
மாலை ஆரத்தி மங்களம் பொங்கும் மாலை ஆரத்தி
சீரடி சாயி ஆரத்திப்
பாடல்கள்
மாலை ஆரத்தி
மங்களம் பொங்கும் மாலை ஆரத்தி
(1)
ஆரத்தி சாயி பாபா நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே
தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி சாயி பாபா
கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா
காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே எமக்கருள்வீரே ஆரத்தி சாயி பாபா
கருணையின் உருவே சாயிபாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப
அனுபவங்களைத் தந்து ஆதரிக்கும் பாபா அருள்தருவீரே அருள்தருள்வீரே ஆரத்தி சாயி பாபா
கலியுகம் தனிலே அவதாரநாதர் சற்குண பிரமம் சாயிபாபா திசைகள்
நான்கை ஆடையாய்க் கொண்ட
திகம்பரேஸ்வரா தத்தாவதாரா ஆரத்தி சாயி பாபா
வியாழக்கிழமை தோறும் ஆலயம் வந்து சம்சாரபந்தம் அறவே நீங்கிட
அருள் தந்தாய் தயாபரா சற்குருநாதா ஆனந்தம் தந்தாய் குருநாதா ஆரத்தி சாயி பாபா
குறைவற்ற செல்வமே உம் திருவடி சேவை அதுவே நீங்காத செல்வம்
அதுவே நீங்காதிருக்க அருள் புரிவீரே அகம் மகிழ்ந்திட நலம் தருவீரே ஆரத்தி சாயி
பாபா
சாதகப்பறவை என்ற மாதவனே உமக்கு ஆத்மசுகம் என்ற அற்புதநீரை
ஊட்டுகிறோம் ஊட்டுகிறோம் எமக்கு உறுதிமொழி தந்து காத்தருள்வீரே ஆரத்தி சாயி பாபா
ஆரத்தி சாயி பாபா நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து
அருள்வீரே தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி சாயி பாபா ஆரத்தி சாயி பாபா
(2)
சீரடியே பண்டரிபுரம் சாயியே எங்கள் விட்டல் சாயியே எங்கள்
விட்டல் சீரடியே பண்டரிபுரம் சீரடியே பண்டரிபுரம் சாயியே எங்கள் விட்டல் சாயியே
எங்கள் விட்டல் சீரடியே பண்டரிபுரம்
சந்திரபாகா நதியினைப் போல சீரடித்தலமே பக்திப் பிரவாகம்
நம்பினோரைக் காக்கும் தெய்வம் பண்டரிநாதா சாயி நாதா
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் எல்லோரும் கலியுக
தெய்வத்தைக் கண்ணாலே பாருங்கள் எங்களைக் காப்பாற்ற ஓடிவாரும் தாயே சாயி பாப தாயே
சாயி பாபா என்று தாஸ்கணு சொல்லி வணங்குகிறார். சீரடியே பண்டரிபுரம் சாயியே எங்கள்
விட்டல் சாயியே எங்கள் விட்டல் சீரடியே பண்டரிபுரம்
(3)
கண்களால் உம்மைப் பார்த்து மகிழ்வோம் அன்போடு உம்மைத் தழுவி
மகிழ்வோம் பக்தி மிகுதியால் ஆரத்தி சுற்றி பாதங்களை வணங்கி மகிழ்வோமே
தாயும் நீரே தந்தையும் நீரே உறவும் நீரே நட்பும் நீரே
சுல்வியும் நீரே செல்வமும் நீரே சகலமும் நீரே தேவ தேவா
உடல் வாக்கு மனம் புலன்கள் புத்தி ஆத்மா இயற்கைக் குணம்
அனைத்தால் ஆன செயல்கள் யாவையும் நாராயணனுக்கே அர்ப்பணிக்கிறோம் நாராயணனுக்கே
அர்ப்பணிக்கிறோம்.
(4)
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே (நான்கு தரம்)
(5)
பாபா அனந்தா எவ்வாறு துதிப்போம் நிலையான பாபா எவ்வாறு
துதிப்போம் ஆதிசேஷன் உம்மைப் பாடிக் களைத்தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம்
பாபா
தினமும் துதிப்போம் பாதங்கள் தம்மை அதனால் நிலைக்கும்
குருபக்தி மனத்தில் மாயங்கள் தாண்டி சம்சாரம் காப்போம் சாஷ்டாங்க நமஸ்காரம்
செய்கிறோம் பாபா.
நல்லோர்க்கு லீலைகள் புரிந்தவர் பாபா பொய்யானவர்க்கு
அரியவர் பாபா மெய்யானவர்க்கு எளியவர் பாபா சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா.
அரிது பெரிது மானிடப் பிறவி ஆன்மீகத்தாலே பயனை அடைவோம்
பாபாவின் பக்தி அகந்தை அகற்றும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா.
