பேஷண்ட் : டாக்டர்.. நீங்க தான் என் தெய்வம். டாக்டர் : அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஆபரேஷன் முடிஞ்சா நீங்களும் தெய்வம் தான். பேஷண்ட் :😟😟
💪🤩 - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!
பேஷண்ட் : டாக்டர்..
நீங்க தான் என் தெய்வம்.
டாக்டர் :
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஆபரேஷன் முடிஞ்சா நீங்களும் தெய்வம் தான்.
பேஷண்ட் :😟😟
டாக்டர் : உங்க
வீட்டுக்காரர்,
ஒரு வாரம் கம்ப்ளீட்
ரெஸ்ட் எடுக்கணும்.
பேஷண்ட் மனைவி : ஏன்..
சமையல் கூட செய்யக்கூடாதா டாக்டர்?
டாக்டர் :😪😪
உலகத்திலேயே Best Friends யார் தெரியுமா?
👀 நம் இரண்டு கண்கள் தான்.
👀 இரண்டுமே ஒன்றாக தூங்கும்,
👀 ஒன்றாக முழிக்கும்,
👀 ஒன்றாக அழும்,
👀 But ஒரு பெண்ணை பார்த்தால்
மட்டும்,
👀 ஒரு கண் மட்டும் சிமிட்டும்😉, இதிலிருந்து என்ன தெரியுது?
👀 ஒரு பொண்ணு🧚♀ நினைச்சா எதையும் பிரிக்க முடியும்...😂😂
🪯சார்லி சாப்ளினின்
பொன்மொழிகள்..!!
💝 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு
ஒருவரைக்கூட வேதனைப்படுத்தக் கூடாது.😊😊
💝 கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்குப் பிறகு.🌝🌝
🎉 போட்டோகிராபி தொழிலில் முன்னேற அவசியமானது எது? திறமையா, அதிர்ஷ்டமா?
ரெண்டும் இல்ல.. கேமரா
தான்..
சிரிக்க மட்டும்....K
'என்னைத் தவிர யாரைக்
கட்டியிருந்தாலும்
குடும்பம் நடத்தியிருக்க
முடியாது''
எல்லா
புருஷன்
பொண்டாட்டிக்கும்
இருக்கும் ஒன்றுபட்ட
எண்ணம் இதுவே ...
நம்ம தமிழ்நாட்டில்
பொறுத்தவரை
எல்லாரும் ஹெல்மெட்
அணிவது
போலீஸுக்கு பயந்து தான், உயிருக்கு
பயந்தல்ல ....
ஆஸ்பத்திரியில் நலம்
விசாரிப்பதற்கு
நாலு நல்ல வார்த்தைகளை
விட ....
நாலு நல்ல ஆப்பிள்களே
போதுமானதாய்
இருக்கிறது ....
நல்லவனுக்கு நல்லவன்
இந்த வையகத்தில் உண்டு
கண்ணாடியை பார்த்து தலை
சீவும் போது யோசிச்சது...
நின்ன இடத்துல சுத்துனா
கடிகாரம்ன்னு அர்த்தம்
ஆனா நிக்க முடியாம
சுத்துனா குடிகாரன்னு அர்த்தம்
ஏர் போர்ட்ல கிடைக்குது, லாரியில கிடைக்குது, ரயில்ல கிடைக்குது, ஏன் பாத் ரூம்ல கூட
கிடைக்குது....
ஆனா ஏடிஎம்ல மட்டும்
கிடைக்கவே மாட்டேங்குது...
ஒரு வயசுப் பொண்ணு நம்மள
தமிழ்ல `மாமா'னு கூப்பிட்டா எவ்வளவு
சந்தோசமா இருக்கு. அதுவே
ஆங்கிலத்துல
`uncle' னு கூப்பிட்டா எவ்வளவு
கடுப்பு
வருது..
ஒரு வருடத்திற்கு முன்பு
மணக்கோலத்தில்
நண்பனை சிரிப்போடும்,அவன் மனைவியை
கண்ணீரோடும் கண்டேன்
.....
ஒராண்டுக்குப்பின்
கண்டபோது கண்ணீர்
இடம்மாறியிருந்தது ....
பெண்களை விட ஆண்களுக்கு
நல்லா சமைக்க தெரியும் ...
ஆனால் ...
ஆண்கள் ஒரு நாள்
சமைக்குற பொருளை வைச்சு பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க ...
காலையில எழுந்ததும்
Whatsapp ஓபன் பன்றமாறி
சின்னபுள்ளையில
பாட புத்தகத்த
ஓபன் பன்னிருந்தா
உருப்பட்டுருப்பன்..
