ஸ்ரீராம நவமி.

விரதம், தரிசனம், ஸ்ரீ ராமர் பிறந்த வரலாறு, சிறப்புகள்

[ இராமாயணம்: குறிப்புகள் ]

Sri Rama Navami. - in Tamil

ஸ்ரீராம நவமி. | Sri Rama Navami.

1. நாம ஜபமே முதல் முக்கியம்: ஸ்ரீராமர் அவதரித்த ஸ்ரீராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து ஸ்ரீராமரின் திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.

ஸ்ரீராம நவமி.

ஸ்ரீராம நவமியன்று செய்ய வேண்டியது என்ன?

🔔 1.  நாம ஜபமே முதல் முக்கியம்: ஸ்ரீராமர் அவதரித்த ஸ்ரீராம நவமி அன்று  அதிகாலையில் எழுந்து ஸ்ரீராமரின் திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே என்ற பதினாறு வார்த்தைகளடங்கிய மஹாமந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் 16 முறை ‘ராம’ நாமம் சொன்ன பலனும், 16000 முறை ‘விஷ்ணு’ நாமம் சொன்ன பலனும் கிடைக்கும். எனவே ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிக பட்சம் உச்சரிக்கலாம்.

 

🔔 2. ஸ்ரீராம நவமி விரதம்:

 

‘‘ஸ்ரீராம நவமி விரதத்தை  பக்தியுடன் கடைபிடிப்பவர்எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு,

தனது வாழ்வில் முழு வெற்றியை அடைவார்’’ என்று ஹரி பக்தி விலாசம் குறிப்பிடுகிறது.

 

ஸ்ரீராம நவமியன்று சூரிய அஸ்தமனம் வரை விரதம் இருப்பது நல்லதாகும்.

 

பொதுவாக  முழு விரதம் கடைபிடித்து பகவானை வழிபடுவது சிறப்பு. உடல் நலம் குறைந்தவர்கள் நீர், பால், பழம் உட்கொண்டு  ஏகாதசி விரதம்  போல் கடைபிடிக்கலாம்.

 

🔔 3. ஸ்ரீராம சரிதம் :

 

ஸ்ரீராம நவமி அன்று ஸ்ரீராமரின் தெய்வீக சரிதத்தை பற்றி படிப்பதும், கேட்பதும் முக்கியமாகும். எனவே வால்மீகி ராமாயணம் படிக்கலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாம் காண்டத்தில் உள்ள ஸ்ரீராம அவதாரம் பற்றிய பகுதிகளையும் படிக்கலாம். இஸ்கான் கோயில்களில் நடைபெறும் ஸ்ரீராமாயண சிறப்புரைகளில் பங்கேற்பது மிகவும் சிறப்பு.

 

🔔 4. ஸ்ரீராம நவமி தரிசனம்:

 

ஸ்ரீராம நவமி அன்று குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று பகவானை தரிசிப்பது மிகவும் முக்கியமாகும்.

 

இன்று ஸ்ரீராம நவமி.

 

நவமி திதியில் ஸ்ரீ ராமர் பிறக்க காரணம் என்ன?

 

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

 

ஸ்ரீ ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளைத் தான் ராம நவமி என்று கூறுகின்றோம்.

 

அந்த வகையில் ராம நவமி இன்று 17.04.2024  வருகிறது.

 

ஸ்ரீ ராமர் பிறந்த வரலாறு :

 

 அயோத்தியை ஆண்டவர் மன்னர் தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்.

 

 பாரெங்கும் வெற்றிக்கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

 

 தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம்? என்ற ஆலோசனையை கேட்டார்.

 

முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் புத்ர காமேஷ்டி யாகத்தை நடத்த தசரத சக்கரவர்த்தி முடிவு செய்தார்.

 

யாகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார்.

 

அந்த குடுவையில் இருக்கும் பாயாசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டார் யக்னேஸ்வரர்.

 

 தசரதனின் மனைவிகளும் பாயாசத்தை அருந்தினார்கள்.

 

 அதன்பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ஸ்ரீ ராமபிரானை பெற்றெடுத்தாள். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள்.

 

ஸ்ரீ ராமரின் சிறப்புகள் :

 

 ஸ்ரீ ராமர் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர்.

 

 ராம பானத்திற்கு இணை வேறு ஏதும் இல்லை.

 

 ஸ்ரீராமர் வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர்.

 

🤴 இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ஸ்ரீராமபிரான்.

 

ஸ்ரீ ராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா?

 

பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன.

 

 விஷ்ணுபகவான் அவைகளுக்கு ஆறுதல் அளித்தார். உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும், அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

 

இதன் படியே அஷ்டமி திதி அன்று எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ஸ்ரீராமர் அவதாரத்தையும் எடுத்தார்.

 

இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி, நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

இராமாயணம்: குறிப்புகள் : ஸ்ரீராம நவமி. - விரதம், தரிசனம், ஸ்ரீ ராமர் பிறந்த வரலாறு, சிறப்புகள் [ ] | Ramayana: Notes : Sri Rama Navami. - in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்