இராமாயண மஹிமை முழுவதும் சுருக்கமாக.... தினமும் பாராயணம் செய்ய எளிதாக
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்!
இராமாயண மஹிமை முழுவதும் சுருக்கமாக....
தினமும் பாராயணம் செய்ய எளிதாக...👇
ஶ்ரீ ராம சீதா ஜெயம்....
தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில்
உதித்து,
ரகுகுலத்திற்கு பெருமை அளித்து,
வில்வித்தை வா ள்வித்தையில் தேர்ந்து,
விஶ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து நின்று,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து,
ஜனக நகர் சென்று,
சிவ தனுசை வளைத்தொடித்து,
நங்கை சீதையை கை பற்றி,
சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து,
மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,
குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,
சித்திரகூடம்தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து,
ராஜ்யத்தை ஆளச்செய்து,
அகஸ்தியரை தரிசித்து,
பஞ்சவடி சென்று,
அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து,
மாய மானான மாரீசனை கொன்று,
சீதையை பிறிந்து மனம் தளர்ந்து,
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து,
ஸபரியை ஆசிர்வதித்து,
அனுமனைக் கண்டு,
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு,
வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து,
விளையாட்டாக கடலை தாண்ட செய்து,
அஸோக வனம்தனில் அமர்ந்துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிடமிருந்து,
சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்றுகொண்டு,
அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று,
ராவணனை வென்று வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,
அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக்ராமம் சென்று,
அங்கு காத்திருந்த பரதனை அணைத்துகொண்டு,
யாவரும் அயோத்தி திரும்பி,
அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,
அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி,
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,
மணிமகுடம் ஏற்றுகொண்ட
மஹானுபாவன் ஶ்ரீராமபிரானை
நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பஜிக்கிறேன்.
சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன
அனுமற் சமேதராய்மணிமுடி சூடி
அருள் சுரந்தளிக்கும் ராமச்சந்திர
பரப்பிரம்மமே போற்றி.எம்பிரான்
இணையடி போற்றி போற்றியே.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்! - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Sri Rama Navami Special! - Tips in Tamil [ ]