சிவலிங்கத்தில் 5 மூர்த்திகள் இருக்கிறார்கள்.
சிவலிங்கம் சிவலிங்கத்தில் 5 மூர்த்திகள் இருக்கிறார்கள். ஐந்தும் சேர்ந்தால் தான் சிவலிங்கம். சிவலிங்கம் பிரணவயந்திரமாக உபநிடதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் 5 x 5 = 25. தத்துவம் 36. இவை சேர்ந்தது சிவலிங்கம். 36 தத்துவங்களுடன் ஆதியாயிருக்கிற மஹாஸ்தல லிங்கங்களுமுண்டு. துவாதசாந்த லிங்கஸ்தலம் - 1 (மதுரை) ஷோடசாந்த லிங்கஸ்தலம் - 1 (திருப்பெருந்துறை) சிவலிங்கத்தை வழிபட்டால் யாவற்றையும் வழிபட்டதாகும். நினைத்தாலும் எல்லாவற்றையும் நினைத்ததாகும். போய்ப் பார்த்தால் எல்லாவற்றையும் பார்த்ததாகும். இப்படியே வேத உபநிடதங்கள் கூறுகின்றன. சிவலிங்க வழிபாட்டின் பயனை 28 ஆகமங்களும் விரிவாகக் கூறுகின்றன. சமயாசாரியர்கள் இதனை உணர்ந்து வழிபட்டு வீடுபேற்றினை அடைந்திருக்கின்றனர். சிவம் என்பது வேதம். சக்தி என்பது ஆகமம். ஆண்பால் யாவும் சிவம். பெண்பால் யாவும் சக்தி. யாவும் சிவ சக்தியைத் தவிர வேறில்லை. சிவத்துக்கு லிங்கமும், சக்திக்குத் திரிகோணமும் அடையாளம். சிவம் பிந்து; சக்தி நாதம் சிவம் ஸத்து; சக்தி சித்து சிவம் மந்திரம்; சக்தி யந்திர தந்திரம். சொல்லின் பயன் சிவம். சொல் சக்தி. இந்தச் சிவசக்தி ஐக்கியமே இமயம் முதல் இராமேசுவரம் வரை சிவாலயங்களில் லிங்க வடிவமாகத் திகழ்கிறது. பூ - சிவம் ; வாசனை - சக்தி. இது போன்று எல்லாவற்றையும் அறியலாம். இந்த அறிவே ஞானம். இதையறியத் தெரியாதது பசு. இந்தக் கொடுரமான கலியுகத்தில் சிவசக்தியையறியும் பொருட்டு உலகத்தில் பலகோடி தலங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தலத்திலும் பல லிங்கங்கள் இருக்கின்றன. சிவலிங்கமில்லாத பூமியே இல்லை. கலியுகத்தில் இதற்காகவே நாயன்மார்கள் அவதரித்துத் தலங்கள் தோறும் சென்று தரிசித்தும் முக்தி அடைந்தும் பிறருக்கு முக்தியடையும் வழியையும் காட்டியிருக்கிறார்கள். இந்தக் கலியுகத்திற்குச் சிவஞானமே ஞானம். வேறு ஞானமில்லை. நாயன்மார்களில்லாத தலங்களில்லை. அடியார்களுக்காக ஆதியாய் ஏற்பட்ட மூர்த்திகள் பல. 63 நாயன்மார்களுக்காகச் சில. அனைத்துச் சிவாலயங்களையும் பின்வரும் கட்டுரையில் பார்ப்போம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சிவலிங்கம் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Shiv Lingam - Spiritual Notes in Tamil [ spirituality ]