இக்கோயிலில் தினசரி பூசைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
10 நாட்களுக்கு நடைபெறும்
இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும்.
மேலும் இங்கு ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று பிற திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனிப் பெருந்திருவிழாவின்
நான்காம்நாள், சுந்தரர் குருபூஜை, தை அமாவாசையன்று கொண்டாடப்படும் லட்சதீபவிழா போன்ற மூன்று நாட்களிலும் அறுபத்துமூவர்
திருவுலா வருவது வழக்கம்.
மேலும், திருவாதிரைப் பெருவிழாவில் தாமிரசபையில் ஈசன் நடனமாடும் போது சபையின் இரு பக்கங்களிலும்
அறுபத்துமூவரருடன் காந்திமதி அன்னையும் நின்று அத்திருக்கூத்தை ரசிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
இத்திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக
விளங்குகிறது அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.,
சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும்
பாடப்பெற்ற பெருமையுடையது. 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம். இத்தல தேர்
தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : கவலைகள் போக்கும் காந்திமதி அம்பாள் – திருநெல்வேலி பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Amman: History : Shall we know about Gandhimati Ambal – Tirunelveli, which relieves worries? - Notes in Tamil [ ]