சிவகங்கை மாவட்டத்தில் மிகப் பிரசித்திப் பெற்ற ஆலயம். வெட்டுடையார் காளி கோயில்! இந்தக் காளீஸ்வரி மிகுந்த சக்தி படைத்தவள்.
சிவகங்கை மாவட்டம்: வெட்டுடையார் காளி கோவில்!
சிவகங்கை மாவட்டத்தில் மிகப் பிரசித்திப்
பெற்ற ஆலயம். வெட்டுடையார் காளி கோயில்! இந்தக் காளீஸ்வரி மிகுந்த சக்தி படைத்தவள்.
"என் சொத்தை அநியாயமாகப் பறித்துக்கொண்டாள்.
ஆதரவற்ற எனக்கு ஆதரவாய் யாரும் இல்லை. காளியே, நீதான் எனக்குத் துணை!'' இவ்வாறு இந்தக் காளியம்மனிடம் முறையிட்ட சில மாதங்களில், எதிரியே பாதிக்கப்பட்டவரிடம் சரண் அடைகிறான்!
பறி போன சொத்து மீண்டும் கிடைக்கிறது!.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே, கொல்லங்குடியை அடுத்த அரியாக் குறிச்சியில், இந்த 'வெட்டுடையார் காளி' கோலோச்சுகின்றாள்.
பொதுவாக, காளியம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் இருப்பாள். ஆனால் இந்தக் கோவில் மேற்கு
நோக்கி, வெகு கம்பீரமாக காட்சி தருகிறது. காளி எட்டுத் திருக்கரங்களோடு
மேற்கு திசை பார்த்தவாறு
அருள்பாலிக்கின்றாள்!
இந்தக் கோவிலின் தல விருட்சம், ஈச்ச மரம். கோவிலின் தென் புறத்தில்
சுவாதி தீர்த்தம் காணப்படுகிறது. முக்கியத் திருவிழாவான பங்குனி சுவாதி திருவிழா, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது!
தீராத நோயினால் பாதிக்கப்பட்டு குணம்
கிடைக்காத கணவன்மார்களின் மனைவியர், அரியாக்குறிச்சி காளி கோயிலில் தாலி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்
கொள்கின்றனர்.
இந்த வேண்டுதலால் அதிசயம் நிகழ்கிறது.
உயிருக்குப் போராடிய கணவர் உயிர் பிழைக்கிறார்! அதன் பிறகு ஒருநாள் இந்தக் கோவிலுக்கு
வரும் அவரது மனைவி, தான்
வேண்டிய படியே தனது தாலியைக் கழற்றி இந்தக் கோவிலுக்கு காணிக்கையாகச் செலுத்தி விடுகிறார்.
ஆண்டுதோறும் ஏராளமான தங்கத் தாலிகள் இவ்வாறு காணிக்கையாக வருகின்றன.
அதேபோல், கொடுக்கல், வாங்கலில் பிரச்சனை வந்தால், சிவ கங்கை ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு
இன்னமும் தீர்ப்பளிக்கும் இடமாக இந்த வெட்டுடையார் காளி கோவில் இருந்து வருகிறது.
இரு தரப்பினரும் இங்கே வந்து அன்னையின்
முன்பு சத்தியம் செய்ய வேண்டும் என்பர். இதில் தவறு இருக்கும் தரப்பினர் பாதிக்கப்படுவது
உறுதி. எனவே அதற்கு முன்பே தமது தவறை ஒப்புக்கொண்டு விடுவர்.
தாங்க முடியாத தொல்லை கொடுக்கும் எதிரிகளைக்
கட்டுப்படுத்துமாறு வேண்டி, இங்கு
காசு வெட்டிப் போட்டால் அன்னை எதிரிகளை துவம்சம் செய்வதைக் கண்கூடாக பார்க்கலாம். இந்த
காளியம்மன் சன்னிதிக்குப் பின்புறம் காசு வெட்டிப் போடும் இடம் உள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : சிவகங்கை மாவட்டம்: வெட்டுடையார் காளி கோவில்! - காளீஸ்வரி, காளியம்மன் [ அம்மன் ] | Amman: History : Sivagangai District: Vetudaiyar Kali Temple! - Kalishwari, Kaliamman in Tamil [ Amman ]