நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கூடாத சில விஷயங்கள் !
நமது நடைமுறை வாழ்க்கையில்
செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன
அவை
1. கன்றுக்குட்டி, மாடு ஆகிய இவற்றைக்
கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2. தண்ணீரில் தன் உருவத்தைப்
பார்க்கக்கூடாது
3. நிலையில் அமரக்கூடாது
4. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5. தரையில் கை ஊன்றிச்
சாப்பிடக்கூடாது
6. துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7. சூரியனுக்கு எதிரில் மலஜலம்
கழிக்கக்கூடாது
8. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9. அசுத்தமான பொருள்களை நெருப்பில்
போடக்கூடாது
10. துடிதுடிக்கப் புழுபூச்சிகளை
நெருப்பில் போடுவது பிரம்மஹத்திதோஷம் ஆகும்
11. ஆலயத்தில் இரவுநேரத்தில்
குளிக்கக்கூடாது, கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்
12. ஈரத்துணியைத் தண்ணீரில்
பிழியக்கூடாது, உதறக்கூடாது
13. பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு
நாள்கள் வரை, கோவிலுக்குப் போக்ககூடாது.
எக்காளம், பேரிகை, சங்கு, இயந்திரம், வண்டி,
உரல், உலக்கை, செக்கு,
யானை சண்டை ஆகியவற்றின் சத்தம் கேட்கும்போது சாப்பிட உட்காரலாகாது!
மேலும் சாப்பிடும்பொழுது விளக்கு
அணைந்துவிட்டால், சூரியபகவானைத் தியானம் செய்து மீண்டும் விளக்கு ஏற்றிவிட்டுச் சாப்பிட
வேண்டும், இருட்டில் அமிர்தமே ஆனாலும் ஒரு பொழுதும்
சாப்பிடக்கூடாது, அந்தி, சந்தி
வேளைகளிலும், விளக்கு வைத்தவுடனும் சாப்பிடக்கூடாது,
எந்நாளில் முடி வெட்டக்கூடாது ?
சதுர்த்தி,சதுர்த்தசி,சஷ்டி,பௌர்ணமி,நவமி ஆகிய
திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது
வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை,
வலதுப் பக்கமாய்ச் செல்ல வேண்டும் !
நடந்து செல்லும்பொழுது, பசு, தெய்வசப்பரம், நெய்க்குடம், அரசமரம்,
வில்வமரம், நெல்லிமரம், அரசுடன் சேர்ந்த வேம்பு ஆகியவை
குறுக்கிட்டால் வலப்பக்கமாய்ச் சுற்றிப் பிரதட்சணமாய்ப் போக வேண்டும் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சுபத்தடை ஏற்படும் !
நல்ல காரியங்களைப் பற்றி பேசும்போதும், சுபகாரியத்தை
முடிப்பது பற்றிய பேச்சில் ஈடுபட்டிருக்கும் போதும் எள் அல்லது எண்ணெயைப் பற்றிப்
பேசுதல் கூடாது அதனால் சுபத்தடை ஏற்படும்!
எவ்வாறு சாப்பிடக்கூடாது ?
ஈரத்துணியுடனும், துண்டுடனும்
சாப்பிடக்கூடாது, தெருக்கதவைச் சாத்தாமலும், சந்திரனின் நிழலிலும், கொள்ளிக்கட்டையின்
வெளிச்சத்திலும் நடுநிசியிலும், பிரதோஷகாலத்திலும், இருட்டிலும், திறந்த மாடியிலும், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்! ஆனால், பௌர்ணமியன்று
நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடாமல் பலருடன் கூடிச்சாப்பிடலாம்!🙏🌹
அன்புடன்....
༺🌷༻தமிழர்
நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஆன்மீக குறிப்புகள் : கூடாத சில விஷயங்கள் ! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Some things that should not be! - Tips in Tamil [ spirituality ]