நவகோள்களில் முழுமுதல் சுபக் கிரகம் - குரு. இவர் தேவர்களுக்கெல்லாம் குரு. இவர் இந்திரனின் அமைச்சர்.
குருபகவான் திருத்தலங்கள் நவகோள்களில் முழுமுதல் சுபக் கிரகம் - குரு. இவர் தேவர்களுக்கெல்லாம் குரு. இவர் இந்திரனின் அமைச்சர். நுண்ணறிவு மிகுந்தவர். அனைத்துக் கலைகளையும் அறிந்தவர். குரு பார்க்கக் கோடி பாவம் தீரும் - என்பது முதுமொழி. குரு பார்வை வந்துவிட்டது. விரைவில் திருமணம் கைகூடும் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். திருமணம். புத்திர பாக்கியம், செல்வம், புகழ், பதவி உயர்வு. கல்வி - கேள்விகளில் தேர்ச்சி, மகிழ்ச்சி. உடல்நலம் எனப் பல நற்பலன்களை அருள்பவர் குரு. இதர கிரகங்கள் தோஷப்பட்டால் கூட, குரு பார்வைக்குப் பின் கெடுதல்கள் குறையும் என்பது ஜோதிடர்களின் கருத்து. குரு, பொதுவாகவே நன்மைதான் செய்வார் என்றாலும். ஜென்ம லக்கினத்தில் இருந்து பன்னிரண்டாவது ராசி வரைப் பயணம் செய்யும்போது சில சமயங்களில் தோஷப்பட்டுப் போகிறார். கோசாரப்படி லக்னம், 4. 6, 8, 10, 12-ல் குரு இருந்தால் அவரை வழிபடுவது நல்லது என்பார்கள் ஜோதிடர்கள். அந்த கோவில்களுக்கு நாமும் சென்று வருவோமா? தஞ்சாவூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் (மெலட்டூர், திருக்கருகாவூர் பாதை திட்டை என்ற திருத்தலம் இருக்கிறது. தஞ்சையில் இருந்து நகரப் பேருந்துகள் இத்தலத்திற்குச் சென்று வருகின்றன. கும்பகோணத்தில் இருந்தும் திருக்கருகாவூர் வழியாகச் செல்லலாம். தென்குடித்திட்டை என்று பெயர் பெற்ற இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவன் பெயர் உலகநாயகி உடனுறை வசிஷ்டேஸ்வரர். குருபகவான் வழிபட்ட இத்தலத்தில் குரு பகவானுக்காகத் தனிச் சன்னதி இருப்பது சிறப்பு. இத்தலத்தில் கருவறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி மீது குறிப்பிட்ட நேர இடைவேளைக்கு ஒருமுறை தானாகவே ஒரு சொட்டு நீர் விழுந்து கொண்டிருப்பது தனிச்சிறப்பு. மேல் தளத்தில் சந்திரகாந்தக் கல் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் குரு பகவான் வழிபட்ட திருத்தலம். குரு பரிகாரத்திற்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது. சிதம்பரத்திற்கு தென்மேற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இறைவன் பெயர் துயர் தீர்த்த நாதர். இறைவி பெயர் பூங்கொடி நாயகி. இறைவன், தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவ மந்திரத்தை விளக்கிய வியாக்கியபுரம் என்ற பெயரும் உண்டு. புலி ஒன்றுக்கு அஞ்சிய வேடன் வில்வ மரத்தில் ஏறி இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துப் போட, கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்ததால் அவனுக்கு சிவனருள் கிட்டிய தலம் இது. இங்கு தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் காணப்படுகிறார். தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாளில் இருந்து ஆடுதுறை செல்லும் பாதையில் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காளையின் மீது இறைவனும், இறைவியும் வீற்றிருக்கும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அற்புதச் சிற்பம் அமைந்துள்ள திருத்தலம் இது. இறைவனை வழிபட்ட குரு பகவானை இங்கு வழிபட ஏற்றம் பல பெறலாம். கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். இறைவன் ஆலகால விஷம் உண்டதால் ஆலங்குடி எனப் பெயர் வந்ததாக இக்கோவில் தலவரலாறு கூறுகிறது. இங்கு கோவில் கொண்டிருக்கும் ஈசன் பெயர் ஆபத்சகாயேஸ்வரர், அம்மன் பெயர் ஏலவார்குழலி அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற இத்திருத்தலத்தில்தான் தேவி தவம் செய்து இறைவனைத் திருமணம் செய்து கொண்டார். தேவி திருமணம் செய்துகொண்ட இடம் இப்போதும் திருமணமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. கஜமுகாசுரனால் தேவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளைக் களைந்து காத்தமையால் இத்தலத்து விநாயகர், கலங்காமல் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஆதிசங்கரர் குரு பகவானிடம் மகாவாக்கிய உபதேசமும், 64 கலைகள் பற்றிய ஞானமும் பெற்றதாக வரலாறு. ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்று ஆலங்குடி. சாயரட்டை என்கிற மாலை நேரத்தில் இத்தலத்து இறைவனை வழிபடுவது சிறப்பு. குரு பகவானுக்குரிய விசேஷத் தலமாக ஆலங்குடி கருதப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் இடதுபுறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள்புரிகிறார். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்த குரு பகவானை வழிபடுவது சிறப்பு. மாயவரம் என்று அழைக்கப்பட்ட மயிலாடுதுறையும் ஒரு குருபரிகாரத் தலமாகும். இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள மயூரநாதரைக் குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளலார் கோவிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இத்தலத்து இறைவனுக்குத் தேவகுருநாதன் என்று பெயர். குரு பகவான் வழிபட்ட தலம் இது. இந்த ஆலயத்தில் குருபகவானுக்குத் தனிச் சந்நதி உள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மகாமகக் குளமான பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனைக் காசி விசுவநாதர் என்றும், இறைவியைக் காசி விசாலாட்சி, தேனார்மொழி என்றும் அழைக்கிறார்கள். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்திட்டை:
திருச்செந்தூர்:
ஒமாம்புலியூர்:
திருலோக்கி:
ஆலங்குடி:
மயிலாடுதுறை:
தேவூர்:
கும்பகோணம்:
ஆன்மீக குறிப்புகள் : குருபகவான் திருத்தலங்கள் - திட்டை, திருச்செந்தூர், ஒமாம்புலியூர், ஒமாம்புலியூர், திருலோக்கி, கும்பகோணம், ஆலங்குடி, மயிலாடுதுறை [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Shrines of Guru Bhagavan - Thittai, Tiruchendur, Omampuliyur, Omampuliyur, Tiruloki, Kumbakonam, Alangudi, Mayiladuthurai in Tamil [ spirituality ]