
இந்த சூட்சும உலகிற்கும் அப்பால் வேறு ஒரு உலகம் இருக்கிறது. இங்கு பொன்னிற ஒளி சூழ்ந்துள்ளது. இது ஆறாவது தத்துவமான பிரம்மம் என அழைக்கப்படுகிறது. இது தான் சகல ஆத்மாக்களின் உறைவிடம் ஆகும்.
ஆத்ம உலகம்.
இந்த சூட்சும உலகிற்கும் அப்பால் வேறு ஒரு
உலகம் இருக்கிறது. இங்கு பொன்னிற ஒளி சூழ்ந்துள்ளது. இது ஆறாவது தத்துவமான
பிரம்மம் என அழைக்கப்படுகிறது. இது தான் சகல ஆத்மாக்களின் உறைவிடம் ஆகும். முதன்
முதலில் இங்கிருந்து தான் ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கீழிறங்கி இந்த
பௌதீக உலகிற்கு வந்து தத்தம் பாகத்தை செய்யத் தலைப்படுகின்றன. இங்கு ஆத்மாக்கள்
அனைத்தும் ஒளிப்புள்ளிகளாக விளங்குகின்றன. இங்கு பஞ்ச தத்துவங்களால் ஆன உடல்களோ, ஒளியாலான சரீரங்களோ
கிடையாது. இங்கு எண்ணம், சொல், மற்றும்
செயல் எதுவுமே இராது. இங்கு ஓர் ஆழ்ந்த அமைதி மட்டுமே நிலவும் எவ்வாறு
பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு பகுதியோ அவ்வாறே இந்த எல்லையற்ற பொன்னிற உலகில் ஒரு
சிறிய பகுதியில் ஆத்மாக்கள் இடம் பெற்றுள்ளன.
இது மிக உயர்ந்த உலகம். இங்கு ஆத்மாக்கள்
மற்றும் பரமாத்மா மட்டுமே வாசம் செய்கின்றனர். பூமியில் இருக்கும் போது, அனேக தர்மங்களைச் சேர்ந்த
சகல ஆத்மாக்களும் இந்த உலகையே சென்றடைய, பூஜை, தவம், தீர்த்த யாத்திரைகள் மற்றும் தொழுகைகள் மூலமாக
முயன்று வருகின்றனர். இதை சொர்க்கம் என கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். இதை மோட்சம்
என்று பௌத்த மதத்தினர் அழைக்கின்றனர். இந்துக்கள் இதை சாந்திதாமம், பரந்தாமம், பிரம்மாண்டம் என்கின்றனர்.
நான் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாக
ஆத்மாவாக அங்கு தான் ஆழ்ந்த அமைதியுடன், தூய்மையான ஆத்மாவாக வசித்து வந்தேன், என்னுடைய தந்தையான பரமாத்மாவும், என் சகோதர
ஆத்மாக்களும் என் உடன் இருந்துவந்தனர். இங்கு இருக்கும் போது எனது மனம், புத்தி, மற்றும் சமஸ்காரம் பூவுலகில் ஏற்றிருந்த
பாகம் ஆகியவை உள்ளடங்கிய நிலையில் மிகவும் ஆழ்ந்த அமைதியோடு ஒரு விதை சொரூபமாக
சக்தியுடன் இருந்து வந்தேன்.
ஆத்மாக்கள் ஆத்ம உலகில் தனித்தனி
குழுக்களாக அமைந்துள்ளனர். அவைகளில் சம்ஸ்காரத்தின் தராதரத்தின் பிரகாரம் சமய
அனுசாரம் கீழிறங்கி வந்து தம்தம் பாகத்தை ஏற்று நடிக்கின்றன. இந்த ஆத்மாக்களின்
வரிசைகளின் உச்சியில் கடவுள், அல்லா, ஜெகோவா, சிவா
என்றழைக்கப்படும் பரமாத்மா அமர்ந்துள்ளார். அவரின் கீழ் அவரையொத்த பண்புகளுக்கு
ஏற்றாற்போல் சம்ஸ்காரம் கொண்டுள்ள ஆத்மாக்கள் வரிசைக் கிரமமாக இடம் பெற்றுள்ளனர்.
