இந்த பரிகாரம் எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கவே வேண்டாம் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே முற்றுப்புள்ளி வைக்க இதோ ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரங்கள்
கஷ்டங்கள் தீர ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரங்கள்:
இந்த
பரிகாரம் எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் வாழ்க்கையில் இவ்வளவு தூரம்
கஷ்டப்பட்டு இருக்கவே வேண்டாம் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே முற்றுப்புள்ளி
வைக்க இதோ ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரங்கள்
ஏகப்பட்ட
பிரச்சனைகள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்காத நாளே கிடையாது துரதிஷ்டம்
துரத்தி துரத்தி அடிக்கிறது என்று நினைப்பவர்கள் பின் சொல்லக் கூடிய இந்த எளிமையான
பரிகாரத்தை செய்து பாருங்கள் தொழிலில் வெற்றி பெற முடியவில்லையா சரியாக
படிக்கவில்லையா மனது குழப்பத்தில் இருக்கிறதா எந்த முடிவையும் உங்களால் எடுக்க முடியவில்லையா
எதற்கும் கவலை வேண்டாம் உங்களுக்கான விடிவு காலம் இந்த நொடியில் இருந்து பிறந்து
விட்டது நம்பிக்கையோடு இந்த பதிவினை படித்துப் பாருங்கள்
சில
பேருக்கு மனது ரொம்பவும் குழப்பமாக இருக்கும் மனசு சரியில்லைங்க படுத்தால் தூக்கம்
இல்லை என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை கஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கிறது
என்ன செய்வது தினமும் காலையில் எழுந்து கொஞ்சம் அச்சு வெல்லத்தோடு பச்சரிசி கலந்து
கொள்ளுங்கள் இதை புறாவுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும் உங்கள் மொட்டை மாடியில் புறா
வந்தால் அங்கேயும் இதை வைக்கலாம் அல்லது புறாக்கள் தங்கும் கோபுரங்கள் இருக்கும்
அல்லவா அந்த இடத்திற்கு கொண்டு போய் இந்த உணவை புறாக்களுக்கு போட்டுவிட்டு வரலாம்
அது உங்களுடைய சௌகரியம் புறாவுக்கு இனிப்பு கலந்த உணவை வைத்தால் மனது
சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் மனக்குழப்பும் தெளிவு பெறும்
நல்லாதான்
இருந்தேன் ஆனால் கொஞ்ச நாட்களாக வாழ்க்கையில் இருள் சூழ்ந்து விட்டது பண கஷ்டம்
வியாபாரத்தில் வருமானம் இல்லை நல்ல வேலை இல்லை
நல்ல சம்பளம் இல்லை அரச வாழ்வை பெற வேண்டும் என்றால் என்ன செய்வது ஒரு அரச
மர கன்றை கோவிலில் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும் ஏதாவது ஒரு கோவிலில்
அனுமதியை வாங்கிக் கொள்ளுங்கள் அந்த கோவிலில் உங்கள் கைகளால் அரச மரத்தை நட்டு
வையுங்கள் நட்டு வைத்துவிட்டு அதை கவனிக்காமல் விடக்கூடாது தினமும் தண்ணீர் ஊற்றி
அந்த செடியை பராமரித்து மரம் போல வளர்த்து விட்டீர்கள் என்றால் உங்களுடைய வம்சம்
எந்த கஷ்டமும் இல்லாமல் வளரும்
உங்கள்
குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையா ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் இவர்களுடைய
படத்தை சிறிய அளவில் வாங்கிக் கொள்ளுங்கள் பாக்கெட் சைஸில் கூட விற்கின்றது
இவர்களின் படத்தை படிக்கும் குழந்தைகளுக்கும் முன்பாக வைக்க வேண்டும் படிக்கும்
குழந்தைகளை இந்த படத்தின் முன்பு அமர்ந்து ஒரு இரண்டு நிமிஷம் கண்களை மூடி
வேண்டிக் கொள்ள சொல்லுங்கள் படிப்பு சரியாக வர வேண்டும் அறிவு சார்ந்த பிரச்சனைகள்
வரக்கூடாது வாழ்க்கையில் படித்து நன்றாக முன்னேற வேண்டும் என்று
நிச்சயமாக
இந்த ஒரு சின்ன வேண்டுதல் உங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுக்கும்
இவர்களுடைய திரு உருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து படித்தால் அறிவாற்றல் மேலும்
மேலும் அதிகரிக்கும் படித்து அறிவுத்திறனோடு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பற்றிய
கதையை உங்களுடைய பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள் அதுவும் ஒரு
தூண்டுகோலாக இருக்கும்
ராகு
கேதுவால் பிரச்சனையா பரிகாரம் செய்ய கையில் பணம் காசு இல்லையா திருமணம்
நடக்கவில்லை என்னதான் செய்வது நிறைய சிவன் கோவில்களில் நாகலிங்க மரம் இருக்கும்
அந்த நாகலிங்க மரத்திற்கு மஞ்சள் குங்கும போட்டு வைத்து இரண்டு விளக்கு ஏற்றி
வைத்து 25
முறை அந்த மரத்தை வலம் வந்தால் உங்களுக்கு ராகு கேது தோஷம் ராகு திசை கேது திசை நடந்து வாழ்க்கையில்
ரொம்பவும் பிரச்சனை இருந்தால் கூட அந்த
பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து வாழ்க்கையை நகர்த்திச் செல்லக்கூடிய தைரியம்
உங்களுக்கு வந்துவிடும் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம்
பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.
*அன்புடன்
༺🌷༻தமிழர்
நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி.
வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஆன்மீக குறிப்புகள் : கஷ்டங்கள் தீர ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரங்கள் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Simple spiritual remedies to overcome difficulties - Tips in Tamil [ spirituality ]