காணிப்பாக்கம் கணபதி!

விநாயகர்

[ விநாயகர் ]

Show Ganapati! - Ganesha in Tamil

காணிப்பாக்கம் கணபதி! | Show Ganapati!

பிறந்த குழந்தைக்குப் பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற நிகழ்ச்சி நடத்த புகழ் பெற்ற திருத்தலம் கேரளாவில் உள்ள ஸ்ரீ குருவாயூர். காணிப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோயிலிலும் மேற்படி வைபவங்களை நடத்தலாம் என்கிறார்கள்.

காணிப்பாக்கம் கணபதி!

 

பிறந்த குழந்தைக்குப் பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற நிகழ்ச்சி நடத்த புகழ் பெற்ற திருத்தலம் கேரளாவில் உள்ள ஸ்ரீ குருவாயூர். காணிப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோயிலிலும் மேற்படி வைபவங்களை நடத்தலாம் என்கிறார்கள். இந்தக் காணிப்பாக்கம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள விநாயகர் வரசித்தி கணபதி என்று அழைக்கப்படுகிறார் இங்குள்ள கணபதி தானாகத் தோன்றியவர்! இங்கு விநாயகர் சுயம்புவாகத் தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இந்தக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. காணிப்பாக்கம் கணபதி சகல வல்லமையும் கொண்டிருப்பதால், இங்கே வந்து இவரை நாட்டின் மற்ற பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக வந்து தரிசித்துச் செல்கின்றார்கள். போலிப் பத்திரம் தயாரித்து சொத்து மோசடி செய்பவர்களைத் தண்டித்து, உரியவர்களிடம் சொத்தைச் சேர்ப்பிக்கும் கணபதி என்று இந்த விநாயகரைப் போற்றுகிறார்கள். பொள்ளாச்சியிலுள்ள ஸ்ரீ மாசாணியம்மன் கோயிலிலும் இது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றனவாம்!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர் : காணிப்பாக்கம் கணபதி! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Show Ganapati! - Ganesha in Tamil [ Ganesha ]