மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Shiva Lingam with three faces - Tips in Tamil

மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம் | Shiva Lingam with three faces

சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் ‘அருவுருவ’ வடிவம் ஆகும். அது தவிர ஆலயத்தில் நடராஜர், பிட்சாடனர் என பல்வேறு தோற்றத்தில் இறைவன் உருவ வடிவமாக திகழ்வார்.

மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம்

 

சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் ‘அருவுருவ’ வடிவம் ஆகும். அது தவிர ஆலயத்தில் நடராஜர், பிட்சாடனர் என பல்வேறு தோற்றத்தில் இறைவன் உருவ வடிவமாக திகழ்வார்.

ஆனால் திருவக்கரையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம், மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனியாக காட்சி தருகிறது.

 

இது எந்த தலத்திலும் இல்லாத அபூர்வமான அமைப்பாகும். இதில் கிழக்கு முகமாக இருப்பது தத்புருஷ முகமாகவும், வடக்கு முகமாக இருப்பது வாமதேவ முகம் என்றும், தெற்கு நோக்கி இருப்பதை அகோர மூர்த்தியாகவும் பக்தர்கள் வணங்குகின்றனர். இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்புமிக்க சன்னிதி உள்ளது.

 

அது திருவக்கரை வக்ரகாளியம்மன். வக்ராசூரன் என்ற அசுரனை அழித்த காளி தேவி என்பதால் இந்தப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இதுவாகும். ரத்னரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும், சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று தெய்வங்களும் அருள் வழங்கும் அற்புதமான தலம் இதுவாகும்.

 

திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மயிலம் தாண்டி சிறிது தூரம் சென்றால் பெரும்பாக்கம் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருவக்கரை திருத்தலத்தை அடையலாம். திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : Shiva Lingam with three faces - Tips in Tamil [ ]