குறிப்பு 1 கோவில் பிரகாரத்திற்கு நான்கு வழிகள் இருந்தாலும், பிரதான வழி எதுவோ அதன் வழியாக உள்ளே நுழைந்து தான் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். பின் வாசல் வழியாக சென்றால் தூரம் குறைவு என்பதற்காக, குறுக்குப் பாதையில் இறைவனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் நுழையக் கூடாது. குறிப்பு 2 முடிந்தவரை கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து விட்டு, கோவிலுக்குள் செல்லுங்கள். ஒரு மனநிறைவு கிடைக்கும். அந்த மன நிறைவே உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றியும் வைக்கும். குறிப்பு 3 தினமும் குலதெய்வ நாமத்தைச் சொல்லி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுடைய குடும்பத்திற்கு, வரப்போகும் கஷ்டத்தை, முன்கூட்டியே குலதெய்வம் கனவின் மூலமாக வலியுறுத்தும். முன்கூட்டியே உனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை கனவில் வந்து குலதெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் சொல்லும். பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழி. குலதெய்வம் மட்டும்தான் இதை செய்ய முடியும். குறிப்பு 4 ஏதாவது முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசும் போது இன்டர்வியூக்கு செல்லும் போது வாயில் ஒரு ஏலக்காயை போட்டு செல்லுங்கள். உங்கள் வார்த்தைகள் பலிதமாகும். பேச்சில் தெளிவு பிறக்கும். குறிப்பு 5 குலதெய்வத்திற்கு மாங்கல்யம் வாங்கி சாத்துவதாக பிரார்த்தனை வைத்துக் கொண்டால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். சுபகாரிய தடை விளக்கும். குறிப்பு 6 ஒரு வீட்டு பூஜை அறையில் எப்போதுமே ஏதாவது ஒரு கோயிலின் தீர்த்தம் இருக்க வேண்டும். கங்கா தீர்த்தமாக இருக்கலாம், ராமேஸ்வர தீர்த்தமாக இருக்கலாம், திருச்செந்தூர் கடலின் தீர்த்தமாக இருக்கலாம். இப்படி எந்த தீர்த்தமோ ஒரு தீர்த்தம் வீட்டில் இருந்தால் அது நல்லது. ஏதாவது தீட்டு வீட்டிற்கு சென்று வந்த பிறகு இந்த தீர்த்தத்தை கொஞ்சம் தண்ணீரில் கலந்து உங்கள் தலையிலும் தெளித்துக் கொள்ளலாம். வீடு முழுவதும் தெளித்துக் கொள்ளலாம் நன்மை நடக்கும்.
ஆன்மீகத்தில் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள
வேண்டிய குறிப்புகள் பற்றி அறிந்து கொள்வோமா?
குறிப்பு 1
கோவில் பிரகாரத்திற்கு நான்கு வழிகள் இருந்தாலும், பிரதான வழி எதுவோ அதன் வழியாக உள்ளே நுழைந்து தான் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.
பின் வாசல் வழியாக சென்றால் தூரம் குறைவு என்பதற்காக, குறுக்குப் பாதையில் இறைவனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் நுழையக் கூடாது.
குறிப்பு 2
முடிந்தவரை கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு
உங்களால் முடிந்த உதவியை செய்து விட்டு, கோவிலுக்குள் செல்லுங்கள். ஒரு மனநிறைவு கிடைக்கும். அந்த மன நிறைவே உங்கள் பிரார்த்தனையை
நிறைவேற்றியும் வைக்கும்.
குறிப்பு 3
தினமும் குலதெய்வ நாமத்தைச் சொல்லி வீட்டில் விளக்கு
ஏற்றி வழிபாடு செய்பவர்களுடைய குடும்பத்திற்கு, வரப்போகும் கஷ்டத்தை, முன்கூட்டியே குலதெய்வம் கனவின் மூலமாக வலியுறுத்தும்.
முன்கூட்டியே உனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை கனவில் வந்து குலதெய்வம் ஏதாவது ஒரு
ரூபத்தில் சொல்லும். பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழி. குலதெய்வம் மட்டும்தான்
இதை செய்ய முடியும்.
குறிப்பு 4
ஏதாவது முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசும் போது
இன்டர்வியூக்கு செல்லும் போது வாயில் ஒரு ஏலக்காயை போட்டு செல்லுங்கள். உங்கள் வார்த்தைகள்
பலிதமாகும். பேச்சில் தெளிவு பிறக்கும்.
குறிப்பு 5
குலதெய்வத்திற்கு மாங்கல்யம் வாங்கி சாத்துவதாக
பிரார்த்தனை வைத்துக் கொண்டால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சீக்கிரம் திருமணம்
நடக்கும். சுபகாரிய தடை விளக்கும்.
குறிப்பு 6
ஒரு வீட்டு பூஜை அறையில் எப்போதுமே ஏதாவது ஒரு
கோயிலின் தீர்த்தம் இருக்க வேண்டும். கங்கா தீர்த்தமாக இருக்கலாம், ராமேஸ்வர தீர்த்தமாக இருக்கலாம், திருச்செந்தூர் கடலின் தீர்த்தமாக இருக்கலாம். இப்படி எந்த தீர்த்தமோ ஒரு தீர்த்தம்
வீட்டில் இருந்தால் அது நல்லது. ஏதாவது தீட்டு வீட்டிற்கு சென்று வந்த பிறகு இந்த தீர்த்தத்தை
கொஞ்சம் தண்ணீரில் கலந்து உங்கள் தலையிலும் தெளித்துக் கொள்ளலாம். வீடு முழுவதும் தெளித்துக்
கொள்ளலாம் நன்மை நடக்கும்.
குறிப்பு 7
ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை
உங்கள் கையில் வைத்துக் கொண்டு, வீட்டில் இருக்கும் எல்லா அறைகளுக்கு உள்ளேயும்
அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்துச் சென்று, அந்த அறையை மூன்று முறை சுற்ற வேண்டும். ஒரே எலுமிச்சம் பழம் போதும். வீடு முழுக்கவும்
எல்லா இடத்திலும் இந்த ஒரே எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் இப்படி சுற்றிவிட்டு அந்த
எலுமிச்சம் பழத்தை வெளியில் எடுத்து வந்து ஒரு அகல் விளக்கில் கற்பூரம் போட்டு கொளுத்தி
அந்த நெருப்பில், அந்த எலுமிச்சம் பழத்தை போட்டு பொசுக்கி விடுங்கள்
வீட்டை பிடித்த கெட்ட சக்தி கண் திருஷ்டி அனைத்தும் பொசுங்கி போகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ஆன்மீகத்தில் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் பற்றி அறிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Shall we learn about the spiritual must-know tips - Tips in Tamil [ ]