அந்தந்த ஆத்மாக்களின் குணாதிசயம், ஏற்று நடிக்க வேண்டிய
பாகம் மற்றும் காலத்திற் கேற்ப இப்பூவுலகில் இறங்கி வந்து ஒரு தாயின்
கருப்பையிலுள்ள குழந்தையின் சரீரத்தை ஏற்கிறது. அதன் பாகத்திற்கேற்ப பிறப்பு
இறப்பு சக்கரத்தில் வருகிறது. அதன் பாகம் முடிவடையும் போது திரும்பவும் ஒளி,
அமைதி, தூய்மை நிறைந்த முக்தி உலகிற்குச்
செல்கிறது.
இந்த அமைதி இல்லத்தில் ஆத்மா அனுபவிக்கும்
மிக ஆழ்ந்த அமைதி, ஓய்வு ஒரு மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதன் காரணமாக
இப்பூவுலகில் தன் பாகத்தை ஏதேனும் சரீரத்தை (துவாபர் மற்றும் கலியுகத்தில்) ஏற்று
நடிக்கும் போது, அந்த அமைதி இல்லத்தின் நினைவு முழுமையாக
இல்லாவிட்டாலும், அமைதி மற்றும் சாந்தியை அடைய வேண்டும்
என்கிற ஆர்வம், தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த மேலான
அமைதி இல்லத்தில் மட்டுமே ஆத்மாக்கள் தங்களது உண்மையான, இயற்கையான
(அமைதி) தன்மையில் இருக்கின்றன. இதனை தியானம் செய்கையில் அனுபவிக்க இயலும்.
ஆத்மாவின் இயற்கையான சுய தன்மை என்ன ஆயிற்று?
ஆத்மாவான நான், பிரகாசித்துவரும் ஒரு
சக்திமிக்க ஒளிப்புள்ளியாக, சம்பூர்ணமான அமைதி, ஆனந்தம், தூய்மை ஆகியவற்றுடன் பொன்நிற ஒளி
சூழ்ந்திருக்கும் ஆத்ம உலகில் இருந்துவந்தேன்.நான் முதன்முதலில், இந்த பூமிக்கு வந்தபோது, அன்பு, அமைதி, மற்றும் தூய்மை ஆகியவை அடங்கிய ஆன்மீக
சக்திகளுடன் நிறைந்திருந்தேன், பல பிறவிகளை எடுத்துவந்ததால்,
காலப்போக்கில், நான் கர்மேந்திரியங்களுக்கு
அடிமையாகி அதனால் கிடைத்த அற்ப சுகத்தால், என்னுடைய உண்மையான
சுய தர்மத்தை மறந்துவிட்டேன். இதனால், காமம், கோபம், விகாரங்களுக்கு லோபம், மோகம்,
அகங்காரம் என்கிற 5 விகாரங்களின்
ஆதிக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். இந்த 5 அடிப்படை, உடல் உணர்வுதான். இயற்கையை நான் கட்டுப்படுத்துவதற்கு மாறாக, இயற்கை என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்தது. நான் என்னை இந்த உடல் என்று
தவறாகக் கருதியதால், நான் ஆன்மீக சக்தியை, அதீந்திரிய சுகங்களை மறந்து, அமைதி மற்றும் சுகத்தை
இந்திரியங்களின் வாயிலாக அடையத் தலைப்பட்டேன். என்னுடைய முந்தைய உண்மை நிலையை
(அமைதி) அடைவதாகக் கருதி இந்த உலகில் கிடைக்கும் அற்பகால சுகத்தை அடையத்
தலைப்பட்டு ஏமாற்றம் அடைந்தேன். நான் யார் என்பதை, எனது
உண்மையான தன்மை, என் வீடு, என்
பரமதந்தை பரமாத்மா ஆகிய அனைத்தையும் மறந்திருந்தேன், இந்த
விகாரங்களின் பிடியில் நான் இருக்கும் வரை உண்மையான அன்பு, தூய்மையை
அடைய முடியாது என்பதை அறிந்தேன். இந்த 5 விகாரங்கள் என்னுடைய
மன இல்லத்தில் புகுந்து விட்ட அழையா விருந்தாளிகளாகி விட்டன. இந்த 5 விகாரங்களிலிருந்து நான் விடுபட்டால் தான், நான்
என்னுடைய உண்மையான சுய தர்மமான அமைதி, அன்பு, ஆனந்தம், தூய்மை ஆகியவற்றை அனுபவம் செய்யமுடியும்.