'லேஸ் கம்பெனி'க்காரன் காற்றை
பாக்கெட் பண்ணி
விக்கிகிறதுக்கு
முன்பே...
'பூரி'யில் காற்றை நிரப்பி
வித்தவங்க நாங்க
...தமிழன்.
ஓட்டலில் சர்வர் என்ன
சாப்புடுறீங்கன்னு
கேட்டாலே ஒழுங்கா பதில்
சொல்லத் தெரியல ....
இதுல கடவுள் வந்து என்ன
வரம் வேணும்னு
கேட்டா... எப்படி
சொல்லுவது ?
ஸ்டைலா தலை கோதும் ,
போதும் மீசைய முறுக்கும்
,
போதும் பாக்காத
பக்கத்துக்கு வீட்டு
பொண்ணு # மூக்கு நோண்டும் போது
கரெக்ட்டா பாத்துரதுதான்
துரதிஷ்டம்.....
ஓட்டலில் இரண்டு
முட்டையில் மூன்று
ஆம்லெட்கள் போடும்
கொடுமையை
கண்டு பொங்கிய எவனோ
ஒருவன்தான் ...
ஆப்பாயிலை
கண்டுப்பிடித்திருக்கவேண்டும் ....
அம்மாக்கள்
கோபிச்சிட்டு போனா
யாரும்
கவலப்படுறதில்ல.,
தமிழ்நாடுக்கே சின்னம்மா
கிடைக்கும் போது
உனக்கு ஒரு சின்னம்மா கிடைக்காதானு
அப்பனுங்க சொல்லியே
வளர்க்கிறாங்க....
ஒரு குறிப்பிட்ட
வயதிற்கு மேல் பெற்றோர்கள்
நம்மை அடிப்பதை
நிறுத்திவிடுகிறார்கள் .....
பின்னர் ...
அவங்க கை வலிக்குதுனு
நமக்கு திருமணம் செய்து
வைத்து
விடுகிறார்கள் ....
காதலிய சமாதானம்
செய்ரதும்......
.
ஸ்கேல் இல்லாம கோடு
போடுரதும் ஒன்னு......
நாம ஒருபக்கம் இழுத்தா
அது
ஒருபக்கம்.......போவும்.
ஊருக்கே குறி சொல்லும்
பூசாரி ,
ATM வாசல நின்னு.....
பணம் இருக்கானு
இன்னொருத்தன்ட
கேட்கிறான்..
இரவு கணவனை
சாப்பிடவாங்கன்னு
மனைவி அழைத்தால்
வாணி ராணி
முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்
.... !
ஆடு நேந்துவிட்ட விழாக்களில் பந்தி பரிமாறுபவர்
நமக்கு நன்கு
தெரிந்தவராயின்
மனதிற்குள் வரும்
சந்தோசம் சுகமானது .....
பொண்டாட்டி யை
சமாதானப்படுத்த வீட்ல
பீரோவில் கிடக்கும்
சேலையையே பேக் பண்ணி
கிப்டா
கொடுத்துரனும்....
கண்டிப்பா தெரியாது
.....
பீரோ பூரா அவ்ளோ சேலை
....
பேருந்தில் ஏறி
அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது
வரம் ....
அவ்வரம் பெற்றவர் நம்
அருகில்
அமர்ந்திருப்பது சாபம்
...!
ஒரு பெண் , ஒரு நிமிடத்தில் சேலை
செலக்ட் செய்கிறாள்
என்றால்,
அந்த சேலை வேறு யாருக்கோ
என்று அர்த்தம் ....
ஜல்லிகட்டு, கல்யாணம் 2லயும்
வளர்க்குறவன் எஸ்கேப்
ஆயிருவான் ....
அடக்குறவனுக்கு தான்
உசிர் போயிரும்
நல்லா போய்க்கிட்டிருந்த
பஸ் திடீர்னு குலுங்கி
குலுங்கி போக ஆரம்பிச்சா...
நாம பஸ்ஸ்டாண்டுக்கு
உள்ள
வந்துட்டோம்னு அர்த்தம்
....
அம்மா இலவசமா கொடுத்த
ஆடு மாடு மட்டும்தான்
இன்னும்
அம்மானு கத்திகிட்டு
இருக்கு மீதி இருக்க
எல்லா பயலுகளும்
சின்னம்மானுதான்
கத்துதுங்க.
முன்பு
ஆண்களுக்கு
குட்டிச்சுவர் ,
டீக்கடை பெஞ்ச் ,
பெண்களுக்கு
வீட்டுத் திண்ணை ,
குழாயடி,
இப்போ ...
