நமது வீட்டில் உணவு பஞ்சம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அரிசி பானையில் ஒரு பொருள் இருந்தால் போதும்...... , குதிர்

[ ஆன்மீக குறிப்புகள் ]

So that there is no food shortage in our house. - It is enough to have one thing in the rice pot...... , Kudir in Tamil



எழுது: சாமி | தேதி : 15-05-2024 12:44 pm
நமது வீட்டில் உணவு பஞ்சம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? | So that there is no food shortage in our house.

இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

நமது வீட்டில் உணவு பஞ்சம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 

அரிசி பானையில்  ஒரு பொருள் இருந்தால் போதும்......       

 

இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

 

நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், பணம் கட்டாயம் தேவைதான். இருப்பினும் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களையும் முக்கியத்துவம் கொடுத்து மதிக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவு பண்டங்களை வாங்கி வைத்து வீணாக்க கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

இன்றைய சூழ்நிலையில் ஒரு வேளைக்கு, ஒரு கைப்பிடி அளவு சாதம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் ஏராளம்.

 

ஆனால் அந்த சாதத்தை, அந்த அரிசி நம்மிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தேவைக்கு அதிகமாக சமைத்து அதை கீழே கொட்டுவது என்பது மிகப்பெரிய தவறு. நீங்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, உங்களிடம் பணம் காசு நிறைய இருந்தாலும் சரி, சாப்பிடும் சாப்பாட்டை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

 

நாம் இன்றைக்கு செய்யக்கூடிய தவறு, ஒரு பருக்கை அரிசி என்பது, ஒருநாளைக்கு நம்முடைய வீட்டில் பஞ்சத்தை ஏற்படுத்த ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது அல்லவா? சரி, நம்முடைய வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்றால், அரிசியை நாம் எப்படி நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

 

அந்த காலத்தில் உணவு சம்பந்தப்பட்ட நெல் அரிசி கம்பு கேழ்வரகு கோதுமை இப்படிப்பட்ட தானியங்களை எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட

 

 குதிர்

 

என்று சொல்லப்படும் பெரிய அளவிலான ஒரு மண்பானையில் தான் வீட்டில் வைத்து பாதுகாத்து, சேமித்து வந்தனர். காசு பணம் குறைவாக இருந்தாலும் அப்போது நம்முடைய வாழ்க்கை நிறைவாக இருந்தது.

 

இன்றைய கால சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக்கூடிய பல நல்ல பலன்களில், சில கெடுதல்களும் சேர்ந்தே தான் இருக்கின்றது.

 

அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் உங்களது சமையலுக்கு பயன்படுத்தி வரும் அரிசியை உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் சில்வர் பாத்திரத்தில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் கவரில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, அல்லது அரிசி மூட்டையாக வைத்து இருந்தாலும் சரி, அதன் உள்ளே எப்போதுமே ஒரு சிறிய மண்பானையை வைத்து, அந்த மண் பானை நிரம்ப அரிசியை வைக்க வேண்டும்.

 

 மண் டம்ளர் இருந்தால் கூட போதும். இப்போதெல்லாம் மண் டம்ளர்கள் கிடைக்கின்றது. அதை வாங்கி அரிசியை அளக்க ஆழாக்காக பயன்படுத்தினாலும், அது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

 

உங்கள் வீட்டு அரிசி டப்பாவில், அரிசி மூட்டையில் அரிசி தீர்ந்து போனாலும் எப்போதும் இந்த சிறிய மண் குடுவையில் அரிசி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் நிச்சயம் பல நல்ல மாற்றங்களை உங்களுக்கு இந்த ஒரு சிறிய பரிகாரம் தேடித் தரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

 

ஒரு மண் பானையை வைத்து விட்டால் நம்முடைய வாழ்க்கையில், கஷ்ட நஷ்டங்கள் மாறிவிடுமோ என்ற கேள்விகளை எழுப்பும் சிலரும் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.

 

கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்து வைத்திருந்தும், தன்னுடைய வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை அடுக்கி வைத்து இருந்தும் ஒரு வாய் சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியாதவர்களும் இந்த பூலோகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பிடி அளவு அரிசியை காசுகொடுத்து வாங்க முடியாமல் பசியால் வாடுபவர்களும் இந்த உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

 

அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு ஆண்டவன் உங்களுக்கு சக்தியை கொடுத்து இருக்கின்றாரா? மண்பானையில் வைத்திருக்கும் அந்த அரிசியோடு சேர்த்து, உங்களால் முடிந்த அரிசியை வாங்க இயலாதவர்களுக்கு, இயன்ற போது தானம் கொடுத்து வரும் பட்சத்தில், உங்களுக்கும் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும், அரிசி வாங்க கூட காசு இல்லை என்ற கஷ்டம் வராது.

 

தெரிந்து கொள்வோம்......


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : நமது வீட்டில் உணவு பஞ்சம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? - அரிசி பானையில் ஒரு பொருள் இருந்தால் போதும்...... , குதிர் [ ] | ஆன்மீக குறிப்புகள் : So that there is no food shortage in our house. - It is enough to have one thing in the rice pot...... , Kudir in Tamil [ ]



எழுது: சாமி | தேதி : 05-15-2024 12:44 pm