அடிமைகளின் அடிமை

குறிப்புகள்

[ சிந்தனை சிறு கதைகள் ]

Slave of slaves - Tips in Tamil

அடிமைகளின் அடிமை | Slave of slaves

'வெற்றி கொள்வதற்கு இந்த உலகில் இனி நாடே இல்லை" என்று கவலைப்பட்டவன் மாவீரன் அலெக்சாண்டர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

அடிமைகளின் அடிமை

'வெற்றி கொள்வதற்கு இந்த உலகில் இனி நாடே இல்லை" என்று கவலைப்பட்டவன் மாவீரன் அலெக்சாண்டர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

இவன் கி.மு.356 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி மாஸி டோனியாவின் மன்னர் பிலிப்ஸின் மகனாகக் கிரேக்க மண்ணில் பிறந்தான். புத்திக்கூர்மையும், புத்தி சாதுரியமும் நிறைந்தவனாக வளர்ந்தான். கிரேக்கப் பேரறிஞன் சோக்கிரட்டீஸின் முதன்மை மாணாக்கன் பிளேட்டோ.

பிளேட்டோவின் முதன்மை மாணாக்கன் அரிஸ்டோட்டில். அரிஸ் டோட்டில் அலெக்சாண்டருக்குக் குரு.

கி.மு. 336இல் மன்னர் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்டபின் தனது இருபதாவது வயதில் இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மன்னனானான்.

எல்லா நாடுகளையும் வெற்றி கொள்ள வேண்டும், பேரரசனாகப் பெருவீரனாகப் புகழப்பட வேண்டும் என்ற ஆசை ஒரு வெறியாக அவனுக்கு ஏற்பட்டது.

அயல் நாடுகள் யாவற்றையும் வெற்றி கொண்டான்.

ஆசியாக் கண்டத்து நாடுகளையும் வெற்றி கொண்டு இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் புறப்பட்டான்.

தனது குருவின் ஆசியைப் பெற்றான்.

அரசியல் நுட்பங்களை அறிந்து கொண்டான்.

விடைபெற்றுச் செல்வதற்காகத் தனது மனைவி றொக்சானாவிடம் சென்றான்.

'நான் வெற்றியோடு திரும்பி வரும் போது உனக்கு என்ன பரிசு கொண்டு வர வேண்டும்" என்று கேட்டான்.

"இந்தியாவில் முக்காலமும் உணர்ந்த ஞானிகள், யோகிகள், ரிஷிகள், முனிவர்கள் இருக்கிறார்களாம்.

''அவர்களில் ஒருவரை அழைத்து வாருங்கள்” என்றாள் றொக்சானா. விடைபெற்றுச் சென்ற அலெக்சாண்டர் இந்தியா வரையுள்ள எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டு கைப்பற்றினான்.

இந்துச் சமவெளியைக் கடந்து பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினான். அதைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளைக் கைப்பற்ற அவனது படை வீரர்கள் மறுத்தனர்.

ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து செய்த யுத்தத்தினாலும் பன்னிரண்டாயிரம் மைல்கள் கடந்து வந்த களைப்பினாலும் தம் நாட்டுக்குத் திரும்புவதையே அவர்கள் விரும்பினர்.

அலெக்சாண்டருக்கு வேறு வழி தெரியவில்லை.

தன் நாட்டுக்குத் திரும்ப விரும்பினான்.

தான் கைப்பற்றிய நாட்டை அங்கு முன்பு ஆட்சி செய்த போரஸ் என்ற மன்னனிடமே ஒப்படைத்தான்.

தன் அன்பு மனைவி கேட்ட பரிசைத் தேடத் தொடங்கினான்.

முதலில் ஒரு ஞானியைப் பற்றிக் கேள்விப்பட்டான்.

அவரை அழைத்து வரத் தூதுவர்களை அனுப்பினான்.

தூதுவர்கள் சென்றனர்.

அவர் தியானத்தில் இருந்தார்.

அசையவில்லை.

அழைத்தார்கள்.

பதில் சொல்லவில்லை.

