தென்திருப்பேரை (சுக்ரன்) - நவதிருப்பதி

ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு

[ ஆன்மீக குறிப்புகள் ]

South Thiruperai (Sukran) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil

தென்திருப்பேரை (சுக்ரன்) - நவதிருப்பதி | South Thiruperai (Sukran) - Navathirupati

தாமிரபரணிக் கரையின் தென்கரையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ,ல் இத்தலம் உள்ளது.

தென்திருப்பேரை (சுக்ரன்) - நவதிருப்பதி

 

தாமிரபரணிக் கரையின் தென்கரையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ,ல் இத்தலம் உள்ளது. பேருந்து வசதி உண்டு. 16.6,95 அன்று மகா சம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.

 

தல வரலாறு:

ஸ்ரீமத் நாராயணன் திருமலை விடுத்து பூமா தேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல்தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனோ தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் திறமும் வேண்டும் என கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க. கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டர். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர்அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக திருமாலுக்க அளித்து மகிழ்ந்தார். தேவர்கள் பூக்களை  மாரி சொரிய பூமா தேவியினுடைய  மேனியானது மிகவும் அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்ததால் ஸ்ரீபேரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர, குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பெருாளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிரார்த்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார். விதர்ப்ப நாட்டினுடைய  மன்னன் ஆனவன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் மொத்த அதாவது 12 வருட பஞ்சம் நீங்கி நாடு மிகவும் செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நந்சியார். வேதம் ஓதி வரும் வேத வித்களை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது. "வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக்குழா விளையாட்டு ஒலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே" என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்பே அமையப் பெற்றது. இக்கோவில் பின்னே பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் அதனுடைய கொடி மரமும், மண்டபமும், பின்னே வெளி மண்டபம் மற்றும் தேரும் செய்யப்பட்டுள்ளதாக வரலாற்று கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்க அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த இவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல்வேறு நித்தியமாக வருட கைங்கரியங்களை செய்து வருகின்றனர். சந்தர பாண்டியனுக்காக 108 அந்தணர்களை சோழ நாட்டில் இருந்து அழைத்து வரும் வழியில் ஒருவர்காணாமல் போய்விட்டார் ஊர் வந்தடைகையில் நூற்றியெழுபேர் தான் இருந்தனர். ஆனால் அரசன் இவ்வூர் வந்து பார்க்கையில் 108 நபர் இருந்தனர். பெருமாளே எங்கோ காணாமல் போன மனிதர்  வடிவில் அரசன் முன்னே தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் மக்களில்  ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திரு நாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேலிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான். வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. 

 

மூலவர் - மகர நெடுங்குழைக்காதன் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்.

உற்சவர் - நிகரில் முகில் வண்ணன். தாயர் - குழைக்காத நாச்சியார். திருப்பேரை நாச்சியார் தாயர்களுக்கு தனித்தனி சன்னதி. தீர்த்தம் - சுக்கிர கரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம் பத்ர விமானம் - சுக்கிரன், ஈசானயருததார், பிரம்மா முதலியவர்களுக்கு. பாஞ்சராத்ரம் - சம்பிரதாயம் - தென்கலை.

 

நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்த தாமரைக் கண்ணன் என்னெஞ்னூடே

புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர்காள்

வெள்ளச் சுகமன் வீற்றிருக்க வேதவொலியும் விழா வொலியும்,

பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : தென்திருப்பேரை (சுக்ரன்) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : South Thiruperai (Sukran) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்