குஜராத் கடற்கரை பகுதி. ஒரு கப்பல் பழுது அடைந்து நின்று விட்டது. அது ஒரு அயல் நாட்டு கப்பல். அந்த கப்பலில் பயணம் செய்த ஊழியர்களால், கப்பலை சரி செய்து மேலும் செலுத்த முடியவில்லை. அந்த சரக்கு கப்பலில், பல முக்கிய பொருட்கள் இருந்தன, டெலிவர் செய்ய. நாட்கள் நகர நகர கப்பல் நிறுவனத்திற்கு பல லட்சங்கள் இழப்பு. வியாபார ரீதியாகவும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த நிலையில் ஒரு குஜராத்தி தொழிலதிபரை அணுகினார். அவர் விவரம் கேட்டு அறிந்தார். தன்னிடம் வேலை செய்தவர்களில் திறமைசாலி மற்றும் அனுபவம் மிக்க நம்பிக்கையான தொழிலாளியை அனுப்பி வைத்தார். சென்ற அந்த நபர் இன்ஜின் ரூமிற்கு சென்றார். செக் செய்தார். குஜராத்தி மொழியில், அடுத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு யாரும் அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார். சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சரியாகி விட்டது என்றார் அவர் மொழியில். அதை மொழி பெயர்த்து கேப்டனிடம் கூற, அவரும் கப்பலை செலுத்தி பார்த்து மகிழ்ந்தார். நேர்த்தியான, திறமை மிக்க வேலை செய்யப்பட்டது குறித்து பாராட்டினார். இந்த குறிப்பிட்ட தொழிலாளி சென்று அவருடைய முதலாளியிடம் கூறிவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.
திறமைக்கு தனி மதிப்பு உண்டு! வெளிப்படுத்தினால்
தானே? தெரியும்!
குஜராத் கடற்கரை பகுதி. ஒரு கப்பல் பழுது அடைந்து
நின்று விட்டது. அது ஒரு அயல் நாட்டு கப்பல். அந்த கப்பலில் பயணம் செய்த ஊழியர்களால், கப்பலை சரி செய்து மேலும் செலுத்த முடியவில்லை. அந்த சரக்கு கப்பலில், பல முக்கிய பொருட்கள் இருந்தன, டெலிவர் செய்ய.
நாட்கள் நகர நகர கப்பல் நிறுவனத்திற்கு பல லட்சங்கள்
இழப்பு. வியாபார ரீதியாகவும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த நிலையில் ஒரு
குஜராத்தி தொழிலதிபரை அணுகினார். அவர் விவரம் கேட்டு அறிந்தார். தன்னிடம் வேலை செய்தவர்களில்
திறமைசாலி மற்றும் அனுபவம் மிக்க நம்பிக்கையான தொழிலாளியை அனுப்பி வைத்தார்.
சென்ற அந்த நபர் இன்ஜின் ரூமிற்கு சென்றார். செக்
செய்தார். குஜராத்தி மொழியில், அடுத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு யாரும் அவரை
தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார். சுமார் 45 நிமிடங்களுக்கு
பிறகு வெளியே வந்து சரியாகி விட்டது என்றார் அவர் மொழியில். அதை மொழி பெயர்த்து கேப்டனிடம்
கூற, அவரும் கப்பலை செலுத்தி பார்த்து மகிழ்ந்தார்.
நேர்த்தியான, திறமை மிக்க வேலை செய்யப்பட்டது குறித்து பாராட்டினார்.
இந்த குறிப்பிட்ட தொழிலாளி சென்று அவருடைய முதலாளியிடம் கூறிவிட்டு தனது வேலையை பார்க்க
சென்று விட்டார்.
10 நாட்கள் கழித்து
அவர் அன்று செய்த வேலைக்கு சன்மானம் அளித்து அசத்தினார், முதலாளி. அந்த தொழிலாளிக்கு ஒரு சிங்கள் பெட் ரூம் பிளாட் (One room Flat) பரிசாக அளித்தார். அது வரையில் மிகவும் சாதாரண இடத்தில் ஒண்டு
குடித்தனம் இருந்த அவர், தன் கனவிலும் எதிர் பார்க்காத பரிசு அது. அவர்
நெகிழ்ந்து விட்டார். அந்த பரிசு அவரை மேலும் ஊக்குவிக்கும், அவருடைய திறமையை மேன்மைபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த குஜராத்தி முதலாளி, கப்பல் கம்பெனியில் இருந்து கணிசமான தொகை பெற்று, அதில் ஒரு பகுதியை அந்த குறிப்பிட்ட தொழிலாளிக்கு நிரந்தர தங்கும் வசதி செய்து
அளித்து , அவரும் மன நிம்மதி அடைந்தார். திறமையும் சரியாக
ஊக்குவிக்கப் பட்டது.
திறமையை தக்க சமயத்தில் சரிவர பயன்படுத்தி பொருத்தமாக
பாராட்டினால், அந்த செயல் ஒரு உந்து கோல் கருவியாக (motivating tool) அமையும். மேலும் சிறப்பாக செயல்பட தூண்டும் என்பதற்கு, இந்த நிகழ்வு ஒர் உதாரணம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : திறமைக்கு தனி மதிப்பு உண்டு! வெளிப்படுத்தினால் தானே தெரியும் - குறிப்புகள் [ ] | self confidence : Talent has its own value! If you express it, you will know - Notes in Tamil [ ]