பாவம் புன்னியம் என்பது ஒவ்வொரு உயிரும் தனக்கு உடல் கிடைத்து பூமியில் வாழும் போது அவரவர் புன்னியத்தோடு பிறப்பது உண்டு...
பாவமும், புன்னியமும்
பாவம் புன்னியம் என்பது ஒவ்வொரு உயிரும் தனக்கு உடல் கிடைத்து பூமியில் வாழும் போது அவரவர்
புன்னியத்தோடு பிறப்பது உண்டு...
புன்னியத்தை (சுவாச அளவு) பாவமாக மாற்றி (சுவாச நட்டமாகும் பணிகளை செய்து) தன்னை
அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாகும்...
ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு சிறப்பான சக்தியை வரமாக பெற்றிருப்பது
உண்டு...
அந்த சக்தி ஒழுக்கமாக இருந்து தன் உடலை கோயிலாக மாற்றிவருபவருக்கு
பயன்படுவதாகும்...
ஆனால் அந்த சக்தியை ஒழுக்கமின்மையால் சுவாச நட்டம் செய்வது மட்டுமே
குறிகோளாக இருந்து மடிவதே விருப்பம் என அனைத்து உயிர்களும் இயங்குவதால் தன்
புன்னியத்தை பயன்படுத்த முடியாது...
ஆண்டவர் வெளிபடும் காலங்களில் தன் உடலில் உயிர் உள்ளபோதே ஒப்படைப்பது உத்தமம் கடமை...
பாவம் என்பது பிணி
அதாவது புன்னியத்தின்
அழுக்குகள் ஆகும்...
ஒழுக்கமாக இருந்தால் குறைவான அழுக்கு ஒழுக்கமற்று தன் உடலை வைத்து
இருப்பின் சரிக்கு சமமாக பாவங்கள் இருப்பது உண்டு...
பாவம் என்பது நோய்கள், சாபங்கள், கண்ணீர், காமம், காதல், பசி, பட்டினி, ஒழுக்கமின்மை, அவமானங்கள், நீதிமன்றம், காவல் நிலையம், துர்மரணங்கள், கற்றோர்கள் சாபம், பெண் சாபம், கர்பிணி சாபம், ஆசான் சாபம், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் சாபம் என பலவகைகள் உள்ளது...
பல உயிர்களை கொன்ற பாவம், கொன்று உண்ட பாவம், அதற்கு துணைபோன பாவம், ஊக்கம் கொடுத்த பாவம், ஒவ்வொரு உயிரும் சுமந்து இருக்கும்...
ஒழுக்கமாக இல்லாதவருக்கு தன் செயல்களால் வரும் பாவங்கள் கூடி அதிகமாகி
துன்பப்பட்டு மரணங்கள் ஆகும்...
துடிதுடித்த மரணம்,
விபத்துகள் பயம் நிறைந்த மரணங்களாகும்....
புன்னியம் என்பது தன் உடலை ஒழுக்கமாக பாதுகாத்து இல்லறவாழ்கை வாழ்ந்து
பாவங்களின் துயரங்களை படிப்படியாக குறைத்து தன் உடலுக்கு வரும் மரணத்தை பிறருக்கு
துயரத்தையோ வேதனைதுன்பங்களை கொடுக்காமல் தன் இறுதிகாலத்தை ஒழுங்கு படுத்தி
வைப்பவரே புன்னியவான் ஆகும்...
இல்லறவாழ்கை வாழும் ஒழுக்கம் பற்றிய தெளிவை பெற்றவன் உணவு ஒழுக்கம்
உடல் ஒழுக்கம் இல்லாதவரின் தொடர்புகளை அறுத்து கொள்ளும் தந்திரகாரனாகும்...
ஒரு இல்லறத்தான் தன்உடலுக்கு பாவம் செய்தால் ஐந்து லட்சம் பேர் செய்த
நல்பலனை வீணாக்கியதுக்கான தண்டனை மிக கொடுமையானது....