மனிதர்கள் கோப வசமாகும் போது நிதானத்தை
இழந்து விடுகின்றனர், அந்த சூழ்நிலை முடிந்து மாறியவுடன் தங்களது வழக்கமான மனநிலைக்கு வந்தவுடன்
அமைதி ஆகிவிடுகின்றனர். இதே போன்று தான் பிற விகாரங்கள் தாக்கும் போதும்
ஆகிவிடுகின்றனர். இதுவே உணர்ச்சி வசப்படுதல், நிலை
தடுமாறுதல், மன இறுக்கம், போன்றவைகளுக்கு
மூல காரணமாகும்.
என்னுடைய அனாதியான சுய தர்மத்தைப் பற்றி
ஆழ்ந்து சிந்தித்துவந்தவாறே, நான் ஒரு ஆத்மா, இந்த சரீரம் என்பது நான் அல்ல என்று
உணர்ந்து செயல்படும்போது, என்னுடைய உண்மையான திவ்ய குணங்கள்
தாமாகவே என்னை வந்தடைகின்றன. இவைதாம் உண்மையானவை. இவற்றை நான் வெளி உலகில் தேடுவது
பேதமை. இவ்வாறு வெளி உலகில் தேடுவது வைர நெக்லஸை தன் கழுத்திலேயே அணிந்து கொண்டு
தன் அரண்மனையெங்கும் தேடும் ஒரு ராணியின் அறியாமைக்கு ஒப்பாகும். மன அமைதி எனது
சுயதர்மம்; நான் ஆத்ம உணர்வுடன் இருக்கும்போது இது தானாகவே
என்னுள் அனுபவம் ஆகின்றது. நான் எனது அனாதி சமஸ்காரங்களை எண்ணங்களின் வடிவில்
கொண்டுவந்தால் போதும். அந்த எண்ணங்களுக்கு ஏற்பவே, எனது
மனநிலையும் அமைவதை நான் அனுபவம் செய்ய இயலுகிறது. ஆத்ம உணர்வுடன் கூடிய எண்ணங்கள்
எனக்கு மன அமைதியை அளிக்கின்றன. உடல் உணர்வுடன் உள்ள எண்ணங்கள் என்னை குழப்பத்தில்
ஆழ்த்துகின்றன. மனம் எத்தகைய மனநிலையுடன் விளங்கவேண்டும் என்பதை நான்தான்
தீர்மானம் செய்கின்றேன். ஆத்மாவான என்னிடம்தான் இவ்வாறு தீர்மானம் செய்யும் சக்தி
இருக்கிறது. சூழ்நிலை என் மனநிலையை நிர்ணயம் செய்யக்கூடாது. ஆத்ம உணர்வு எனது
மனதிற்கு உணவாகி, புத்திக்கு சக்தி அளிக்கின்றது. இதுவே
வீணான, மிகச்சாதரணமான ஸ்திதியிலிருந்து நான் விலகி இருக்க
உதவுகிறது.
தியானம் என்பது மனதில் எண்ணங்களே இல்லாமல்
செய்வதல்ல. ஆத்மாவின் தனித்தன்மை வாய்ந்த சக்தியான எண்ணங்களை பயன்படுத்துவதன்
மூலமாக, எனது உண்மையான சுய
தர்மத்தில் நிலைத்திட உதவுகிறது. இந்த தியானம். இந்த தூய்மையான, உயர்ந்த எண்ணங்களில் ஆத்மா நெடுநேரம் ஆழ்ந்திருக்கலாம். இராஜயோகத்தின்
முக்கியத்துவம் இதனால் வெளிப்படுகிறது. இதுவரை கூறிவந்த கருத்துக்களை நீங்கள்
ஆராய்ந்தறிவதன் மூலமாக, உங்களை ஒரு ஆத்மா என்று உணர்ந்து
ஆத்மாவின் அரிய சக்திகளை அனுபவம் செய்யலாம்.
நான் ஒரு ஆத்மா, மனம், புத்தி, சமஸ்காரம் என்னுடைய சூட்சுமமான அங்கங்கள்.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை எனது கர்மேந்திரியங்கள்.
