திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணங்களால் மனமுடைய ஆரம்பித்த நேரம்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நேர்ந்த அவமானம்...
திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணங்களால் மனமுடைய
ஆரம்பித்த நேரம்.
சுமார் இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் இருக்கும் பொழுது
அக்கம்பக்கத்தார் மற்றும் வீட்டு உரிமையாளரின் இன்னும் குழந்தை இல்லையா? என்ற கேள்விக்கு
சங்கடப்பட்டு அடுத்தடுத்து வீடு மாறிக் கொண்டிருந்த நேரம்.
எனது சகோதரர் திருமணமாகி கணவன், மனைவி இருவரும்
வேலைக்கு செல்லும் நேரம் அவரின் குழந்தை எங்களிடமே இருந்தது.
எங்களிடம் புதிதாகப் பழகுபவர்கள்,, மற்றும் எங்களை
பார்ப்பவர்களுக்கும் அது எங்களுடைய குழந்தை என்ற எண்ணம் வந்து குழந்தையைப் பற்றிய
கேள்வி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து என்னுடைய மனைவியின் முகம் மறுபடியும்
மகிழ்ச்சியாக மாறிக் கொண்டிருந்த நேரம் அது. .
அந்த குழந்தைக்கு ஒரு உடல்நல குறைவு. நாங்கள் ரெகுலராக செல்லும்
மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வைத்தியம் கழித்து, மூன்றாம் நாள் டாக்டர்
க்ளுகோஸ் ஏற்ற வேண்டும் என்ற சூழ்நிலை.
எனது அம்மாவும், எனது மனைவியும் துணைக்கு இருக்கும் பொழுது குழந்தைக்கு ட்ரிப்ஸ்
ஏற்றினார்கள் .
அன்று மாலை நான் வேலையிலிருந்து மருத்துவமனை சென்று, அங்கே குழந்தையும்
எனது மனைவி இல்லை என்றதும் வீட்டிற்கு செல்லும் பொழுது குழந்தை தூங்கிக்
கொண்டிருந்தது.
யாரும் என்னிடம் பேசவில்லை. சரியாகிவிட்டது என்று சாதாரணமாக பேசி
விட்டு மறுநாள் காலை மருத்துவமனையில் பில் முடிப்பதற்காக சென்ற சமயம் டாக்டர்
என்னிடம் தனியாக பேசினார் .
நேற்று மாலை குழந்தையின் அப்பா உடனடியாக ட்ரிப்ஸ் எடுத்துவிட்டு
குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யுமாறு சத்தமிட்டு, சண்டையிட்டு
குழந்தையை அழைத்துச் சென்று விட்டார்கள் என்று.
நான் மன்னிப்பு கேட்டு பில் செட்டில் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது
அதுவரையிலும் எங்கள் குழந்தை என நினைத்துக் கொண்டிருந்த அத்தனை பேரும், நர்ஸுகளும் என்னை
பரிதாபமாக பார்த்தபொழுது உண்மைக்குமே மனதளவில் தேறி வந்த நான் மீண்டும் இறந்து
விட்டேன் அவமானத்தால்.
என் மனைவியை பற்றி சொல்லவே தேவையில்லை. எங்கள் இந்த நிலமையெல்லாம் என் எதிரிக்கும் கூட வரக்கூடாது என்று
கடவுளை வேண்டுகின்றேன்.
பெண் ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது.
வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை
செய்கிறாள். ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட
சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள். இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை
வஸ்துக்களும் சிறியது.
புத்தகங்களை எப்போதும் நெஞ்சோடுதான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப்
போல் பக்கவாட்டில் இல்லை. அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது
சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்பு கொஞ்சம் பெரிசு.
அவள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு.
நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள்.
அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை. மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்திலும்
அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு
எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக
உணர்ச்சி வசப்படுகிறாள். அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும்
கொள்கிறாள்.
ஆயுட்காலம் ஏறக்குறைய ஆண்கள் அளவுதான். ஆனால் அதிக தினங்கள்
உடல்நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத
நாட்கள் தான் அவளுக்கு அதிகம். போதுமா..? இத்தனை குறைபாடுகள்
அவளுக்குள் இருப்பதால்தான் அவள் ஆணைச் சார்ந்திருக்கிறாள்.
இவ்வளவு கஷ்டத்துடன்தான் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தன்
குடும்பத்தோடு பின்னி பிணையப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனுடைய
ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறாள். கிடைக்காது போது உணர்ச்சி வயப்படுகிறாள்.
இதே மாதிரி கணவனும் சில வேண்டுதல் மனைவியிடம் கேட்காமலேயே எதிர்ப்பார்க்கிறான்.
இதெல்லாம் பெண்கள் பிரச்சினை இவ்வளவு கஷ்டத்துடன்தான் வாழ்க்கை
அவளுக்கு இருக்கிறது... ஆண்கள் சற்று யோசியுங்கள்❤🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
உறவுகள் : குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நேர்ந்த அவமானம்... - பெண்களை தெரிந்து கொண்டால் அவளை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள் ..... [ ] | Relationships : Shame on childless couples... - If you get to know women, you won't cheat on them. in Tamil [ ]