"வெட்கப்படுபவன் உலகப் பார்வைக்கு ஒரு வகையில் கோமாளியே," என்றான் ஒரு அறிஞன். வாழ்வில் வெற்றி பெற்று புகழுடன் வாழ விரும்புகிறவன் எவனும் வெட்கப்படும் குணம் உள்ளவனாக இருக்கக் கூடாது. இருந்தால், அவன் அனைவரும் ஏளனமாக பார்க்கும் ஒரு காட்சி பொருளாகி விடுவான். எனவே வெற்றியை நோக்கமாக கொண்டவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக வெட்கப்படும் குணத்தை புறக்கணியுங்கள்!.
வெட்க உணர்ச்சி வெற்றிக்குத் தடை!!!
"வெட்கப்படுபவன் உலகப் பார்வைக்கு ஒரு வகையில் கோமாளியே," என்றான் ஒரு அறிஞன். வாழ்வில் வெற்றி பெற்று புகழுடன் வாழ விரும்புகிறவன் எவனும்
வெட்கப்படும் குணம் உள்ளவனாக இருக்கக் கூடாது. இருந்தால், அவன் அனைவரும் ஏளனமாக பார்க்கும் ஒரு காட்சி பொருளாகி விடுவான். எனவே வெற்றியை
நோக்கமாக கொண்டவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக வெட்கப்படும் குணத்தை புறக்கணியுங்கள்!.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எத்தனையோ வழிகள்
இருக்கின்றன. ஆனால் வெட்கப்படும் குணம், வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வழிகள் அனைத்தையும் முற்றிலும் அடைத்துவிடும். பயத்தின்
பல வடிவங்களில் ஒன்றே வெட்கப்படும் குணமாகும். வெட்கமுறும் குணம் ஒருவன் ரத்தத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைப் பரவச் செய்து, முடிவில் அவனை வீழ்த்தி விடுகிறது.
வெட்கப்படுபவன் கூட்டுப் புழுவை போல் ஒரு சிற்றறைக்குள்
அடைந்து கிடந்து அழுகிப்போவான். ஆற்று நீர் பாசி பிடிப்பதில்லை. குட்டை நீரோ பாசி பிடித்து, பூச்சிகள் நிறைந்து, நோய் பரப்பும் அசுத்த குட்டை ஆகிவிடுகிறது. ஆக, மனிதனும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பது தான் அழிவின் ஆரம்பம்.
போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வெற்றிக்கு முண்டியடித்து
முன்னேறும் கூட்டம் இவர்களை பின்னுக்கு தள்ளிவிடும் அல்லது அந்தக் கூட்டத்தில் நசுக்குண்டு
சிரமப்பட விருப்பம் இல்லாமல், இவர்களே பாதுகாப்பு கருதி பின் தங்கிக் கொள்வார்கள்
பெரிய காரியங்களை இவர்கள் செய்து இருந்த போதிலும், தான் செய்து முடித்திருந்த காரியங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும்படி எடுத்துச்
சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே வைத்து பூட்டிக்
கொள்வார்கள். மேலும் இவர்கள் செய்து முடித்த காரியங்களை தாங்கள் செய்து முடித்ததாக
சொல்லி பலர் புகழும் தட்டிச் சென்று விடுவார்கள்.
காட்டில் எரிந்த நிலவாக
கடலில் பெய்த மழையாக
இவர்கள் பணி அமைந்துவிடும்.
எனவே வெட்கப்படும் இயல்பை விட்டொழித்து தங்களுக்கு
நியாயமாக கிடைக்கக்கூடியவைகளை கேட்டு பெற்று சமுதாயத்தில் தங்களை உயர்த்திக் கொண்டு
வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : வெட்க உணர்ச்சி வெற்றிக்குத் தடை - குறிப்புகள் [ ] | self confidence : Shame is a barrier to success - Notes in Tamil [ ]