புனிதன்/புனிதர் என்பது ஆண்டவர் பரம்பொருளால் ஆட்கொண்டவர் ஆகும்....
பிணி ஒரு முறை தீர்க்க முடியும்... ஒரு முறை மட்டுமே தீர்த்து
கொடுப்பார்கள் மகான்....
அதன் பின் அவரவர் தன் உடலை ஒழுக்கமாக யாரையும் தொடவிடாது பார்த்து
கொள்வது மிக மிக அவசியம்....
பிணியின் முக்கியதுவம் தெரியாதவர்கள் உடலின் அருமை தெரியாதவர்கள்
எல்லாம் பிணி தீர நினைத்தால் வீணான பணி சிபாரிசு செய்தவருக்கும் பாவம் போய்
சேருவது உறுதி....
தன் உடலை இதற்குமேல் ஒழுக்கமாக வைக்கும் பாக்கியம் தனக்கு இல்லை எனில்
மரணத்தை தேடி செல்வது விருப்பம் எனில் புன்னியத்தை ஒப்படைத்து விட்டு பிறருடைய
சாபங்களை பாவங்களாக சேர்த்து எடுத்து சுமந்து தன் உடலை அழித்து விடுவது உண்டு....
மானிடபிறப்பு இல்லாத நிலை...
சிலர் பாவபுன்னியங்களை ஒப்படைத்தபின் வெளுத்து கிடைத்த தன் உடலை
ஒழுக்கமாக தூய்மையாக வைக்கும் தந்திரங்களை அறிந்து பணிவோடு செயல்படுவது உண்டு...
சிலர் மீண்டும் தன் உடலை சேற்றில்போட்டு பாழாக்கி விடுவதும் நிம்மதி
இல்லாத வாழ்கையும்,வாழ்ந்து அடுத்தபிறப்பு மானிடபிறப்பு கிடைக்காமலோ அப்படியே கிடைப்பின்
பலவித குறைபாடுகளோடு பிறந்து வேதனைபடுவதும் உண்டு.....
பாவபுன்னியத்தை மகான்கள்(அருளானவர்) வெளிபடும் காலத்தில் மகான்களிடம்
மட்டுமே கொடுக்க முடியும். அவரால் மட்டுமே பிணியை தீர்க்க முடியும்...
கொடுக்க முடியலை நம்பமறுப்பவர் நிலை?
கொடுக்காதவர் பாக்கியமில்லாதவர் மற்றும் காலஞ்சென்ற மகான்களின்
சாபத்துக்கு ஆளானவர் ஆகும்.
ஆனால் பூமியை விட்டு மறைந்தாலும் பேயாக வந்து அழுது புலம்பி திரிவதும்
தன் குடும்பங்களை நிம்மதி இன்றி வைத்து அலைவது உண்டு....
ஆனவத்தால் பிண உணவின் ருசியைத்தேடி அலைவதும், இரக்கமற்று பிண உணவுக்காக வாதிடும் செயலால் தன் உடலை நாசம் செய்து
வாழுவதும் துர்பாக்கியசாலிகள் ஆகும்... தன்னையும் அழித்து பிறரையும் அழிக்கும்
சாத்தான் குணங்களாகும்...
இல்லறத்தான் உணவு ஒழுக்கம் இல்லாத வழி செல்வோர்கள் உறவை முடிந்தவரை
குறைத்து கொள்வது உத்தமம்..
பாவம் புன்னியம் ஒப்படைத்தவர்கள் பிறவிகளை பற்றி அறிந்து தெளிவோடு
மகான்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பல உதவிகளை செய்து தன் உடலுக்கான
ஒழுக்கங்களை செயல்முறைபடுத்தி
தன் பிறப்பின் நிலைகளை உயர்த்தி கொள்வது உண்டு....
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
கர்மா : பாவமும், புன்னியமும் - குறிப்புகள் [ கர்மா ] | karma : Sin and virtue - Tips in Tamil [ karma ]