நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்

மனநிலை

[ மனம் ]

Some psychological facts that will surprise us Search for this on Google - Mind in Tamil

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் | Some psychological facts that will surprise us Search for this on Google

உண்மை 1: 3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும். உண்மை 2: உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்..

 உண்மை 1: 

3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.

 உண்மை 2: 

உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

 உண்மை 3: 

ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

 உண்மை 4 : 

சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.

 உண்மை 5: 

முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

 உண்மை 6 : 

பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

 உண்மை 7: 

இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

 உண்மை 8: 

ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

 உண்மை 9: 

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3,000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?

 உண்மை 10: 

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்..


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

மனம் : நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் - மனநிலை [ ] | The mind : Some psychological facts that will surprise us Search for this on Google - Mind in Tamil [ ]