அரசனிடம் சென்று அந்த ஞானி வர மறுத்ததைக் கூறினார்கள்.

அரசன் தானே நேரில் சென்றான்.

காலைப்பொழுது.

கிழக்குத் திசையைப் பார்த்தபடி கண்களை மூடித் தியானத்தில் இருந்தார் அந்த ஞானி.

அலெக்சாண்டர் அவர் முன்னே வந்து நின்றான்.

"நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்" என்றான். அவர் கண்திறந்து பார்க்கவில்லை. எதுவும் பேசவில்லை.

"நான் மகா அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்' என்றான். அப்போதும் அவர் கண்திறந்து பார்க்கவில்லை.

வாய்திறந்து பேசவில்லை.

''உலகம் முழுவதையும் வெற்றி கொண்ட மகா அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் தருவேன்." என்றான்.

அவர் கண்விழித்துப் பார்த்தார்.

கொஞ்சம் விலகி நில். சூரிய வெளிச்சம் வேண்டும்" என்றார்.

அலெக்சாண்டருக்கு அப்போது தான் இந்திய ஞானிகளின் உளப்போக்குப் புரிந்தது.

சிரித்துக் கொண்டே திரும்பிச் சென்றான்.

எப்படியாவது ஒரு ஞானியை அழைத்துச் செல்ல வேண்டுமே.

தன் அன்பு மனைவிக்குப் பரிசளிக்க வேண்டுமே என்று மீண்டும்

முயன்றான்.

இன்னொரு ஞானியைப் பற்றிக் கேள்விப்பட்டான்.

முன்போல தூதுவர்களை அனுப்பினான்.

ஆனால் பயனில்லை.

தானே நேரில் சென்றான்.

அதிகாரத்தோடு அச்சுறுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம்

அவனுக்கு ஏற்பட்டது.

தியானத்தில் இருந்தார் ஞானி.

'நான் மகா அலெக்சாண்டர் வந்திருக்கிறேன் என்னோடு நீங்கள் வர

வேண்டும்" என்று கர்வத்தோடு சொன்னான்.

அவர் “அது முடியாது" என்றார்.

"நான் இந்த நாட்டைக் கைப்பற்றி இருக்கிறேன்.

நானே அரசன். என் ஆணையை யாரும் மீற முடியாது. நீங்கள் யாவரும் என் அடிமைகள்.

என் ஆணைக்குக் கட்டுப்படாது விட்டால் கொன்று விடுவேன்" என்று மிரட்டினான்.

அவர் பதில் சொல்லவில்லை. பயப்படவில்லை. சாந்தமாகப் புன்னகை பூத்தார்.

அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

தனது வாளை உருவினான்.

ஞானி சிரித்தார்.

உன்னால் என்னைக் கொல்ல முடியாது.

ஏனெனில் நானென்பது இந்த உடலல்ல" என்றார்.

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவர் தொடர்ந்தார்.

நீ என் அடிமைகளின் அடிமை.

அதனால் என்மேல் அதிகாரஞ் செலுத்த உனக்கு உரிமை இல்லை" என்றார்.

அலெக்சாண்டருக்குக் கடுங்கோபம் வந்தது.

"நானெப்போது உங்கள் அடிமைகளுக்கு அடிமையானேன். உங்கள் எந்த அடிமை என்னை வெற்றி கொண்டான்" என்று கோபத்தோடு கேட்டான்.

"நான் நீண்டகாலமாகப் போராடி, கோபத்தையும், ஆசையையும் வென்று அவற்றை என் அடிமைகளாக்கி வைத்திருக்கிறேன்." ஆனால் நீயோ கோபத்துக்கும் ஆசைக்கும் அடிமையாகி இருக்கிறாய். “அதனால் நீ என் அடிமைகளின் அடிமை" என்றார். வெறுங்கையோடு திரும்பிச் சென்றான் அலெக்சாண்டர்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சிந்தனை சிறு கதைகள் : அடிமைகளின் அடிமை - குறிப்புகள் [ ] | Thought short stories : Slave of slaves - Tips in Tamil [ ]