ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Teachings of Sri Ramakrishna Paramahamsa - Tips in Tamil

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம் | Teachings of Sri Ramakrishna Paramahamsa

தனது குருவை சாதாரணமான மனிதராக கருதுபவர்களுக்கு பிரார்த்தனையாலும், பக்தியாலும் எந்தப் பலனும் கிடைக்காது.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம் 


"தனது குருவை சாதாரணமான மனிதராக கருதுபவர்களுக்கு பிரார்த்தனையாலும்பக்தியாலும் எந்தப்  பலனும் கிடைக்காது.  மனித குருவானவர்மகாமந்திரத்தை உனது காதில் மட்டும் உபதேசிக்கிறார்.  தெய்வ குருவோஆத்மாவிற்கு  முக்தியை அளிக்க வல்லவர் ஆகிறார். ஈஸ்வரனுடைய  இரகசியங்களை அறிய வேண்டும் என்ற தீவிர பத்தி உனக்கு இருக்குமானால்அந்த ஈஸ்வரனே சத்குரு   ஒருவரைஉன்னிடம் அனுப்புவார்.  இறைவனேகுருவை தேட வேண்டிய விஷயத்தில் உனக்கு  உதவுவார்.  எனவே கவலை வேண்டாம்."🙏

பரமஹம்சர்


"பாண்டவ!  அந்த ஞானத்தைப் பெற்ற பின் நீ இப்படி மயக்கம் அடைய மாட்டாய்அந்த ஞானத்தால் எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும்என்னிடத்திலும்  காண்பாய்".🙏

 

விளக்கம்:   

அர்ஜுனனுக்குஶ்ரீகிருஷ்ணர் அத்தகைய ஞான குருவாக விளங்குகிறார். 

பொருள்களை உள்ளபடி காண்பதே மயக்கநிலைமெய்ஞானம் மனதில் தோன்றும் பொழுது எல்லா பொருள்களும்உயிர்களும் ஒரே பரம்பொருளிடம்  ஒன்றியிருப்பது நமக்குத் தெரியும். 

      

ஸ்ரீராமகிருஷ்ண_பரமஹம்சரின்_உபதேசம் 🙏

   "ஒன்றென உணர்த்துவது ஞானம்; பலவாக காண்பது அக்ஞானம்".

    _பரமஹம்சர்

             🙏அனைத்தும் இறைவனே! இறைவனிடத்திலேயே   அனைத்தும் அடங்கியிருக்கின்றன!   என்று காண்பதே #ஞானம். அர்ஜுனா!  அத்தகைய ஞானத்தை பெற்ற பின், உனக்கு மன குழப்பம் ஏற்படாது!   அந்த ஞானத்தால் எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும்என்னிடத்திலும் காண்பாய்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. அதாவது  நீயும், நானும் ஒன்றே! என்கிறார்!  ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா. 

 அர்ஜுனனும்_மகாவிஷ்ணுவின்_அம்சமே

 

மகாவிஷ்ணு_நரன்_நாராயணன் எனப் இருவராக முன்பு அவதரித்திருந்தனர்.  அதில் நரனாக  வந்த அம்சமே அர்ஜுனனாகவும்,

 நாராயணராக வந்த அம்சமே

ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதரித்து வந்தனர்; உலகில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட .

  ஶ்ரீகிருஷ்ணா_சரணம் 🙏

தவறும் / சரியும் ஏதோ ஒன்றில் நிலைகொண்டு அப்படியே இருக்க அல்லவே !!!

 

அதையே

அப்படியே செய்துகொண்டு இருந்தால் அதை கடந்த மேன்மை எப்போது அடைவது ??

 

செய்வதில் முழுகவனம் செலுத்தி,

செய்யும்போது அந்த செயலில் முழுமையாக ஈடுபட்டு,

அதை முழுவதுமாக உள்வாங்கி செய்தால்,

 

அதில் இருந்து விடுபட்டு அடுத்த நிலைக்கு பயணிக்கலாம்,

 

ஆனால்

நாமோ என்ன செய்கிறோம் ??

 

செய்வதில் கவனத்தை விட அது பிறர் கவனத்தை எப்படி ஈர்க்கிறது என்றே கவனிக்கிறோம்,

அந்த செயலுக்கு எப்படி பிறரிடம் அங்கீகாரம் பெறலாம் ??

அதை திறம்பட செய்வதுபோல எப்படி நடிக்கலாம் ?? என்றே

நம் செயலின் தன்மை இருப்பதால் அதில் மேன்மை என்பது பிறரின் அங்கீகாரத்தில் தான் இருக்கே தவிர !!

 

நீங்கள் அதை அனுபவித்து செய்து கடப்பதில் இல்லை !!

 

ஆதலால் தான்

அதையே திருப்பி திருப்பி செய்து அதிலேயே நிலைகொண்டு விடுகிறோம் !!

 

அதில் பரிபூரணத்துவம் அடைந்து கடக்கவே வந்திருக்கிறோம் என்பதை மறந்தே போய்விடுகிறோம் தானே ..

 

மேன்மை என்பது நீங்கள் பூரணமாய் அனுபவித்து,

அதில் இருந்து விடுபடுவது தானே ..

 

அதை தான் கர்மயோகம் என்று சொல்லபடுகிறது செய்யும் கர்மமே காண்ணாய் இருந்து,

அதை முழுமையாக செய்து,

அதன்வழியே அதனிடம் இருந்து விடுபட்டு மேன்மை நிலைக்கு பயணிப்பது,

 

வேண்டாம் என்று,

சொல்பவர்களை,

விடாப்பிடியாக,

நினைத்து கொண்டு,

வேண்டும் என்று,

சொல்பவர்களை,

வேண்டாம் என்று,

வெறுத்து ஒதுக்கும்,

இவ்வாழ்க்கையும்,

எனக்கொரு,

புரியாதபுதிர் தான்..🤔

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Teachings of Sri Ramakrishna Paramahamsa - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்