எல்லோருக்குமா
இப்போ வாட்ஸப்
ஆயிடுச்சு....
சோக்காயிருக்கீங்கன்னு
சொன்னா... உங்களை
ட்யூப்லைட்னு
இன்டைரக்டா
சொல்றாங்கன்னு
அர்த்தம்...
ஆம்மா... ட்யூப்லைட்
பின்னாடி தானே ச்சோக்
இருக்கும்...
பெண்கள் எந்த எதிர்ப்பும்
சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால் அவர்
ஃபோட்டோகிராபர் ஆகத்தான் இருக்க வேண்டும்!!
புது காலண்டர் வந்த உடனே
அதுல போய்
எத்தன கவர்மெண்ட் லீவு, என்னைக்கு
தீபாவளி ன்னு இப்பவே
பாத்து வச்சா
தான் ஒரு மனதிருப்தி யா
இருக்கு...!!!
ஒருத்தன் பண்ற
அயோக்கியத்தனத்துக்கு ஏத்தமாதிரி அவன் ஓடம்பும் வாயும் துர்நாற்றம்
எடுக்குறமாதிரியும்...
ஒருத்தன் பண்ற
நல்லதுக்கு ஏத்தமாதிரி அவன் அவன் ஒடம்பும் வாயும் நல்ல வாசமாக மணக்குற
மாதிரியும்... ஒரு சிஸ்டம் வந்துட்டாலே போதும்....
கடவுளும் தேவையில்லை..
கவர்மெண்டும் தேவையில்லை...
ஸ்டூடண்ஸுக்கு அதிகமான
ஹோம்வொர்க் கொடுத்து
விடப்படும் லீவும்,
வொர்க்கர்ஸுக்கு சம்பளம்
கொடுக்காம விடப்படும்
லீவும்
ஒண்ணுதான் ...
எதையாவுது சாதிக்கனும்னு
நினைக்கும்போதான்
ரொம்ப பசிக்குது...
சாப்பிட்டுட்டு
சாதிக்கலாம்னா
தூக்கம் வந்திருது..
உண்ட மயக்கம் இதுல
நம்ம தப்ப எங்க
இருக்கு..
பிரம்மனுக்கு
வேலைகூடியதால்,
தாயை படைத்தான்...,
எமனுக்கு
வேலைகூடியதால்,
காதலியைப் படைத்தான்...!
200 ரூபாய் வாங்கி ஓட்டு
போட்ட
உங்களுக்கு
சின்னம்மா CMமா வராமல்
அன்னை தெரசா வா CM மா
வருவார்கள்.
எதிரியை ஒழிக்க
முதலில் அவனை
நண்பனாக்குங்கள்..
நம்ம கூட சேர்ந்தபிறகு
உருப்படவா போறான்..
மொதலாளி் இந்த மாச
சம்பளம்..
ஏன்டா, போன மாச சம்பளத்தை
முதல்ல
எடுத்திட்டையா....
வர வர தமிழ்நாடு
சொப்பனசுந்தரி
மாதிரி ஆயிடுச்சு..
யார் வச்சுருக்கான்னே
தெரியல..
பேசாமல் இருந்தால்,
'ஏன் பேச
மாட்டேன்ங்கிறீங்க?' என்று
நச்சரிப்பதும், பேசினால் சண்டைக்கு
இழுப்பதும் மனைவியின்
இயல்பு!!
வெளியே போனவள் இன்னும்
வீடு
திரும்பலயே!
இது பெற்றோர் கவலை
வீட்டுக்குள்ள போனவள்
இன்னும் வெளியே
வரலயே!
இது எதிர்வீட்டு பையன்
கவலை!
பல குடும்பங்கள் இன்று
பிரிவதற்கு
காரணமே பிரிட்ஜ் தான்
காரணம் மூன்றுநாள் முன்னாடிவச்ச குழம்பு !
பெரிய இவனாட்டம்
மதியம் நான் ஆபிசுல
இருக்குறப்ப வந்தியே
தைரியமிருந்தா இப்ப வா
பாப்போம்னு
தூக்கத்த பாத்து கேட்க
வேண்டியதாயிருக்கு..!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
நகைச்சுவை : சிரிங்க பாஸ்...ரிலாக்ஸ் ப்ளீஸ்..!! - சிரிக்க சிரிக்க சிரிப்பு..!! [ ] | Comedy : Syringa boss...Relax Please..!! - Laugh Laugh Laugh..!! in Tamil [ ]