பாலகர் எங்கள் கரங்களைப் பற்றி கன்னத்தில் முத்தம்
தந்திடும் தாய் நீர் அமுதத்தை ஊட்டி அணைத்திடும் தாய் நீர் சாஷ்டாங்க நமஸ்காரம்
செய்கிறோம் பாபா.
தேவர்கள் வணங்கும் ஸ்ரீ சாயி நாதா சுக முனிவருக்கு நிகரான
பாபா காசி பிரயாகைக்கு நிகரான பாபா சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா.
கோபிகள் போற்றி வணங்கிடும் பாபா பரம்பொருளான உம்மைத்
துதிப்போம் பக்தர்க்கு அருளும் ஸ்ரீ சாயி பாபா சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம்
பாபா.
ஏழைகள் நாங்கள் இரு கரம் கூப்பி எப்போதும் தொழுவோம்
பாபாவின் நாமம் மயக்கத்தைப் போக்கி இன்பத்தைத் தருவீர் சாஷ்டாங்க நமஸ்காரம்
செய்கிறோம் பாபா சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா.
(6)
உலகினை ஆடையாய் அணிந்த சாயி பாபா. பாபா எண்ணற்ற உருவத்தில்
எங்கும் நிறைந்த சாயி பாபா பாபா
வேதத்தின் சாரம் நீரே தேவ தேவா அனுசூய அத்திரி குமாரா சாயி
நாதா சாயி நாதா
நீர் குளிப்பதும் ஜபிப்பதும் காசியிலே பிச்சை எடுப்பது
கோலாப்பூரிலே துங்கபத்ரா நீரைப் பருகிடும் பாபா மஹூரில் தங்கும் தேவா சாயி பாபா
சாயி பாபா
இடது தோளில் ஜோல்னாப் பையையும் வலது கையிலே டமருவும்
திரிசூலமும் ஏந்தி பக்தருக்கு ஆசி தந்து மகிழ்வூட்டும் பாபா முக்திக்கு வழி
காட்டும் சாயி நாதா சாயி நாதா
பாதத்தில் பாதுகைகள் அணிந்துள்ள பாபா சுமண்டலம் ஜபமாலை
கரங்களில் ஏந்தி மான் தோலை இடையில் அணிந்த பாபா தலையில் ஜடையும் நாக
கிரீடத்துடனும் விளங்கிடும் பாபா விளங்கிடும் பாபா
நாளும் தியானிக்கும் பக்தர் இல்லங்களில் லக்ஷ்மி வாசம்
செய்ய அருளிடும் பாபா குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுத்து குடும்பம் செழிக்க
அருள்கிறார் பாபா அருள்கிறார் பாபா
(7)
சச்சிதானந்த உருவமாய் விளங்கி படைத்தல் காத்தல் அழித்தல்
செய்து பக்தரின் எண்ணம் போல் வந்த இறைவா சற்குரு சாயி நாதா வணக்கம் வணக்கம்.
அஞ்ஞான இருள் நீக்கும் கதிரவன் நீரே மனம் வாக்குத் தமக்கு
எட்டாத தலைவா குறையற்ற குணத்தோடு விளங்கிடும் வித்தகா சற்குரு சாயி நாதா வணக்கம்
வணக்கம்.
பக்தியோடு உம்மை வணங்கும் பக்தர்க்கு சம்சாரக் கடல்
கடக்கும் தோணியாய் விளங்கி காப்பற்றி அருள அவதரித்த தேவா சற்குரு சாயி நாதா
வணக்கம் வணக்கம்.
வேம்பின் அடியில் எப்போதும் இருந்து அமுதத்தை அதன் மீது
எப்போதும் பொழிந்து கசப்பான இலையை இனிப்பாகச் செய்யும் சற்குரு சாயி நாதா வணக்கம்
வணக்கம்.
கற்பகத் தருவான வேம்பின் அடியில் பணிவுடன் சேவை செய்திடும்
பக்தர்க்கு ராஜபோகத்தையும் முக்தியையும் அளித்திடும் சற்குரு சாயி நாதா வணக்கம் வணக்கம்.
விவரிக்க இயலாத வினோதங்கள் புரிந்து அற்புதச் செயல்களால்
சக்திதனைக் காட்டி இனிமை எளிமை கொண்ட இறைவா சற்குரு சாயி நாதா வணக்கம் வணக்கம்.
சாதுக்கள் இளைப்பாற இடம் தரும் குருவே நல்லோர்கள் மகிழ்ந்து
துதித்துடும் தேவா பக்தர்க்கு நல்லருள் வழங்கிடும் பாபா சற்குரு சாயி நாதா வணக்கம்
வணக்கம்.
