மிகவும் பழமை வாய்ந்த கோயில் எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப்பட்டதாக தகவல் உள்ளது. இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம். மேலும் வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையர் கோன் ஆகியோர் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர்.
திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்
மிகவும் பழமை வாய்ந்த கோயில் எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு
முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின்
திருமேனி வடிவமைக்கப்பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து
தனது சக்தியை வெளிப்படுத்தினாராம்.
மேலும் வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையர் கோன் ஆகியோர் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து
வந்தனர்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி:
கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும்
வகையில் பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் எடுத்துச் செல்கின்றனர்.
ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க
வேண்டும். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இதனால் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷத்தால்
ஏற்பட்ட திருமண தடை விலகுவதாக நம்பிக்கை.
கடன் பிரச்னை, நீதிமன்ற வழக்கு பிரச்னை, வீடு, நிலம் பிரச்னைகள் தீர்வதற்கும், வியாபார பெருகுவதற்கும் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்த பானகம் நைவேத்யம் செய்கின்றனர்.
எந்தக் குறை ஏற்பட்டாலும், அதற்கு இவர் பரிகாரம் செய்வார் என்ற நம்பிக்கை
இருப்பதால் நரசிம்மபெருமாளையும், தாயாரிடமும் பக்தர்கள் கண்ணீர் வடித்து, உருக்கமாக, தங்கள் கோரிக்கைகளை சொல்வதை இங்கு காண முடியும்.
இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலட்சுமி
பெருமாளின் தோளில் கையால் அணைத்தபடி இருப்பதைக் காண முடியும்.
அவளது இடது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை
நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள்.
இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை
உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது.
இப்படிப்பட்ட பெருமாளை "பிரகலாத வரதன்' என அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்புள்ள நரசிம்மரிடம்
வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை.
உற்சவர் நரசிங்கப்பெருமாள்
இருப்பிடம்:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் பின்புறமுள்ள
மேலமாட வீதியில் கோயில் அமைந்துள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுனுக்கு செல்லும்
பஸ்களில் சுவாமி சன்னதி முன்பு இறங்கி நடந்து சென்று விடலாம்.
திறக்கும் நேரம்: காலை 8- 10.30 மணி, மாலை 5.30 - இரவு 8 மணி.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில் - திருத்தலங்கள் [ ] | Spiritual Notes: Temples : Sri Pragalatha Varadhan temple in Tirunelveli city - Temples in Tamil [ ]