மண்டைக்காடு, தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளப் பெண்களே அதிக அளவில் இருமுடி தாங்கி வருவது சிறப்பு மிக்கது!
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயில்!
மண்டைக்காடு, தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளப் பெண்களே
அதிக அளவில் இருமுடி தாங்கி வருவது சிறப்பு மிக்கது!
நாகர்கோவிலில் இருந்து 21 கி.மீட்டர் தூரத்தில் மண்டைக் காடு
அமைந்திருக்கிறது. நாகர் கோவிலில் இருந்தும், கன்னியாகுமாரி - மார்த்தாண்டம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும்
பஸ் போக்குவரத்து வசதி உள்ளது இக்கோவிலுக்கு!
அரபிக் கடல் ஓரம் அமைந்துள்ள மண்டைக்காடு
பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது!. பத்து
நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கு பெண்கள் இருமுடி தாங்கி வருகிறார்கள்!
இங்குள்ள அம்மன்சிலை புற்றுமண்ணினால்
ஆனது. இந்தச் சிலை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. கோவிலுக்குள் செல்லாமல்
வெளியே நின்றுகொண்டே இங்குள்ள அம்மனைத் தெள்ளத் தெளிவாகப் பார்த்து தரிசனம் செய்யலாம்.
இந்த அரிய பாக்கியம் வேறு எங்கும் கிடைக்காது!!.இந்த மண்டைக்காட்டு பகவதி அம்மனைத்
தரிசிக்க வரும் பெண்கள், 'மண்டைக்காட்டு
அம்மே சரணம்...' என்று கோஷமிட்டவாறே கோவிலுக்குள் செல்வது
மெய்சிலிர்க்க வைக்கிறது!
இந்த மண்டைக்காடு பகவதி அம்மனின் கோவிலில்
மீன் ஆடு கோழியை கறி சமைத்துச் சாப்பிடுகிறார்கள்!
பூஜையில் படைத்த அன்னத்தை வாய் பேசாக்
குழந்தைகளுக்கும் கொடுத்தால், அவர்களுக்கு
பேச்சு வரும் என்பது நன்னம்பிக்கையாக உள்ளது. நேர்ச்சையின் பேரில் ஆண் குழந்தைகளுக்கு
உடலில் அழகு குத்தும் 'குத்தியோட்டம்
நிகழ்ச்சியும், பெண் குழந்தைகள் மாவிளக்கு ஏந்தி வருதலும்
பத்தாம் திருநாளில் இடம் பெறுகிறது.
உடல் நலக் குறைவு உள்ளவர்களுக்காக கால், கை, தலை போன்ற உறுப்புக்கள் மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய்கிறார்கள்.
அவற்றை வாங்கி, பாதிக்கப்பட்ட உடல் மீது தடவி இக்கோவில்
மண்டபத்தில் போட்டால் அவர்களது உடல் நிலை சரியாகும் என்று நம்பப்படுகிறது!!
நமது தமிழகத்தில் கலாச்சாரப் பண்டிகையாகக்
கொண்டாடப்படுவது தைப்பொங்கல் இதே போன்ற பிரம்மாண்டப் பொங்கல் விழா கேரளாவில் கொண்டாடப்படுகிறது.
இது ஆன்மீகப் பொங்கல் விழா எனப்படுகிறது!!
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும்
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்தான் இந்தப் பிரம்மாண்ட பொங்கல் விழா
நடைபெறும் ஆலயம். ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்தப் பொங்கல்
விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் தூய்மையாக விரதம் இருந்து பொங்கல் வைத்து, பகவதி அம்மனை பக்தி சிரத்தையோடு வழிபடுகிறார்கள்.
இந்த விழா கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று..
'உலகத்தில் அதிக அளவில் பெண்கள் பங்கு
கொள்ளும் விழா இது' என்று
கின்னஸ் புத்தகத்தில் இந்தப் பொங்கல் விழா சாதனையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் மதுரையை
எரித்த கற்புக் கரசி கண்ணகியே என்கிறார்கள். தனது கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை
நிரூபித்த கண்ணகி, மதுரையை
எரித்துவிட்டு, அன்று சேர நாடாக இருந்த கொடுங்கல்லூர்
சென்று விண்ணுலகம் எய்தினாள். அவ்வாறு செல்லும் வழியில் அவள் இன்றைய ஆற்றுக் கால் பகுதியில்
இளைப்பாறினாள். பின்னாளில் அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது! கண்ணகியே ஆற்றுக்கால்
பகவதி ஆனாள் என்கிறது இக்கோவில் வரலாறு!!
இதை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும்
இந்தப் பொங்கல் விழாவில் கண்ணகி கதையைச் சொல்லும் நிகழ்ச்சியை நடத்து கிறார்கள். தினமும்
கண்ணகி கதையின் ஒவ்வொரு சம்பவத்தையும் கதையாகச் சொல்கிறார்கள். ஒன்பதாம் நாளில் பாண்டிய
மன்னன் சபையில் சத்தியத்தை நிலைநாட்டி விட்டு, மதுரையைத் தீக்கு இரையாக்கி விட்டு, பத்தாம் நாள் கேரளாவில் கண்ணகி தேவியாக ஆராதனை செய்யப்பட்டது குறித்தும் கதை
சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் கன்னிப் பெண் களுக்குத்
திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும் என்பதால் கன்னியர் கூட்டம் அதிக அளவில்
காணப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயில்! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Skull Forest: Bhagwati Amman Temple! - Amman in Tamil [ Amman ]