பிறப்பற்ற வரம் பெற்ற பிரம்ம ஸ்வரூபா சுயம்புவாய் அவதரித்த
ஸ்ரீராமனே உன்தன் தரிசனத்தால் புனிதமானோம் தேவா சற்குரு சாயி நாதா வணக்கம் வணக்கம்
சற்குரு சாயி நாதா வணக்கம் வணக்கம்.
(8)
எமது தாய் தந்தை மனைவி குழந்தைகள் சோதரன் சோதரி
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள
வேண்டும்.
மகள் மருமகன் சகோதரன் அவன் மனைவி உற்றார் உறவினர்
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள வேண்டும்.
குழந்தைகள் இளையோர் முதியோர் நல்லவர் தீயவர் தூயவர்
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள வேண்டும்.
துறவிகள் ஞானிகள் பண்டிதர் தவசிகள் அரசன் சேவகன்
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள
வேண்டும்.
கவிகள் சித்தர்கள் வன தேவதைகள் பைசாசப் பிசாசுகள்
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள
வேண்டும்.
பிராணிகள் பறவைகள் கிருமிகள் மலைகள் நதிகள் சமுத்திரம்
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள
வேண்டும்.
கின்னரர்கள் யக்ஷிணிகள் இந்திரன் எமன் சந்திரன் சூரியன்
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள
வேண்டும்.
வாக்குச் சபலம் சித்தம் உடல் எங்கும் உள்ள காலம்
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள வேண்டும்.
மூடன் என்று பிறர் எம்மை நகைக்கட்டும் பொறாமை என்ற பாம்பு
கோபப்பட்டாலும் சற்குருவான சாயி மாதா மட்டும் எம்மைக் கோபிக்காமல் காத்தருள
வேண்டும்.
விருப்பு வெறுப்பற்ற எம் இதயத்தில் இருப்பீர் குரு உங்கள்
பாதங்களில் பக்தி பொங்கட்டும் உலகம் முழுதும் சாயி மாதாவகத் தோன்றட்டும் ஜெய் சாயி
நாதா - ஜெய் சாயி மாதா ஜெய் சாயி நாதா - ஜெய் சாயி மாதா
(9)
ஓம் என்ற பிரணவ மந்திரத்தால் எவன் ஒருவன் யாகம் முதலிய
அறச்செயல்களைச் செய்து ஒளி பொருந்திய தோற்றத்தோடு விளங்குகிறானோ அவன் மட்டுமே
கடவுளின் அனுக்கிரகத்துடன் அவரோடு ஐக்கியமாகி அவர் அருளைப் பெறுகிறான்.
ஓம் ராஜாதி ராஜனாகிய உம்மை மனப்பூர்வ மாகவும்
ஐக்கியத்துடனும் உம்முடைய அருளைப் பெற்றவனால் மட்டுமே உம்மைப் பூஜிக்கும்
அனுக்கிரகத்தைப் பெற முடியும். அவ்வாறு அருள் பெற்றவனுக்கு மட்டுமே குபேரனைப்
போன்ற செல்வமும் அளவிட முடியாத ஆனந்தமும் அரசனைப் போன்ற வாழ்க்கையும் கிடைக்க
அருள்புரிகிறீர்.
உலகம் போற்றும் தனது நாட்டிலும் பேரும் புகழும் கிட்டும்.
அங்கு துன்பங்கள் இருப்பதில்லை. உலகோர் அனைவராலும் போற்றப்படுவான் அப்படிப்பட்ட
பக்தனுக்கு அளவற்ற ஆயுளையும் ஆனந்தத்தையும் நீர் அருள்கிறீர். நிலம் நீர் ஆகாயம்
உள்ளளவும் அவன் போற்றப்படுகிறான்.
எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் வாயாரப் பாடி
மனமாறத் துதிக்கிறானோ அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாசம் செய்து அனுக்கிரகம்
செய்து அருள்பாலிக்கிறீர்.
(10)
உம்மைச் சரணடைந்த பக்தர்கள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ
முற்பிறவியில் செய்த செயல்களாலோ வாக்கினாலோ உம் கதையைச் சொல்லும் போது ஏற்படும்
பிழைகளாலோ. அடுத்தவரைப் பார்த்திடும் பார்வையாலோ, மனத்தால்
தினம் தினம் செய்திடும் எல்லாத் தவறுகளையும் மன்னித்துக் அருள் பாலிக்கும்
பிரபுவாகிய கருணையுடன் சாயிநாதரே, சச்சிதானந்த சொரூபியாய் காட்சி அருள்பாலிப்பவரே.
எல்லோருக்கும் அளித்து சகல மங்கலங்களும் உண்டாக அருள்புரிவீராக!
ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத மகராஜ் கி ஜேய்
ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா : சீரடி சாயி ஆரத்திப் பாடல்கள் - மாலை ஆரத்தி [ ] | Spiritual References: Sai Baba : Sirdi Sai Aarti Songs - Evening Aarti in Tamil [ ]