இவற்றின் மூலம் நான் வாழ்க்கையை ரசிக்கின்றேன். உடல் உணர்வு காரணமாகவும், எனது பழைய தீய சமஸ்காரங்களின் காரணமாகவும், நான்
காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம் என்கிற 5
விகாரங்களுக்கு அடிமையாகி விட்டேன். இந்தச் சிறையிலிருந்து விடுபடுவதற்கான ஞானம்
இப்போது என்னிடத்தில் உள்ளது. நான் ஒரு ஆத்மா என்கிற சாவி என்னிடத்தில் இருக்கிறது
இதை அறிவதால், பௌதீக கட்டுப்பாட்டுக்குள் நான் வருவதில்லை
நான் இதிலிருந்து விடுதலை ஆகி, எண்ணங்களின் மனோ வேகத்தில்
நான் பறந்து சென்று, எனது வீடான ஆத்ம உலகை அடைந்து எனது
உண்மையான ஸ்திதியை எளிதாக அனுபவம் செய்ய இயலுகிறது. ஆகவே எனது உடலிலிருந்து
விடுபடா விட்டால், நான் மன அமைதி பெற முடியாது என்பதை உணர
வேண்டும்.
தியானம் செய்யத் துவங்கும்போது பல வீண்
எண்ணங்கள் வரவே செய்யும். எந்த ஒரு குறிக்கோளும் இன்றி பலவாறு சிந்தித்துவரும்
எனது (ஆத்மாவின்) நெடுங்கால பழக்கம்தான் இதற்கான காரணம். பல மனிதர்கள் மற்றும்
வஸ்துக்களால், இதுவரை
ஆத்மா கவரப்பட்டுவந்தது. ஆத்மா இதுவரை இங்கு மங்குமாக அலைந்து திரிந்துகொண்டிருந்தது.
இதனால் களைப்படைந்து விட்டது ஆத்மா. இப்போது. நான் கவலை, சந்தேகம்,
குழப்பம், விருப்பு, வெறுப்பு
போன்ற தீய குணங்களிலிருந்து விடுபட்டு, எனது உண்மையான
குணங்களான, அமைதி, சுகம், தூய்மை, ஆனந்தம் ஆகிய உயர்ந்த சமஸ்காரங்களினால்,
நான் மீண்டும் எனது ஆத்ம சக்தியை அடையவேண்டும். எனது
கர்மேந்திரியங்கள் எனது கவனத்தை திசை திருப்பக்கூடாது என்பதில் நான்
எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
ஆத்மா வளருவதுமில்லை; தேய்வதுமில்லை. ஆனால்,
ஆத்மா சுகம் அல்லது துக்கத்தை அமைதி அல்லது அமைதியின்மையை அனுபவம்
செய்கிறது. இப்போது அமைதியில்லை என்றால் முன்பு ஒரு நேரம் நான் அமைதியை அனுபவம்
செய்திருக்கிறேன் என்பது உறுதியாகிறது. ஆத்ம உலகில் நான் அமைதியை அனுபவம்
செய்திருக்கிறேன். இந்த அமைதிதான், ஆத்மாவுக்கு உயிர்மூச்சு.
அது இல்லாதிருந்ததால் தான், நான் அதை எனது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய பலரிடத்தில் நாடி தோல்வி
கண்டு மனம் தளர்ந்துவிட்டேன். இராஜயோக தியானம், உயர்ந்த
எண்ணங்களாகிய சக்தியின் மூலமாக உயர்ந்த மனநிலைக்கு உயர்த்தவல்லது கோபம், மோகம் போன்றவற்றால் ஏற்படும் தீய எண்ணங்களை அகற்றி, உயர்ந்த
எண்ணங்களை உருவாக்கி நான் அமைதி, திருப்தி ஆகியவற்றை அனுபவம்
செய்ய இயலுகிறது.
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
ஞானம் : ஆத்ம உலகம். - இராஜயோக தியானம் - விழிப்புணர்வைப் பெறுதல், [ ஞானம் ] | Wisdom : Spirit world. - Raja Yoga Meditation - Gaining Awareness, in Tamil [ Wisdom ]